Posts

Showing posts from August, 2012

"உப்பு நாய்கள்" நாவல் குறித்து வாசகரின் பார்வை..

/ எனது நலம்விரும்பியும் நண்பருமான ஒருவர் லக்ஷ்மி சரவணகுமாரின் “உப்புநாய்கள்”பற்றிய எனது பதிவைப் படித்துவிட்டு விரிவாக எழுதும்படி கூறியதால் அந்நாவலைப் பற்றி விரிவாக எழுதும் முயற்சியே இப்பதிவு. முதலில் இந்நாவலின் கதையை ஒரே வரியில் கூறிவிடுகிறேன்.மூன்று வெவ்வேறு விதமான மனிதர்களுக்கும் சென்னை என்கிற இப்பெருநகரத்திற்குமான தொடர்பே இந்நாவலின் மூலம். என்னைப் பொறுத்தவரையில் ஒரு நாவல் என்பது சுவாரஸ்யமாகவோ நல்ல கதையம்சத்துடனோ இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை.ஆனால் அது ஏதேனும் ஒரு சமூகத்தின் வாழ்வியலைப் பிரதிபலிக்க வேண்டும்.அல்லது நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் மனிதர்களையே கதைமாந்தர்களாகக் கொண்டு அக்கதைமாந்தர்களுக்கான உளவியலைப் பற்றிப் பேசவேண்டும்.அந்தவகையில் உப்புநாய்கள் இந்த இரண்டிலுமே சிறந்து விளங்குகிறது.இப்போது இந்த நாவலில் ஆசிரியர் எத்தனை வகையான மனிதர்களையும் வாழ்வியல் கூறுகளையும் நமக்குக் காட்டியிருக்கிறார் என்று பார்ப்போம். வடசென்னையின் சேரிப்பகுதிகளில் வாழும் விளிம்புநிலை மனிதர்கள். சௌகார்பேட்டையில் பணத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு வாழும் மார்வாடிகள். கஞ்சா விற்கும் இளைஞர்கள்,அ