Posts

Showing posts from January, 2013

நாவலில் ஒரு பகுதி .....

Image
6 .  சாம்பல் இரவின் தேவதைகள்….                 “ ஒரு மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பதை விடவும் இச்சமூகத்திற்கு அவன் சொல்வதற்கென செய்திகளொன்றும் இல்லை .” சம்பத் தனது வாழ்வின் மூலமாய் எந்த செய்தியையும் உலகிற்கு சொல்ல விரும்பவில்லை. அவனிடம் பணம் சேரத்துவங்கிய தினத்தில் அவனுக்கான செய்தி உலகத்திடமிருந்து எல்லா வகையிலும் வந்து கொண்டிருந்தது. அம்மா தேடி வந்தாள். அவளிடம் தற்காலிகமாய் பாசமிருந்தது. ஆர்மீனியன் சர்ச் இளைஞர்களைப் பற்றி அந்தப் பகுதியிலிருக்கும் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அவர்கள் அச்சத்துடன் முன்பு பார்த்தது போய் அவர்களைச் சுற்றி ஒரு அதிகார வட்டம் உருவாகிக் கொண்டிருப்பதை கவனித்தபடியிருந்தனர். அந்த வருடத்தின் மழைக்காலம் முடியும் போது பாஸ்கர் அந்தப் பகுதியில் பெயர் சொல்லும்படி ஒரு ஆளாகிவிட்டான். அவனுக்கு போட்டியாய் இருந்தது சுந்தர் மட்டும்தான். இருவரில் யாருக்கு ஆட்கள் அதிகம் என்பதிலிருந்து எல்லாவற்றிலும் போட்டி வந்தது. ஆனாலும் அவர்களில் யாரும் இன்னொருவனை ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை. சுந்தருக்கு பாக்ஸிங் இல்லாமல் பந்தய புறா வளர்ப்பதும் பிடிக்கும். அவனை எந்தப் பந

இலக்கியப் பெருவெள்ளத்தில் விடுபடும் சில துளிகள்.

நாம் சும்மா இருந்தாலும் நம்ம குழப்பம் சும்மா இருக்காது. பரந்து விரிந்து உலகை பரிபாலனம் செய்யும் தமிழ் இலக்கிய உலகின் எலியிலும் எலியான இந்த அற்ப பிறவி தெரியாமல் இன்று பிற்பகல் கல்குதிரையை எடுத்து வாசிக்கத் துவங்கியது. என் தகுதிக்கு கல்கண்டோ அல்லது டைம் பாஸோ நான் வாசித்திருக்க வேண்டும், ஒருவித ஆர்வத்தில் கல்குதிரையை எடுத்து வாசித்தேன். அங்குதான் துவங்கியது குழப்பங்கள். குழப்பம் – 1 பா.வெங்கடேசன், இசை, கோணங்கி இவர்களும் எழுதி இருக்கும் கட்டுரை மார்ச் 2012 ல் நானும் ஆதிரனும் சேர்ந்து நடத்திய புனைவு கூட்டத்திற்காக எழுதப்பட்டவை இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளன. நல்ல விசயம் தான், ஆனால் அந்த நிகழ்வுக்காக எழுதப்பட்ட கட்டுரை எனக் குறிப்பிடப்பட்டிருக்கலாமே என்பதுதான் எனது எளிய சந்தேகமாய் இருந்தது. நண்பன் இசைக்கு ஒரு குறுஞ் செய்தி அனுப்பிக் கேட்டேன். இது விடுபடல் தான் நண்பா, சதி இல்லை என்று அனுப்பினான்… அரை மனதாகவேனும் திருப்தியாகிக் கொண்டு எழுத்தாளர் பா.வெங்கடேசன் அவர்களுக்கு குறுஞ் செய்தி அனுப்பினேன்… அவர் முதலில் அளித்த பதில் வருமாறு …. “ohhhh…yes, naan adhai seithirukka vendum… very s

மண்ட்டோ , நர்கீஸ் மற்றும் சில பெண்களும் அவர்களைத் துரத்தும் நானும்... “

எனக்குத் தெரிந்த மட்டில் அவன் யாருடைய சிந்தனைகளாலும் எப்பொழுதும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த உலகததை விளக்க முயற்சிப்பவர்கள் எல்லோரையும் முட்டாள்களென்றே கருதினான். இந்த உலகத்தை ஒருவனால் மற்றவனுக்கு விளக்க முடியாது. ஒருவன் தானாக அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.”       - ‘மண்ட்டோவைப்  பற்றி மண்ட்டோவே எழுதியதொரு சொற்சித்திரத்திலிருந்து..’         பம்பாயின் அழுக்கும் இருளும் நிரம்பியதொரு தெருவிலிருந்து கிளம்பி கொஞ்சம் கதைகளடங்கிய காகிதக் கட்டுகளுடன் பழைய ரயில் பெட்டியொன்றில் பயணிக்கும் மண்ட்டோ உடன் தனது தோழிகள் சிலரை அழைத்துக் கொண்டு செல்கிறார். கதைக்கார்ர்களுக்கு மட்டுமேயான அந்த பிரத்யேக பெட்டியில் எல்லா ஊரிலும் சிலர் ஏறிக்கொள்வதும் அவருடன் மதுவருந்தி சண்டையிட்டு முடியாமல் பாதி வழியில் இறங்கிக் கொள்வதும் வெகு இயல்பாய் நடக்கிறது. எல்லாக் காலங்களிலும் இப்படி சிலர் ஏறிக்கொள்வதும் அவர் கதைகளில் வரும் பெண்களின் மீது காதல் கொண்டு பேசப்போய் சண்டை போட்டுக் கொண்டு வருவதும் நடந்து கொண்டேயிருக்க இரண்டாயிரத்து ஒன்றாமாண்டு ஒரு வெயில் காலத்தின் வியாழக்கிழமையில் துரதிர்ஸ்டவசமாய் நானும் ஏறிக்கொள்

மிகத் தாமதமானதொரு கடிதம் அல்லது எப்பொழுதோ எழுத சேகரித்திருந்த ஓர் கடிதம்....

ப்ரியமுள்ள ரம்யாவிற்கு .... இந்த ப்ரியமென்கிற வார்த்தை என்னை இப்பொழுது சில வருடங்களுக்குப் பிந்தையதொரு நிமிடத்திற்கு கொண்டுபோகிறது . எந்தவிதமான நேசத்திற்கான வார்த்தைகளையும் நீயோ அல்லது நானோ நேரிடையாக ஒருபொழுதும் பகிர்ந்து கொண்டதில்லை . என்றாலும் ப்ரியமுள்ள என்கிற வார்த்தை இந்நொடி என்னை உனக்கு மிக நெருக்கமானவனாக உணரச்செய்வதில் சந்தோசப்படுகிறேன் .  ஒவ்வொருமுறையும் உன்னிடம் பகிர்ந்திருக்க வேண்டிய வார்த்தைகளென்று கொஞ்சம் எப்பொழுதும் எஞ்சி நிற்கும் . சம்பந்தமேயில்லாமல் ரயில் பயண இரவுகளிலும் , திரையரங்குகளில் டிக்கெட் எடுப்பதற்கான வரிசையில் காத்திருக்கையிலும் வந்து தொலைக்கும் அந்த சொற்கள் உனக்கென்று எழுத நினைக்கிற சமயங்களில் ஒருபொழுதும் அவ்வளவு எளிதில் வந்துவிடுவதில்லை . சில நாட்களுக்கு முன் தஞ்சை வந்திருந்தேன் ரம்யா . முன்பு நீ பார்த்த அந்த அழுக்கு சட்டை சரவணனாக அல்ல ... கொஞ்சம் புதிதாக , அல்லது சிரமப்பட்டு கொஞ்சம் ஒப்பனைகளுடன் . ஒவ்வொரு முறையும் தஞ்சை வருகிற பொழுது ஏதோ உலகின் இன்னொரு துருவத்த