Posts

Showing posts from March, 2012

ச. விசயலட்சுமியின் பெருவெளிப்பெண் கவிதைத்தொகுப்பில் சமுதாயச் சிந்தனைகள்

முனைவர் கோ . குணசேகர் தமிழ்த்துறைத் தலைவர் ஆச்சாரியா கலை மற் றும் அறிவியல் கல்லூரி வில்லியனூர் , புதுச்சேரி - 605 110. புதுக்கவிதை தமிழக இலக்கியக் களத்தில் கால்கொண்டபோது எண்ணற்ற விமர்சனங்களைச் சந்தித்தது . ஆனால் கல்விகற்றோர்களால் வாசகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்பு புதுக்கவிதைத்துறை பல்நோக்கில் வளர்ந்தது . வட்டார நோக்கிலும் , புதிய புதிய உத்திமுறைகளைக் கொண்டும் இன்றைக்கும் குறிப்பிடத்தக்கதொரு வளர்ச்சி நிலையை எட்டியிருக்கின்றது . புதுக்கவிதைத் துறையில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கவிஞர்களும் மிகச் சிறந்த கவிதைத் தொகுப்புகளைப் படைத்திருக்கிறார்கள் . அவை பெண்களின் உணர்வுகளையும் , அவர்களின் இருப்பினையும் தெளிவாக்குகின்றன . அவ்வகையில் ச . விசயலட்சுமி படைத்திருக்கும் பெருவெளிப்பெண் என்னும் கவிதைத் தொகுப்பு , பெண்களுக்குச் சமுதாயத்தில் நிகழும் அவலங்களையும் , அவர்கள் உரிமை பெறவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றது . பெண்களை ஒதுக்கி வைத்தல் : பெண்கள் மாதவிலக்குக் காலத்தில் தனித்து இருக்க வேண்டும் , அவர்கள் பொருள்களைத் தொட