Posts

Showing posts from May, 2020
Image
மற்றுமொரு பிரிவுக்கதை      -அலீனா.    நீண்டதொரு கடற்கரையாய் அவளிருந்த காலத்தில் அவன் ஒரு சிறு படகாய் இருந்தான். சந்தடிகள் நிறைந்திருந்தாலும் வெறுமை சூழ் உலகு அவளது. காற்றும் அலையும் என அலைக்கழிக்கப்பட்டாலும் நிறைவானவை அவனது நாள்கள். அலைச்சல்கள் மிகுந்த வாழ்விலிருந்து ஓய்வெடுக்க எண்ணி அவன், அவள் கரை சேர்ந்திருந்தான். வருவோரும் போவோருமாய் இருக்குமிடத்து தங்கிவிட்ட அவனிடம் அவள் கதை பேசத் துவங்கினாள். அவனிடம், சொல்வதற்குப் பல கதைகளிருந்தன - அவன் சுமந்த மனிதர்களும், கால் நனைத்த தேசங்களும், போராடிக் கடந்த தூரங்களும், எட்டி அடைந்த கனவுகளுமாய் அவனின் கதைகள் அவளுக்குச் சுவாரசியமாய் இருந்தன. அவளறியாத, காணவும் இயலாத அந்த உலகின் வாயில்களை அவன் தன் கதைகளைக் கொண்டு திறந்திருந்தான். அவன் பேசி சலிப்புற்ற நேரங்களில் அவள் தன் சிறு உலகத்தின் பெருங்கதைகளை அவனுக்குச் சொல்வாள். பகலும் இரவும் எல்லா நேரங்களிலும் தன்னோடிருக்கும் அவனது அருகாமையில் அவள் திழைத்திருந்தாள். வழமை திகட்டி   மனம் மாற்றத்தை வேண்டிய ஓர் நாளில், தான் பயணம் போக எண்ணுவதாய் அவளிடம் கூறினான். விடைகள் பல கூறியவள் தான் எனினும், அவனின் ப

ஒரு கவிதை…

Image
நேற்று வகுப்பில் வழிகாட்டி   ஒரு கவிதையை எனக்கு படிப்பித்தார். தமிழ்ச் சூழலில் கவிதைகள் மொழியைச் சிக்கலாக்குவதன் வழியாக வாசகர்களை நெருங்கச் செய்வதில்லையோ என எப்போதும் தோன்றும். எளிய கவிதைகள் நவீனத்துவமற்றவை என்கிற நம்பிக்கை நம் சூழலில் பரவலாகவே நம்ப்பப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் முகநூலில் வாசித்த முத்துராசாகுமாரின் கவிதையொன்று மனதிற்கு நெருக்கமாய் இருந்தது. “ஆற்றுவெள்ளத்தில் மிதந்துவந்த தேங்காய் குழைகளுக்கு ஆசைப்பட்டு புடைத்தவயிறோடு மாண்டவள்தான் என் தாய். அவள் கருவினுள் உயிரசைவுடனிருந்த என்னை பழவிதையாக நெம்பியெடுத்து ஆளாக்கினார் தந்தை . கிறுக்குத் தாயோளி மகனென்ற கிண்டல் ஒலியை கேட்கையிலெல்லாம், வைகையில் நீரடி மணலை வாலாலேயே வட்டவீடாக்கும் மீன்களைத் தனிமையில் வேடிக்கைப் பார்க்க ஆழ மூழ்கிடுவேன்.”             முதல் வாசிப்பில் நேரடியான அர்த்தங்களைத் தருவதாக இருந்தாலும் அடுத்தடுத்த வாசிப்பில் இந்தக் கவிதை நமக்குத் தரும் அனுபவமும் அர்த்தங்களும் அலாதியானது. மனிதர்களுக்கான பிரத்யேகத் தன்மை அவர்களின் செயல்களில் இல்லை,   குணங்களில் இருக்கிறது. ஆழ்மனதில