Posts

Showing posts from March, 2013

பட்டு - ஆழ் குளத்தில் நீந்தும் வார்த்தை மீன்கள்.

மிக அற்புதமான இரவு இது ... அலெசாண்டோ பாரிக்கோவின் ‘பட்டு’ நாவலை வாசித்தேன்... வெறும் ஒன்றரை மணி நேரத்திற்குள் படித்து முடித்துவிட்டாலும் அந்த நாவல் ஏற்படுத்தியிருக்கும் மனக்கிளர்ச்சி அபாரமானதாய் இருக்கிறது. வாசிப்பவனின் மனதிற்குள் மிக ஆழமாக பயணிக்கும் சொற்கள் ... ஒரு மிக இனிய இசையைக் கோர்வையைக் கேட்டபடி தொலைவில் எங்கோ இருக்கும் காதலியை அணைத்துக் கொள்வது போன்ற மனநிலை ... தனிமனிதனின் மென்னுணர்வுகளைலாவகமாக சுழலுக்குள்ளாக்கி மீண்டும் மீண்டும் வார்த்தைகளை விழுங்க வைக்கிறது நாவல்...
மிக அற்புதமான மொழிபெயர்ப்பு .... இப்படியொரு நாவலை மொழிபெயர்த்துக் கொடுத்ததற்காக நன்றி சுகுமாரன்...
( ஆயிரம் பக்கம் எழுதினால் தான் நாவல் என பிடிவாதமாக மொக்கை போடும் என் சக நாவலாசிரிய செல்லக்க்குட்டிகளுக்கெல்லாம் ஆளுக்கொரு பிரதி வாங்கி அனுப்பி வைக்க ஆசையாய் இருக்கிறது... )
இந்த நாவலில் திடீர்த் திருப்பங்களோ, அதிர்ச்சியூட்டும் சம்பவங்களோ, உலகையே புரட்டிப்போடும் வரலாறோ ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு ஜென் துஇறவி அமைதியாக இவ்வுலகைக் கண்டு புன்னகைக்கும் ஒரு அசாத்தியமான எளிமையும் கவித்துவமும் இருக்கிறது. இருப்பதிலேயே மிகச் சிறந்…

ஒரு பழைய கட்டுரை ....

Image
முடிந்து போனவற்றைப் பற்றின குறிப்புகளும்
      எதிர்காலம் பற்றின கேள்விகளும்.....
                     லக்‌ஷ்மி சரவணக்குமார்.
”தங்களுடைய வளர்ச்சிக்காக சில அரசியல்வாதிகள் குற்றவாளிகளை உருவாக்குகிறார்கள்.வளர்ந்தவுடன் தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி என்கவுண்ட்டர் செய்து விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை ரவுடிகள் என்பவர்கள் ஒரு ’யூஸ் அண்ட் த்ரோ’ பொருள்.”   இப்படியான வரிகளை சமீபமாய் நான் படிக்க நேர்ந்தது முன்பு ரவுடியாக இருந்து சிறை சென்று திருந்தி தற்சமயம் பத்திரிக்கையாளராகவும் மனித உரிமை ஆர்வலராகவும் இருக்கும் ஜோதி நரசிம்மனின் புத்தகமான “அடியாளில்” இருந்துதான். எழுதப்போவது அவரைப் பற்றியோ அல்லது அந்தப் புத்தகம் குறித்தோ அல்ல, சிறையிலிருக்கும் கைதிகள் பற்றியும் நன்னடத்தையின் காரணமாக அல்லது தண்டனை முடிந்து வெளியேறுபவர்களைப் பற்றியும்தான். மோசமானதானதில்லை, இந்திய சிறைகளைப் பற்றின பிம்பங்கள் ஒன்றும் அவ்வளவு துயரமானதில்லை உலகின் போர் மிகுந்த தேசங்களிலுள்ள சிறைகளுடன் ஒப்பிடுகையில். என்றாலும் இத்தேசத்தின் கேவலமான பொதுசனப் புத்தியிலிருந்து கவனிக்கையில் இவர்களின் துயரக்கதைகள் அவ்வளவும் பொருளாதார…

ஒரு பழைய கதை...

ஆரஞ்ச்…      இப்படியானதொரு வேலையாயிருக்குமென தெரிந்திருந்தால் மணி கொஞ்சம் யோசித்துத்தான் வந்திருப்பான். சினிமா சூட்டிங் என்றதும் ஆசையில் அத்தனை உருப்படிகளையும் அள்ளிப் போட்டுக்கொண்டு ஓடிவந்தது எத்தனை தப்பாய் போனதென இப்பொழுதுதான் புரிந்தது அவனுக்கு. எடுத்ததையே எத்தனைமுறைதான் எடுப்பார்கள். உருப்படிகள் அவ்வளவும் வெயிலுக்கு வெறியேறிப் போய்க் கிடந்தன. வழக்கத்தை விட அதிகமான சீற்றம். எல்லாத்தையும் பெட்டிக்குள் வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது. போதாக்குறைக்கு மகனையும் கூட்டி வந்து அவனும் பாவம் உருப்படிகளையும் மேய்க்க முடியாமல், வெயிலில் நிற்கவும் முடியாமல் நெளிந்து கொண்டிருந்தான். பத்து வயதுதான் ஆகிறது. ஆனாலும் சுருத்தான பயல், தனக்குப் பிறகு உருப்படிகளைப் பார்த்துக் கொள்ள ஒருவன் இருக்கிறானென அவனைப் பார்த்து நம்பிக்கையாகவும் சந்தோசமாகவும் இருக்கும் மணிக்கு. கடைசியாய் ஆறு மாதத்திற்கு முந்தி வந்த ’ஆரஞ்ச்சோடு’ சேர்த்தால் மணியிடம் பதிமூன்று உருப்படிகள் தேறும். இன்னைக்குத் தேதியில் பாம்பு வித்தை காட்டும் யாரிடமும் இத்தனை உருப்படிகள் இல்லை. பாம்புகளை உருப்படிகள் என்று சொல்லக்கூடாதென்றுதான் …