Posts

Showing posts from October, 2011

முத்துப்பிள்ளை கிணறு…

கோடை ஒரு வற்றா ஆறென அந்த வருடத்தின் பிற்பகுதி முழுக்க கரிசல் நிலம் முழுக்க விரிந்து கிடந்தது. வெயிலடித்துச் செத்துப்ப்போன ஆடுகள் தோலுரிக்கப்பட்டு இறைச்சிகளாய் உப்புக்கண்டம் போடப்பட்டு தெருவில் எலக்ட்ரிக் போஸ்ட் மரங்களில் தொங்கிக் கொண்டிருந்தன. எல்லாவற்றிலும் வெயிலின் வாசனை. பாய்கடை ஆட்டுக்கால் சூப் இப்பொழுதெல்லாம் சுவையற்று நீர்த்துப் போயிருக்கிறது. தனித்துவமான காரணங்களெதுவுமில்ல, முன்பு ஆடுகள் உயிரோடு அறுக்கப்பட்டன, இப்பொழுது இறந்து பல மணிநேரங்களுக்குப் பிறகு அறுக்கப்படுகின்றன. அப்படியும்கூட ஊர்களில் பாதி வீடுகளுக்குமேல் சோளமும், கம்பும் தீர்ந்து போய் சனம் கீக்காட்டுக்கு நாத்து நடப்போக நேரம் பாத்துக் கொண்டிருந்தது. அடுத்த மழைக்காலம் வந்து வெதச்சு அறுக்க நாளிருக்கு நிறைய. பிள்ளைகள் எப்படி பசி தாங்கும்? சோளம் கசக்கி வாய் நெறய மெல்லும் சின்னப்பிள்ளைகள் இப்பொழுது வெறும் வாயை மென்றுகொண்டிருக்கின்றன. சம்சாரி வீடுகளில் குதிர்கள் தீர்ந்து மஞ்சள் பைகளிலும், துணிப்பைகளிலும்சேகரித்து கொஞ்ச நஞ்ச தான்யங்களில் பொழுதோடிக்கொண்டிருந்தது.


        மாயாண்டிப் பெருசு செத்தாலும் செத்தது ஆதக்காளுக்கு வைத்தி…

முதல் தகவல் அறிக்கை...

க/எ 108/ 66 நாதமுனி தெருவில் வசித்து வந்த (லேட்) பெரியமாயத் தேவரின் மனைவியான திருமதி.ஒச்சம்மாள் ( வயது 76 ) கடந்த 14.7.2008 அன்று அதே தெருவில் மேற்கண்ட இலக்கத்தில் இருக்கும் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் கேள்விப்பட்டு 15. 7. 2008 காலை ஆறு மணியளவில் தலமைக் காவலர்கள் அ.சுப்பிரமணி மற்றும் ரத்தினம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அப்பொழுதுதான் வீட்டுக் கதவை உடைத்து இறங்கி இருந்தார்கள். 
கிழவி நல்ல கருத்த தேகம், பல் இன்னும் வலுவாய் இருக்கிறது. செத்து நீண்ட நேரமாகியிருந்ததில் நாக்கு நீலமாகிவிட்டது.  இது விசயமாய் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் வழக்கு 15.7.2008 அன்று பதிவு செய்யப்பட்டது. மேலதிக கவனிப்பில் திருமங்கலம் நகர் அரசு மருத்துவர்கள் திரு . எஸ்.அழகன் மற்றும் திருமதி மணிமேகலை ஆகியோரின் பிரேத பரிசோதனை மற்றும் தீவிர விசாரணைக்குப் பிறகு ஒச்சம்மாள் அவர்களின் மரணம் குறித்த முதல் தகவல் அறிக்கைகள் பின்வருமாறு. ( பிரேத பரிசோதனை அறிக்கை தனியாக இணைக்கப்பட்டுள்ளது.) இதுவிசயமாய் உதவி காவல் ஆய்வாளர் திரு. கு.ரவீந்திரன் அவர்களின் மேற்பார…

அத்தை… (ஃபெமினா அக்டோபர் இதழில் வந்த கதை....)

அவர்களிருவரையும் சற்றுமுன்பாக இறக்கிவிட்ட பேருந்து சாத்தூர் ரோட்டில் புழுதி கிளப்பியபடி போய்க்கொண்டிருந்தது. பொசுங்கும் வெயிலில் செருப்பில்லாத கால்களோடு அந்த சுடுமணலில் நடப்பதற்கு யாருக்குத்தான் பொறுக்கும்?. என்றாலும் சாமி காரியமென்பதால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை, அழகருக்கு இரண்டு வயது இருக்கும்போது போட்டிருந்த நேர்த்திக்கடன். எட்டு வருசம் கழிந்து இப்பொழுது அவனுக்கும் பத்து வயதாகிவிட்டது. இப்பொழுதுதான் நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு வாய்த்திருக்கிறது அவன் அம்மாவிற்கு. ஒரு பொழுதிற்குள் போய்த் திரும்புகிற தூரத்தில்தான் இருக்கன்குடியும் செவல்பட்டியும். இருந்தாலும் நினைத்த மாத்திரத்தில் போய்த்திரும்பிட முடிகிறதா என்ன? வீட்டைப் பார்த்துக் கொள்வதற்கே அம்மாவிற்கு நேரம் சரியாயிருக்கும். குடை ரிப்பேருக்குப் போகிற அப்பா வருவதும் வாரத்திற்கு ஒருமுறைதான். பிறகு எங்கிருந்து இதற்கெல்லாம் நேரமிருக்கும். இன்று வந்ததுமேகூட ஏதோ அந்த இருக்கன்குடி மாரியம்மன் புண்ணியம்தான்.

எப்பொழுதும் போலவே இன்றைக்கும் அம்மா ரேசன் கடைச் சேலையைக் கட்டியபொழுது அழகருக்குக் கொஞ்சம் ஆத்திரமாகத்தான் இர…