இலக்கியப் பெருவெள்ளத்தில் விடுபடும் சில துளிகள்.






நாம் சும்மா இருந்தாலும் நம்ம குழப்பம் சும்மா இருக்காது. பரந்து விரிந்து உலகை பரிபாலனம் செய்யும் தமிழ் இலக்கிய உலகின் எலியிலும் எலியான இந்த அற்ப பிறவி தெரியாமல் இன்று பிற்பகல் கல்குதிரையை எடுத்து வாசிக்கத் துவங்கியது. என் தகுதிக்கு கல்கண்டோ அல்லது டைம் பாஸோ நான் வாசித்திருக்க வேண்டும், ஒருவித ஆர்வத்தில் கல்குதிரையை எடுத்து வாசித்தேன். அங்குதான் துவங்கியது குழப்பங்கள்.
குழப்பம் – 1
பா.வெங்கடேசன், இசை, கோணங்கி இவர்களும் எழுதி இருக்கும் கட்டுரை மார்ச் 2012 ல் நானும் ஆதிரனும் சேர்ந்து நடத்திய புனைவு கூட்டத்திற்காக எழுதப்பட்டவை இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளன. நல்ல விசயம் தான், ஆனால் அந்த நிகழ்வுக்காக எழுதப்பட்ட கட்டுரை எனக் குறிப்பிடப்பட்டிருக்கலாமே என்பதுதான் எனது எளிய சந்தேகமாய் இருந்தது. நண்பன் இசைக்கு ஒரு குறுஞ் செய்தி அனுப்பிக் கேட்டேன். இது விடுபடல் தான் நண்பா, சதி இல்லை என்று அனுப்பினான்… அரை மனதாகவேனும் திருப்தியாகிக் கொண்டு எழுத்தாளர் பா.வெங்கடேசன் அவர்களுக்கு குறுஞ் செய்தி அனுப்பினேன்… அவர் முதலில் அளித்த பதில் வருமாறு …. “ohhhh…yes, naan adhai seithirukka vendum… very sorry kumar, really thondravillai….” பிறகு நான் இதற்கு ஒரு பதில் அனுப்பினேன். “hmmm.its k yennai pol ilaingarkal seyyum yethaiyum yengum kurippida vendiya kattaayam oru pothum ilakkiya ulakukku illai. Konangiyumey kooda athai than seithirukkiraar…”
இதற்கு பா.வெ அனுப்பிய பதில் “ thavarai thiruthikkolla vazhi irunthaal naan eppodhum thayaar… sorry. But recognition patriya ungal stmt kavalai alikkirathu. Kumar, intha vayathil ungalukku kidaiththirukkum reconl paadhi kooda enakku ingey kidaiyaathu… comedy pannatheerkal…”
இதில் கடைசி சில வரிகள்தான் இதுவரையிலுமான பா.வெவுடனான மொத்த உரையாடலையும் இப்பொழுது சந்தேகம் கொள்ள வைத்திருக்கிறது. ஒருத்தன் கடன உடன வாங்கி குண்டி வலிக்க கூட்டம் நடத்தினா அதில வாசிச்ச கட்டுரைய குறிப்பிட்டிருக்கலாமேன்னு கேட்டா முடியாதுடா வெங்காயம்னு சொல்லி இருந்தா கூட பேசாம சந்தோசம் சாமின்னுட்டு போயிருப்பேன். உனக்குக் கிடைச்சிருக்கற அங்கீகாரத்துல பாதி கூட கிடைக்கலைன்னும் சும்மா காமெடி பன்றேன்னும் சொன்னா என்ன தான் செய்யலாம்… எனக்கு என்ன இங்க அங்கீகாரம் இங்க இருக்குன்னு சாமி சத்தியமா தெரியல… பா.வெங்கடேசன் உட்பட அவர் தொடர்பான ஆட்கள் யார் வேனும்னாலும் இதுக்கு விளக்கம் குடுக்கலாம்… நான்  மேல் நிலைச் சாதியிலிருந்து எழுத வந்தவனோ அல்லது மாதம் 40,000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு பகுதி நேரமாக எழுத வந்தவனோ அல்ல. மேலும் எனது நாவலை எழுதி முடித்து விட்டு முன்பணம் வாங்கிக் கொண்டு புத்தகம் கொண்டு வந்தவன் அல்ல. எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் எழுத வேண்டுமென விருப்பத்தோடு வந்தவன் தான். உண்மையில் என் புத்தகங்களுக்கு எங்கும் இதுவரை கூட்டம் நடத்தப்பட்டதில்லை. என் நூல்களுக்கு விமர்சனம் எழுதப்பட்டதில்லை. ( பா. வெங்கடேசனின் நாவலுக்கு எழுதப்பட்ட விமர்சனங்களை தனியாக நூலாகக் கொண்டு வரும் அளவுக்கு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதையும் குறிப்பிடுகிறேன்…)
இதில் எங்கிருந்து எனக்கு அங்கீகாரம் வந்ததாக அவர் கண்டுபிடித்திருக்கிறார்.
சரி, இது ஒரு புறம் இருக்கட்டும்
இப்பொழுது குழப்பம் – 3
சில மாதங்களுக்கு முன்பு எனது நாவலை வாசித்த லஷ்மி மணிவண்ணன் ஒரு அதிகாலையில் அந்த நாவல் குறித்து ஒரு 25 நிமிடங்கள் விரிவாக அலைபேசியில் பேசினார். நாகர்கோவில் வரச் சொன்னார். எனக்கு அளப்பரிய மகிழ்ச்சி. அவரே கல்குதிரையில் விமர்சனம் எழுதுவதாகவும் சொன்னார். அதிலும் சந்தோசம். ஆனால் என்ன நினைத்தாரோ அவருக்கு அடுத்த ஒரு மாதத்தில் அந்த நாவல் பிடிக்காமல் போய்விட்டது. அவர் எழுதவில்லை என்பதை என்னிடம் கூட சொல்லவில்லை. கோணங்கியிடம் சொல்லி இருக்கிறார். சரி என்று நான் யவனிகாவிடம் கேட்டேன். நாவல் வெளியான அந்த வாரத்திலேயே ஒரு பிரதி யவனிகாவுக்கு குடுத்திருந்தேன். மேலும் எனது முதல் தொகுப்பு வந்த காலகட்டத்திலிருந்தே எனக்கு ஒரு விமர்சனம் எழுதுவதாக அவர் சொல்லியிருந்தார்… நீண்ட கால நட்பு ??????/ என்ற அடிப்படையில் விமர்சனம் எழுதச் சொல்லிக் கேட்க அவரும் ஒப்புக் கொண்டார்…. நானும் நினைவுபடுத்தும் போதெல்லாம். படித்துவிட்டேன், எழுதப்போகிறேன் என உற்சாகமாக சொல்லி வந்தார். நானும் நம்பிக்கையோடு இருந்தேன்… பிறகு அவருக்கும் இன்னொரு புறம் எனக்கும் சொந்த வேலைகள் இருந்ததால் அது பற்றி பேச முடியவில்லை. பின்பு அவரும் எழுதவில்லை என்று கேள்விப்பட்டு சரி அவகாசம் இல்லாமல் இருந்திருக்கும் என விட்டுவிட்டேன். ஆனால் கல்குதிரையில் இரண்டு நூல்களுக்கு எழுதியிருக்கிறார். எனக்கு இதுவும் புரியவில்லை. உண்மையில் இவர்கள் எல்லோரும் புறக்கணிக்கிற அளவிற்கு நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் எனத் தெரியவில்லை. ஒருவேளை எனது எழுத்தின் தரம் குறித்து சந்தேகங்கள் இருந்திருந்தால் எழுத முடியாது அல்லது குறிப்பிட முடியாது என்று சொல்லி இருக்கலாம்.. நான் ஓசியாக புத்தகம் குடுப்பதாவது மிஞ்சும்… ஆயிரம் பக்கங்களுக்கு எழுதினால் தான் அது நாவலா? அதற்குத்தான் அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டுமா? இப்படி பல குழப்பங்கள் இருக்கின்றன.
எல்லாவற்றுக்கும் மேல் எழுத்தாளனாய் இருப்பதற்கு ‘சில சிறப்புத் தகுதிகள்’ தேவையாய் இருக்கின்றன என்பதை இன்னொரு முறை உணர வைத்ததற்கு நன்றிகள் நண்பர்களே…  

Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

நொண்டிக் கருப்பு

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....