Posts

Showing posts from September, 2011

தஞ்சை ப்ரகாஷும் மிஷன்தெரு ரம்யாவும்... (361 இதழில் வெளியாகியுள்ள சிறுகதை....)

      இந்தமுறை எப்படியும் நல்லதொரு அறையினை அமர்த்திக் கொள்ளவேண்டுமென்கிற எனது எதிர்பார்ப்பு அந்த அறையைத் திறந்த சில நொடிகளிலேயே தகர்ந்து போனது. எட்டு மணி நேரத்திற்கும் அதிகமான பயணக்களைப்பு இப்பொழுது இன்னும் அதிகமாகியிருந்தது. பல வருட தூசியப்பிய அவ்வறையில் போன நூற்றாண்டு மனிதன் எவனாவது கடைசியாய் தங்கிச் சென்றிருக்கக்கூடும். இன்னும் விலகாத ஒரு பெருநாற்றம் அறையில் நிறைந்து கிடக்க, இரண்டு மாடிகள் என்னோடு எதையும் கையிலெடுக்காமல் நடந்து வந்த ரூம்பாய் சில்லரை கேட்டு நின்றான். ரூம்பாயென்று சொல்லமுடியாத ஓல்டுபாய் அவன். அதிகமாகப் போனால் மூனேமுக்கால் அடி, அவன் உயரத்திற்கு சம்பந்தமேயில்லாமல் ஒரு பேண்ட்டும் அதனோடு சிரமத்துடன் ஒத்துப்போக முயற்சிக்கிற சட்டையுமாய் என்னை அதிகபட்ச எரிச்சலுக்குட்படுத்தும் எல்லா தகுதிகளுடனுமிருந்தான். அவனைச் சொல்லி குறையில்லை. பாதி உறக்கத்தில் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே இருக்கிறதென்கிற வேகத்தில் நான் வந்ததற்கும் வெளியிலிருந்து பார்க்க சுமாரான விடுதியாய்த் தெரிகிறதென நம்பிக்கொண்டதற்கும் அவனை எப்படி குறைசொல்ல முடியும்? பத்துரூபாய்க்குக் குறைத்து வாங்குவதில்லை என்கிற

கோடைகாலப் பெருமழை தினங்களின் நினைவுகள்...

(கோணங்கி, வெயில், நான் மற்றும் சில காலியான மது போத்தல்களின் அறை...)      பெருந் தவிப்பின் ஈரம் சுமந்தவனாய் எப்பொழுதும் நிராதரவாக சுற்றிக் கொண்டிருந்தவனின் அகமனம் எழுத்தின் மீதும், எழுத்தைச் சார்ந்த வாழ்வின் மீதும் நம்பிக்கையின்மையினை மட்டுமே கொண்டிருந்தது நெடுநாள் வரையிலும். சந்திக்கிற எல்லோரிடமும் எழுத்தை குறித்து மட்டுமே பேச வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்த எனது மூடத்தினத்திற்கு எப்பொழுதும் ஏமாற்றங்களை தாரளமாக தருவதற்கு நண்பர்கள் யோசிப்பதில்லை. மாறாக மிக அரிதாக சந்திக்க நேர்ந்த சில நண்பர்கள் எது சார்ந்தும் வாழப்பழகாத ஒரு மனநிலைக்கு என்னைத் தயார்ப்படுத்தினார்கள், அப்படியாக, நம்பிக்கைகளெதுவுமற்ற உயிர் வாழ்தலுக்கான ஒரு சராசரி இயக்கமாக மட்டுமே எழுத்தை நினைத்து சுற்றிக் கொண்டிருந்தவன் கோணங்கியை சந்திக்க நேர்ந்தது ஆறு வருடங்களுக்கு முன் ஒரு நூல் வெளியீட்டு விழாவில். மதினிமார் கதையும், கோப்பம்மாளும், தச்சனின் மகளும், பொம்மைகள் உடைபடும் நகரமும், மாயாண்டிக் கொத்தனின் ரசமட்டமும் கதைகளாய் கண்டபடி மனம் முழுக்க உலவி அந்த மனிதனோடு பேசிவிடுவதற்கான தவிப்புகளோடு பதை பதைத்துக் கிடந்தது. அதிர்ஸ்டவசமா