Posts

Showing posts from 2015

நானும் உயிரெழுத்தும்.

Image
சிற்றிதழ்களின் வழி எழுத்தை அறிந்து கொள்வது பதின் பருவத்தில் அலாதியான மயக்கம். எல்லாவற்றையும் கேள்வி கேட்கவும் மறுதலிக்கவுமான அபரிமித துணிச்சல்கள் வாசிப்புத் தரும் இரவலாய் ஒரு வாசகனுக்குள் இறங்கிவிடுகிறது. அப்படியாகத்தான் நான் எழுதத் துவங்கிய நாட்களில் உயிரெழுத்தும் எனக்கு அறிமுகமானது. உயிரெழுத்தின் முதல் இதழ் வெளியான ஒரு சில மாதங்களுக்கு முன்பாகத்தான் நான் லஷ்மி சரவணகுமார் ஆகியிருந்தேன். அதற்கு முன்பு வேறு வேறு பெயர்களில் இலக்கிய களமாடிய வரலாறு அத்தனை சுவாரஸ்யமில்லை. லஷ்மி சரவணகுமாரின் மூன்று சிறுகதைகள் பிரசுரமானதின் வழி எழுத்தாளராக தனக்குத் தானே அறியப்பட்டுக் கொண்டிருந்தார். அல்லது ஏற்கனவே அவரைத் தெரிந்த சிலருக்கு தெரிந்ததொரு கூடுதல் விசயமாய் அந்த சங்கதிகள் இருந்திருக்கக் கூடும். வாழ்வின் யதார்த்தம் ஆசைக்கு எழுதிய வரை போதுமென பின்னிழுக்க, விடாது மனம் தளரா வேட்கையுடன் எழுதிக் குவித்த நாட்களவை. உயிரெழுத்தின் முதல் இதழில் சிறுகதைகளுக்கு சிறப்பான கவனம் கொடுக்கப்பட்டதில் உற்சாகம் பிறந்தது. ‘ஆஹா இது நமக்கென இதழ். அந்த களிப்பு எழுதிக் கொண்டிருந்த கதைகளிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்து வேகம
Image
” நவீன மனிதன் என்பவன் தன்னைக் கண்டுபிடிக்க முயல்பவன், நவீனத்துவம் அவனை அவனது இருத்தலில் இருந்து விடுதலை செய்யவில்லை.” -     மிஷெல் ஃபூக்கோ. மிகப் பழக்கப்பட்ட ஒரு மொழியில் சொல்லப்பட்ட கதைகளிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு கதை சொன்னவர்கள் தமிழில் இதற்கு முன்னும் நிறையபேர் இருக்கவே செய்கிறார்கள். தொண்ணூறுகளில் பின் நவீனச்சிறுகதைகள் மாஜிக்கல் ரியலிஸத்தையும் தாண்டி வேறு வேறு கூறுகளுடன் இயங்க ஆரம்பித்தன . நேரற்ற எழுத்து , வகைமை தாண்டிய எழுத்து , பகடி செய்தல் , தரப்படுத்தப்பட்ட விழுமியங்களைக் கேள்விக்குள்ளாக்குதல் போன்ற பலவிதமான முயற்சிகள் எழுத்தில் மேற்கொள்ளப்பட்டன .  ஜெயமோகன் போன்றவர்கள் தங்கள் சிறுகதைகளில் வடிவப் பரிசோதனைகளை மேற்கொண்டார்கள் . ஆனால் இவர்களின் பிரதிகளில் தங்கள் காலத்தின் விழுமியங்கள் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை .  அந்தவகையில்   அவை வெறும்   மிகையுணர்ச்சிப் பிரதிகளாக   மட்டுமே நின்று விட்டன .   பகடி , நகைமுரண் , அங்கதம் ஆகிய கூறுகளின் மூலம் வாசகனின் சமநிலையைக் குலைக்கும் நவீன கதைகள் புதிய திறப்புகளையும் விவாதங்களையும் உருவ

துய்ப்பு எந்திரத்தின் ஒளிர்நீல விளக்கும் நறுமணத் தைலம் படர்ந்த வாசனைக் கத்திகளும் – நேசமித்ரன்

Image
க லைஞன் என்பவன் தான் சார்ந்த சமூக அமைப்பின் மேலும் ஒரு ஒத்திசைத்துகள்தான் என்றானால் அவனது மீச்சிறு உராய்வே அவனது படைப்புலகு. குற்றங்களுக்கான தகவுகளை பெருக்கிக் கொண்டே தண்டனைகளுக்கு நம்முடலை பழக்கும் பன்முனை அதிகாரமையங்கள்  நம்மை ’வளர்த்துப் பழக்கும் ’ (Taming ) வாழ்முறைக்கு எதிராய் எழும் ‘அவசியத்தீங்கே’ (Necessary evil) கலை ஆகிறது. ஆசிரியரின் இந்த தேர்ந்தெடுத்த கதைகள் எழுதப்பட்ட காலத்தை முன்னிருத்திப் பார்க்கையில் நுகர்ச்சியை கொண்டாடும் நுகர்ச்சியின் படிநிலைகளை ஆராதிக்கும் நுகர்ச்சியை அருவருக்கும் நுகர்ச்சியின் மீது உமிழும் கலையை எழுத நிர்பந்தப்பட்டவர்களாய் புத்தாயிரத்தின் எழுத்தாளர்கள்  புறப்பாடு அமைந்திருப்பதை உணர முடிகிறது.இங்கு முன் வைக்கப்படும் பிரதி சார்ந்த பார்வைகளை அறிபுலன்கள் கொண்டு நிகழ்த்தும் குறுக்கீடுகளாக வாசிக்கப்படுவதாக. இந்த பிரதி சொல்லும் கதைகள் அவ்விதமாகவும்/ அவ்வாறில்லாமல் மேம்பட்டும் திரிந்தும் தம்மை உங்கள் வாசிப்பிற்கேற்ப  நிகழ்த்திக் காட்டக்கூடும் வாழ்புலத்திலிருந்து தம்மைத் துண்டித்துக் கொள்ளும் வேட்கையுடைய கதைமாந்தர்களின் தேடல் மற்றும் பயணமே இத்தொக

ஒரு நாடோடி எழுத்தாளனான கதை.

Image
நண்பர்களே. எழுத்தாளன் எப்போதும் சுவாரஸ்யமானவன், சமயங்களில் எழுத்தை விடவும். விதிவிலக்குகள் உண்டு, ஆனால் தன்னிலையிலிருந்து பேசுவதால் இப்பொழுது விதிவிலக்குகள் குறித்து அக்கறை கொள்ளவில்லை. நிர்ப்பந்தப்படுத்தி ஒரு மனிதனை ஒருநாளும் இலக்கியத்தின் பக்கமாய் நகர்த்திவிட முடியாது, அடிப்படையில் கலை சுதந்திரத்தின் அடையாளமென்பதால் இந்த உரையை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம். எங்கிருந்து வேண்டுமானாலும் துவங்கி எங்கிருந்து வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமானதொரு பாடலை வாயில் முனுமுனுத்தபடி காதுகளை மட்டும் என் சொற்களுக்காக விட்டுவைப்பது கூட நல்லதொரு பரிசுதான். எதுவாயினும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த பதினைந்து நிமிடங்கள் இந்த அரங்கத்தில் என்னோடிருக்கும் எல்லோரையும் ஏதோவொரு வகையில் என் எழுத்திற்கு நியாயம் செய்தவர்களாய் நினைத்துக் கொள்கிறேன். எனக்குக் கவிதைகளைப் பிடிக்கும். அடிப்படையில் நானொரு புனைகதை எழுத்தாளனென்றாலும் கவிதையின் பால் கொண்ட விருப்பமென்பது அலாதியானது. பாரதியின் கவிதைகளையும், நெரூதாவின் கவிதைகளையும் கவிதை என்பதைத் தாண்டி பாடலாகப் பாட முடியும். ம