Posts

Showing posts from August, 2011

மண்ட்டோ , நர்கீஸ் மற்றும் சில பெண்களும் அவர்களைத் துரத்தும் நானும்...(மணல்வீடு மண்ட்டோ சிறப்பிதழுக்காக எழுதப்பட்டு தேர்வாகாதது..)

“எனக்குத் தெரிந்த மட்டில் அவன் யாருடைய சிந்தனைகளாலும் எப்பொழுதும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த உலகததை விளக்க முயற்சிப்பவர்கள் எல்லோரையும் முட்டாள்களென்றே கருதினான். இந்த உலகத்தை ஒருவனால் மற்றவனுக்கு விளக்க முடியாது. ஒருவன் தானாக அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.”
      - ‘மண்ட்டோவைப்  பற்றி மண்ட்டோவே எழுதியதொரு சொற்சித்திரத்திலிருந்து..’ பம்பாயின் அழுக்கும் இருளும் நிரம்பியதொரு தெருவிலிருந்து கிளம்பி கொஞ்சம் கதைகளடங்கிய காகிதக் கட்டுகளுடன் பழைய ரயில் பெட்டியொன்றில் பயணிக்கும் மண்ட்டோ உடன் தனது தோழிகள் சிலரை அழைத்துக் கொண்டு செல்கிறார். கதைக்கார்ர்களுக்கு மட்டுமேயான அந்த பிரத்யேக பெட்டியில் எல்லா ஊரிலும் சிலர் ஏறிக்கொள்வதும் அவருடன் மதுவருந்தி சண்டையிட்டு முடியாமல் பாதி வழியில் இறங்கிக் கொள்வதும் வெகு இயல்பாய் நடக்கிறது. எல்லாக் காலங்களிலும் இப்படி சிலர் ஏறிக்கொள்வதும் அவர் கதைகளில் வரும் பெண்களின் மீது காதல் கொண்டு பேசப்போய் சண்டை போட்டுக் கொண்டு வருவதும் நடந்து கொண்டேயிருக்க இரண்டாயிரத்து ஒன்றாமாண்டு ஒரு வெயில் காலத்தின் வியாழக்கிழமையில் துரதிர்ஸ்டவசமாய் நானும் ஏறிக்கொள…

வசுந்தரா எனும் நீலப்பறவை…(பூவரசி இணைய இதழில் வெளியான கதை...)

ஊர்க்காகங்கள்கொஞ்சம்திசைமாறிப்பறந்ததினத்தின் அதிகாலையில்தான்இப்படியானதொருகனவுவந்திருந்ததுவசுந்தராவுக்கு. கிழக்குத்திசைநோக்கிஅப்பறவைகள்பறந்ததற்கும்வடகிழக்காகஇவள்முந்தினஇரவுதலைவைத்துஉறங்கியதற்கும்எந்தவிதமானதொடர்புகளும்இருந்திருக்கப்போவதில்லை. கனவுகளுக்கும்உறக்கத்திற்கும்சம்பந்தமில்லாததொருஉறவிருப்பதைப்போலவேதான்இதுவும்.  முன்புஒருபோதும்இல்லாதளவிற்குஉற்சாகமும்சந்தோசமும்கொண்டவளாய்விழித்தவளின்உடலில்வலதுஇடதாகஇறக்கைகள்துளிர்விட்டிருப்பதாகநினைத்துக்கொண்டாள். காற்றைவிடவும் ;லேசனாதாயிருந்ததுஉடல். பிரபஞ்சத்தின்மொழிபிடிபட்டதைப்போல்ஒவ்வொன்றையும்நிதானமாகப்பார்த்தவளைஅம்மாவும்சகோதரியும்புதியவளாய்ப்பார்த்தார்கள். இந்தமாற்றம்அச்சப்படும்படியில்லாததால்இவளுக்கிருந்தஉற்சாகம்அவர்களுக்கும்வந்துவிட்டிருந்தது. புத்தகப்பையோடுபள்ளிக்கூடம்கிளம்பியவளைஇறுக்கியணைத்துஅம்மாநெற்றியில்முத்தமிட்டால். வாழ்வில்ஒரேயொருமுறைமட்டுமேகிடைக்கமுடிகிற

மிச்சமிருக்கும் தறிகளுக்காக ஒருவன்... (ஆனந்த விகடனில் வெளியான கதை....)

சுந்தரி ஷிப்ட்டு முடித்து கிளம்பும்போது மழை வேகமாக பெய்யத் தொடங்கியது. நவநீதன் கம்பெனி வாசலில் நின்று மழையில் நனைந்தபடி மினி பஸ்ஸில் ஏறும் சுந்தரியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வாழ்வில் இரண்டு சந்தோசங்கள் இருந்தன. ஒன்று சுந்தரி இன்னொன்று நைட் ஷிப்ட் வேலை. முகத்தில் படிந்திருந்த மழை நீரை தன் சேலை தலைப்பால் துடைத்துக்கொண்டே ஜன்னல் வழியே அவனைப் பார்த்து அவள் சிரித்த பின்புதான் கம்பெனிக்குள் நுழைந்தான். அவளின் சிரித்த முகம் மனதில் நிழலாடிக்கொண்டிருக்க மிகப் பரபரப்பான வேலைக்காரனைப்போல வேலையைத் தொடங்கினான். தறிச் சத்தத்தில் இடி விழுந்தாலும் கேட்காதுதான், அதற்காக இடிவிழவேண்டுமென்கிற வேண்டுதல்களோ விருப்பங்களோ எதுவும் அவனுக்கு இருந்திருக்கவில்லை. ரசனை ரசனையின்மை என்று பிரித்துப்பார்க்கத் தெரியாத அவனுக்கு சுந்தரியின் சிரிப்பினூடான அந்த மழைநாள் மனமெங்கும் பொங்கும் சந்தோசத்தால் நிறைந்திருந்தது.


கணபதி டெக்ச்டைல்ஸில் நைட் ஷிப்ஃட் வருவது குதுகலமான விசயமாக இருந்தது. வெயில் காலத்தில் மட்டும்தான் தறி வெக்கையில் கொஞ்சம் முதுகு எறியும்.  நீர்க்கடுப்பில் வயிறு வலிக்கவும், ஒன்னுக்குப் போகையில் எரி…