Posts

Showing posts from 2012

"உப்பு நாய்கள்" நாவல் குறித்து வாசகரின் பார்வை..

/ எனது நலம்விரும்பியும் நண்பருமான ஒருவர் லக்ஷ்மி சரவணகுமாரின் “உப்புநாய்கள்”பற்றிய எனது பதிவைப் படித்துவிட்டு விரிவாக எழுதும்படி கூறியதால் அந்நாவலைப் பற்றி விரிவாக எழுதும் முயற்சியே இப்பதிவு. முதலில் இந்நாவலின் கதையை ஒரே வரியில் கூறிவிடுகிறேன்.மூன்று வெவ்வேறு விதமான மனிதர்களுக்கும் சென்னை என்கிற இப்பெருநகரத்திற்குமான தொடர்பே இந்நாவலின் மூலம். என்னைப் பொறுத்தவரையில் ஒரு நாவல் என்பது சுவாரஸ்யமாகவோ நல்ல கதையம்சத்துடனோ இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை.ஆனால் அது ஏதேனும் ஒரு சமூகத்தின் வாழ்வியலைப் பிரதிபலிக்க வேண்டும்.அல்லது நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் மனிதர்களையே கதைமாந்தர்களாகக் கொண்டு அக்கதைமாந்தர்களுக்கான உளவியலைப் பற்றிப் பேசவேண்டும்.அந்தவகையில் உப்புநாய்கள் இந்த இரண்டிலுமே சிறந்து விளங்குகிறது.இப்போது இந்த நாவலில் ஆசிரியர் எத்தனை வகையான மனிதர்களையும் வாழ்வியல் கூறுகளையும் நமக்குக் காட்டியிருக்கிறார் என்று பார்ப்போம். வடசென்னையின் சேரிப்பகுதிகளில் வாழும் விளிம்புநிலை மனிதர்கள். சௌகார்பேட்டையில் பணத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு வாழும் மார்வாடிகள். கஞ்சா விற்கும் இளைஞர்கள்,அ

சமகாலத் தமிழ் சினிமா…. சில முக்கியக் கேள்விகளும் அனாவசிய கேள்விகளும்…

சினிமாவை அதன் அழகியல் மற்றும் ஒழுங்குகளோடு அனுகும் தமிழர்கள் வெகு அரிதே. எனினும் தமிழனிடமிருந்து ஒருபோதும் சினிமாவைப் பிரித்து எடுத்து விட முடியாது. கடந்த 80 வருடங்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோவொருவிதமான சமூக முக்கியத்துவம் திரைப்படங்களுக்கு இருக்கவேச் செய்கின்றன. தமிழ் சினிமாவின் கோணல் மானலான விதிகள் அல்லது யதார்த்தங்களுக்கு மத்தியில் ஒவ்வொரு முறையும் ஒரு நல்ல திரைப்படத்தைக் கொடுப்பதென்பது நிஜமான கலைஞர்களுக்கு சவாலான விசயம்தான். சராசரி பார்வையாளனுக்கு தான் பார்க்கும் சினிமாவின் வியாபாரம் குறித்து எப்பொழுதும் பெரிய கவலைகள் இருக்கப்போவதில்லை. ஆனால் ஒரு படத்தின் கதையம்சம் குறித்தும் குறைந்தபட்சம் ஒரு படத்தில் அவனுக்கான தேவைகளும் வெவ்வேறாகவும் அனேகமாகவும் இருக்கின்றன. இந்த பத்து வருடங்களில் வெற்றி பெற்றிருக்கும் அல்லது வெகுஜன பார்வையாளர்களால் கொண்டாடப்பட்ட படங்களை கவனிக்கையில் தமிழ் சமூகத்தின் வினோதத்தன்மை புரியும். இங்கு காதல், அழகி, வெயில், அங்காடித்தெரு மாதிரியான படங்களும் நிற்கின்றன, இன்னொரு பக்கம் எந்திரன், சிவாஜி, அயன், கோ என முழுக்க மசால் தடவிய மீன்களும் விய

வசுந்தரா எனும் நீலப்பறவை…

ஊர்க்காகங்கள்   கொஞ்சம்   திசைமாறிப்   பறந்த   தினத்தின்   அதிகாலையில்தான்   இப்படியானதொரு கனவு   வந்திருந்தது   வசுந்தராவுக்கு .  கிழக்குத்   திசைநோக்கி   அப்பறவைகள்   பறந்ததற்கும்   வடகிழக்காக இவள்   முந்தின   இரவு   தலைவைத்து    உறங்கியதற்கும்   எந்தவிதமான   தொடர்புகளும் இருந்திருக்கப்போவதில்லை .  கனவுகளுக்கும்   உறக்கத்திற்கும்   சம்பந்தமில்லாததொரு   உறவிருப்பதைப் போலவேதான்   இதுவும் .   முன்பு   ஒருபோதும்   இல்லாதளவிற்கு   உற்சாகமும்   சந்தோசமும்   கொண்டவளாய் விழித்தவளின்   உடலில்   வலது   இடதாக   இறக்கைகள்   துளிர்விட்டிருப்பதாக   நினைத்துக்   கொண்டாள் . காற்றைவிடவும்  ; லேசனாதாயிருந்தது   உடல் .  பிரபஞ்சத்தின்   மொழி   பிடிபட்டதைப்போல்   ஒவ்வொன்றையும் நிதானமாகப்   பார்த்தவளை   அம்மாவும்   சகோதரியும்   புதியவளாய்ப்   பார்த்தார்கள் .  இந்த   மாற்றம் அச்சப்படும்படியில்லாததால்   இவளுக்கிருந்த   உற்சாகம்   அவர்களுக்கும்   வந்துவிட்டிருந்தது .  புத்தகப் பையோடு   பள்ளிக்கூடம்   கிளம்பியவளை   இறுக்கியணைத்து   அம்மா   நெற்றியில்   முத்தமிட்டால் .  வாழ்வில் ஒரேயொருமுறை   மட்டுமே   கிடை

முடிவற்ற பிரார்த்தனைகள்.

முன்னைமாதிரி இல்லை. அம்மாவுக்கு இப்பொழுது வேதக்கோயில் போக கொஞ்சமும் விருப்பமில்லாமல் போனது. வண்டி வந்து நின்று எல்லோரையும் இரண்டு பெண்கள் வந்து கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த வீதி முழுக்க பெண்களோடு சேர்ந்து ஆண்களும் வேதக்கோயிலுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அப்படி என்னதான் இருக்கிறதோ? அம்மாவும் வாரந்தவறாமல் போய்க்கொண்டிருந்தவள்தான், இப்பொழுது அவளுக்கு அதில் விருப்பமோ அக்கறையோ இல்லாமல் போயிருக்கிறது. சாச்சியாபுரத்தைச் சுற்றி அனேகமாய் கிறிஸ்தவ வேதக்கோயில்கள் வந்துவிட்டிருக்கின்றன. சனிக்கிழமை பிரிண்டிங் ஆபீஸ்களில் டே நைட் என ஷிஃப்ட் பார்த்துவிட்டு வந்திருக்கும் ஆட்களும்கூட சலிக்காமல் கிளம்பிப் போகிறார்களென்றால் ஆச்சர்யந்தான். முன்னெல்லாம் மார்கழி மாசம் மாரியம்மன் கோயிலுக்குப்போகவும் பங்குனிப் பொங்கலுக்கும் தான் இவ்வளவு பேர் ஆர்வமாய்ப் போவார்கள். என்ன மாயமோ இப்பொழுது சனம் வேதக்கோயில் பக்கமாய் படையெடுத்தனர். ”பரமண்டலத்திலிருக்கும் எங்கள் பரமபிதாவே….” என பாதிரியின் அதிக சத்தமில்லாத குரலில் பிரசங்கம் கேட்கவே ஒரு கூட்டம் போகும். ஒன்றுமில்லையென்றாலும் வாய் பார்க்கிற ஆர்வம். குருட

ஜோக்கர்…(ஆனந்த விகடனில் வெளியான கதை..)

அடுத்த ஷோ துவங்க இன்னும் பத்து நிமிடம்தான் இருக்கிறது, ஜோக்கருக்கு பதட்டம் குறைந்திருக்கவில்லை. இன்னொரு பீடியை எடுத்துக் குடித்தான்… புகை கூடவே கொஞ்சம் இருமலையும் சேர்த்துக் கொண்டு வந்தது. இந்த ஊருக்கு வந்து டெண்ட் அடித்து பதினாறு நாட்கள் ஆகிப்போனது, வீட்டுக்கு இன்னும் பைசா அனுப்பவில்லை. முன்னெல்லாம் வீட்டை விட்டு கிளம்பி வந்துவிட்டால் திரும்பிப் போகும்வரை என்ன நடந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. ரெண்டு மாசமோ, மூணு மாசமோ? எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.  இப்பொழுது ஐஞ்சு ரூவாய்க்கும் பத்து ரூவாய்க்கும் செல்ஃபோனைக் குடுத்துவிட்டார்கள். இதனால் யாருக்குத் தொல்லையோ இல்லையோ ஜோக்கர் அநியாயத்திற்குத் திண்டாடினான். தினம் நூறு வாட்டியாவது போஃன் பன்னி பேசாவிட்டால் அவன் பொண்டாட்டிக்குத் தூக்கம் வராது, “என்னய்யா செய்ற?  சாப்பிட்டியா?...” மத்தியானம் ரெண்டு மணிக்கு கூப்பிட்டாலும் இப்படித்தான் துவங்குவள் ராத்திரி பதினோறு மணிக்குத் கூப்பிட்டாலும் இப்படித்தான் துவக்குவாள். சில சமயம் ஷோவில் இருக்கும் போது தெரியாத்தனமாக பேண்ட்டிற்குள் போனை வைத்திருப்பான். பல்டியடிக்கிற நேரமாக போஃனடிக்கும் உடனே எடுக

ப. சிவகாமியின் – பயனற்ற கண்ணீர்….

நான் போன நூற்றாண்டில் கவிஞனாய் இருந்த போது கவிதை குறித்த சில அபிப்பிராயங்கள் இருந்தன. அதனை அபிப்பிராயங்கள் என்று திட்டவட்டமய் சொல்ல முடியாவிட்டாலும் அந்த எளிய புரிதல்தான் கவிதை எழுதுவது ஒரு சாகசம் என்பதை உணரவைத்து அத்ற்காக கடுமையாக உழைக்கும் திராணியற்று புனைவிலக்கியத்தின் பக்கமாய் என்னைத் திரும்பச் செய்தது. எனது தாத்தாவிற்கு தாத்தா ஒரு கதை சொல்லி எனது தாத்தா அதிலிருந்து விடுபட்டு என்ன காரணத்தினாலோ ஒரு மேடை நாடக நடிகரானார். தாத்தாவி9ன் தாத்தாவிடம் இருந்த காப்பிய மனநிலை அவரோடு போயிருக்க வேண்டும் என் தாத்தா ஒரு நடிகனாக இருப்பதை மட்டுமே விரும்பியிருந்தார். எனக்கு சின்ன வயதில் வீட்டில் தாத்தா குடிக்க பணமில்லாமல் சில பழைய இசைக் கருவிகளை ஊருக்குப் பக்கத்தில் இருந்த சாப்டூர் ஜமீனிடம் விற்றது நினைவிருக்கிறது. அவற்றின் பெயர்கூட தெரிந்திருக்காத எனக்கு அந்த இசையைப் பற்றி சத்தியமாக ஒன்றும் தெரியாது. நான் பார்த்தே இராத அந்த தாத்தாவின் தாத்தாவைப் பற்றிக் கேள்விப்பட்ட பிற்பாடுதான் இயல்பாகவே கதை சொல்லுதலின் மீது ஒரு ஆர்வம் வந்தது. இப்படியான வரலாற்று ஆதாரத்துடனான ஒரு காரணத்தைச் சொல்