Posts

Showing posts from 2016

மத்திய சிறைவாசி எண் : 3718

                                               அன்புள்ள விஜி… ”நினைவின் எல்லா திருப்பங்களும் ரணங்களால் நிரம்பியிருக்க சபிக்கப்பட்டவர்கள் நாம். ஒவ்வொருமுறை உன்னை பார்த்துவிட்டுத் திரும்பும் போதும் சிறைச்சாலையின் உயர்ந்த சுவர்களுக்குள்ளாக நீ படும் அவஸ்தைகளை உன் முகம் உணர்த்திவிடுகிறது. அடிக்கடி வந்து பார்க்கச் சொல்கிறாய், எங்கனம் சாத்தியம்? ‘எதுக்கு இந்த மாமாவ அடிக்கடி பாக்கப் போறம்மா?’ என ஆதிரா கேக்கிறாள். சில கேள்விகளுக்கு மெளனத்தை பதிலாக சொல்வது எத்தனை சிக்கலானது தெரியுமா? என்னை எதிர்நோக்குகிற அனேகரும் என் முதுகுக்கு பின்னால் சத்தமாகவே இதைக் கேட்கிறார்கள். அதற்கான பதிலையும் தெரிந்து வைத்திருப்பது போல் சிரித்துக் கொள்கிறார்கள்.  என் பாதைகளெங்கும் இப்போதெல்லாம் அவமானத்தின் நகைப்புகள்  முதுகிலேறி தொடர்ந்தபடியே தான் இருக்கிறது. எதிர்காலம் குறித்து எந்தவிதமான நம்பிக்கைகளையும் உனக்கு இப்போது தர முடியாதுதான். ஆனாலும் உனக்கே உனக்கான அமுதாவாக இந்த வாழ்வை வாழும் உறுதியுடன் இருக்கிறேன். அடுத்த மாதத்தில் வந்து பார்க்கிறேன். ( உனக்கு தேவையானதை வாங்கிக் கொள். நான் வரும்போது பணம் தருகிறேன்.)

வெயிலுக்கு சுமதி என்று பெயர்.

Image
                       கூடியிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த வெயில் காலத்தின் சற்றே சலிப்பு மிக்கதொரு மாலையில் இந்த பேச்சையும்  கேட்க நேர்ந்துவிட்ட துரதிர்ஷ்டவசத்துக்காய் ஒருமுறை மன்னிப்பைக் கோருகிறேன். அடிப்படையில் நானொரு புனைவெழுத்தாளன். எல்லாவற்றையும் கதைகளாகப் பார்க்கப் பழகியவன். கேட்கிற பேசுகிற எல்லாவற்றிலும் கதைகளின் கிளைகளைத் தொடர்ந்து செல்லவே விரும்புகிற எளிய மனிதன். இன்னொரு வகையில் சொல்லப் போனால் கவிதைகள் எழுத முயன்று தோற்றுப் போனவன். ஆனாலும் எல்லாக் காலத்திலும் கவிதைகளின் மீதான காதலுண்டு. கவிதைகளின் வழியாகத்தான் எனது கதைகளுக்கான மொழியை நான் தேர்ந்தெடுக்கிறேன். சொற்களை இரவல் வாங்குகிறேன். ஏனெனில் கவிதை எப்பொழுதும் ஒரு மொழியை வழிநடத்திச் செல்லும் மகத்தான வடிவமாய் இருக்கிறது. கவிதைகளின் குறைபாடுகள் சார்ந்து பல சமயங்களில் நான் கடுமையாக பேசுவதும் அப்படி பேசுவதற்காக உதை வாங்க நேர்வதும் கவிதைகளின் மீதான ப்ரியங்களால் தான். போகட்டும். நான் வெக்கையின் நறுமணம் மிக்க கவிதைகள் குறித்து உங்களுடன் சில நிமிடங்கள் பேசிவிடுகிறேன். இந்த வெக்கை எனக்குப் புதிதானதல்ல. மல்லாங்கிணறின

ஒரு நேர்காணல்

கவிஞர் நண்பர் றியாஸ் குரானாவுடனான எனது உரையாடல். கொஞ்சம் விலாவாரியான கூடவே சுவாரஸ்யமான கேள்வி பதில்கள். அவரது வலைதளத்தில் தொடர்ந்து முக்கியமான எழுத்தாளர்களை நேர்காணல் செய்து வருகிறார். அதன் வரிசையில் இதுவும். நேர்காணலை முழுமையாக வாசிக்க இணைப்பில் செல்லவும். http://maatrupirathi.blogspot.in/2016/01/blog-post_18.html

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

Image
அருவருப்பின் வசீகர நிழல். 2002 ம் ஆண்டின் பிற்பகுதியில் மொழிபெயர்ப்பாளர் என்.நாகராஜனுடன் ஒரு உரையாடலின் போதுதான் முதல் முறையாக தஞ்சை ப்ரகாஷ் என்ற பெயரைக் கேள்விப்பட்டேன். அப்பொழுது 17 வயது. ஜானகிராமன், எம்.விவெங்கட்ராம், நா.பிச்சமூர்த்தி, கு.பா.ரா என வாசிப்பின் வழியாக அதிகம் சேமித்திருந்தது தஞ்சை நிலத்துக் கதைகளையே. தி.ஜாவின் எழுத்திலிருந்த எளிமையும்,கவித்துவமும் மெல்லிய காமமும் அவரை ஆதர்ஷமென அழுத்தமாக நம்பச் செய்த பருவம். ப்ரகாஷின் கரமுண்டார் வீடு நாவலை சிலாகித்துப் பேசிய அவர் ‘இதைப் படித்துவிட்டு வா, பிறகு பேசுவோம்.’ என இரண்டு மூன்று அட்டை போட்டு பாதுகாத்த அந்தப் புத்தகத்தைக் கொடுத்தார்.  அந்த நாவலின் முதல் சில பக்கங்களிலேயே அதைத் தொடர்ந்து வாசிக்க முடியாதபடி அனேக  நெருடல்கள். முக்கியமாய் அதன் மொழி. முழுக்கவும் தஞ்சை வட்டார பேச்சு வழக்கிலேயே நகரும் அந்நாவல் அதுவரையிலுமான தஞ்சை எழுத்தாளர்களின் கதைமொழியிலிருந்து தன்னை முற்றிலுமாய்த் துண்டித்துக் கொண்டிருந்தது. அந்நாவலை நிதானமாக வாசிக்கத் துவங்கியபின், எழுத்தின் வழி முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் காத்து வைத்திருந்த அறம் அவ்வளவையும