Posts

Showing posts from March, 2017

மகள் ஜீவாவுக்கு...

Image
                  ” எங்கு நம்பிக்கை இருக்கிறதோ, அங்கு அற்புதங்கள் நிகழும். ” -        ஒரு துண்டு வானம் சிறுகதையில் லஷ்மி சரவணகுமார். மகளே   என்   உதிரத்தின் ஒட்டுமொத்த உருவே. இந்த வாழ்வை அதன் கசப்புகளோடு நீ புரிந்து கொள்ள உன் முன்னாலிருப்பது என் கதைகளும் நானும் தான். நான் உனக்கு விட்டுச் செல்ல விரும்புவது சொற்களையல்ல நம்பிக்கைகளை. வாழ்வின் மீதான, மனிதர்களின் மீதான அசாத்திய நம்பிக்கைகளையும் காதலையும் நமக்குள் ஆழமாக விதைத்துக் கொள்ளத் துவங்குகிற போதுதான் உலகின் மீதான நமது அனுமானங்கள் மாறத் துவங்குகின்றன.  அதனால் தான் என் கதைகளின் சொற்களில் இருந்தே உனக்கான இந்தக் கடிதத்தையும் துவங்க வேண்டியுள்ளது. உண்மையில் நீ கருக்கொண்டது நான் பிறப்பதற்கும் முன்னால். உனக்கு தகப்பனாவதற்கென்றே பிறப்பெடுத்தவன் நான். அதனால் தான் திருமணம் முடிந்து இத்தனை காலத்திற்குப் பின்னும் உன் வருகையை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறேன். நான் பார்த்த உலகின் குரூரங்கள் எதையும் நீ பார்த்துவிடக் கூடாதென்கிற கவனத்திலும் எச்சரிக்கையிலும் உனக்கானதொரு உலகை உருவாக்கும் பிரயத்தனமே இந்த காத்திருப்பு. லட்சியங்களும் ந