Posts

Showing posts from March, 2016

வெயிலுக்கு சுமதி என்று பெயர்.

Image
                       கூடியிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த வெயில் காலத்தின் சற்றே சலிப்பு மிக்கதொரு மாலையில் இந்த பேச்சையும்  கேட்க நேர்ந்துவிட்ட துரதிர்ஷ்டவசத்துக்காய் ஒருமுறை மன்னிப்பைக் கோருகிறேன். அடிப்படையில் நானொரு புனைவெழுத்தாளன். எல்லாவற்றையும் கதைகளாகப் பார்க்கப் பழகியவன். கேட்கிற பேசுகிற எல்லாவற்றிலும் கதைகளின் கிளைகளைத் தொடர்ந்து செல்லவே விரும்புகிற எளிய மனிதன். இன்னொரு வகையில் சொல்லப் போனால் கவிதைகள் எழுத முயன்று தோற்றுப் போனவன். ஆனாலும் எல்லாக் காலத்திலும் கவிதைகளின் மீதான காதலுண்டு. கவிதைகளின் வழியாகத்தான் எனது கதைகளுக்கான மொழியை நான் தேர்ந்தெடுக்கிறேன். சொற்களை இரவல் வாங்குகிறேன். ஏனெனில் கவிதை எப்பொழுதும் ஒரு மொழியை வழிநடத்திச் செல்லும் மகத்தான வடிவமாய் இருக்கிறது. கவிதைகளின் குறைபாடுகள் சார்ந்து பல சமயங்களில் நான் கடுமையாக பேசுவதும் அப்படி பேசுவதற்காக உதை வாங்க நேர்வதும் கவிதைகளின் மீதான ப்ரியங்களால் தான். போகட்டும். நான் வெக்கையின் நறுமணம் மிக்க கவிதைகள் குறித்து உங்களுடன் சில நிமிடங்கள் பேசிவிடுகிறேன். இந்த வெக்கை எனக்குப் புதிதானதல்ல. மல்லாங்கிணறின