Posts

Showing posts from August, 2016

ஆதாமின் துரோகம்.

Image
ஆட்டம், இரைச்சல், மது, களிப்பு எல்லாம் ஓய்ந்து சில நிமிடங்கள் தான் ஆகின்றன. உடலின் மெளன நரம்புகளுக்குள் துடித்துக் கொண்டிருக்கும் காதலைப் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தன அந்த பப்பின் வண்ண விளக்குகள். ரெஸ்ட் ரூம் நோக்கி நடந்த அனிலின் கால்களில்  இசையின் மிச்சம் ஒலித்துக் கொண்டே இருக்க உடலெங்கும் படர்ந்த அதன் அதிர்வுகளுக்கு இணையாய் ஆடிக்கொண்டான். பாதி இரவைக் கடந்தும் தன்னைக் காத்திருக்க வைத்த தன் காதலனின் மீது எரிச்சல் வந்தது. மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டது அவனைச் சந்தித்தும் முத்தமிட்டும். இந்தக் காத்திருப்பின் அவஸ்தைகள் எதையும் அவனால் உணர்ந்திருக்க முடியாது. உடலில் நெருப்பு பற்றிப் படர்வதைப்போல் தவிப்பிலிருக்கும் இவனிடம்  வரமுடியாமல் போவதை ஒரு குறுஞ்செய்தி அனுப்பிக் கூட சொல்லாமல் இருப்பது அவன் வழக்கம். அடுத்த முறை சந்திக்கையில் இயல்பாக முத்தமிட்டு ‘வேலை இருந்ததாகச் சொல்லுவான்.’ அவன் ஸ்பரிசம் பட்ட   சில நொடிகளில் வெடித்துக் கிளம்ப நினைத்த கோவம் அத்தனையும் மறைந்து போகும். அலைபேசியை எடுத்து அவனை அழைத்தான். இவ்வளவு நேரமும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த அவன் எண் இணைப்பில் கிடைத்தது. சிற…

மத்திய சிறைவாசி எண் : 3718

அன்புள்ள விஜி… ”நினைவின் எல்லா திருப்பங்களும் ரணங்களால் நிரம்பியிருக்க சபிக்கப்பட்டவர்கள் நாம். ஒவ்வொருமுறை உன்னை பார்த்துவிட்டுத் திரும்பும் போதும் சிறைச்சாலையின் உயர்ந்த சுவர்களுக்குள்ளாக நீ படும் அவஸ்தைகளை உன் முகம் உணர்த்திவிடுகிறது. அடிக்கடி வந்து பார்க்கச் சொல்கிறாய், எங்கனம் சாத்தியம்? ‘எதுக்கு இந்த மாமாவ அடிக்கடி பாக்கப் போறம்மா?’ என ஆதிரா கேக்கிறாள். சில கேள்விகளுக்கு மெளனத்தை பதிலாக சொல்வது எத்தனை சிக்கலானது தெரியுமா? என்னை எதிர்நோக்குகிற அனேகரும் என் முதுகுக்கு பின்னால் சத்தமாகவே இதைக் கேட்கிறார்கள். அதற்கான பதிலையும் தெரிந்து வைத்திருப்பது போல் சிரித்துக் கொள்கிறார்கள்.  என் பாதைகளெங்கும் இப்போதெல்லாம் அவமானத்தின் நகைப்புகள்  முதுகிலேறி தொடர்ந்தபடியே தான் இருக்கிறது. எதிர்காலம் குறித்து எந்தவிதமான நம்பிக்கைகளையும் உனக்கு இப்போது தர முடியாதுதான். ஆனாலும் உனக்கே உனக்கான அமுதாவாக இந்த வாழ்வை வாழும் உறுதியுடன் இருக்கிறேன். அடுத்த மாதத்தில் வந்து பார்க்கிறேன். ( உனக்கு தேவையானதை வாங்கிக் கொள். நான் வரும்போது பணம் தருகிறேன்.) அமுதா.      இந்த கடிதம் விஜியின் கைகளில் கிடைத்த போது அவ…