Posts

Showing posts from April, 2017

ஒரு ராஜா வந்தாராம்.

Image
( சிறுகதையாளனின் வாசிப்பு குறிப்புகளில் இருந்து.) லஷ்மி சரவணகுமார். எப்போது எழுதத் துவங்கினோம் என்கிற கேள்விக்கு ஒருவருக்கு சொல்வதற்கு தெளிவானதொரு தருணமிருக்கிறதைப் போல், எப்போது வாசிக்கத் துவங்கினோம் என்கிற கேள்விக்கு பெரும்பாலும் இருப்பதில்லை. பஷீரிடம் ஒரு முறை  எது உங்களை எழுத வைத்தது? என்று கேட்டபோது யோசிக்காமல் அவர் ‘பசி’ என்று சொன்னது மாதிரிதான், என்னை வாசிக்க வைத்ததும் பசியாக இருந்தது. ஆதரவற்றோருக்கான விடுதியில் வார இறுதி நாளில் நடைபெறும் பைபிள் வகுப்பிற்கு ஒழுங்காக செல்கிறவர்களுக்கும் வசனங்களை தெளிவாக ஒப்புவிக்கிறவர்களுக்கும் அன்பளிப்பாய் தரப்படுகிற க்ரீம் பன் மட்டுமே அன்றைய நாளில் தேவ அப்பம். ஆக அந்த பன்னுக்காக பைபிளை வாசித்ததில் துவங்கியது வாசிப்பு. கதை சொல்லவும் கதை கேட்கவும் அடியாழத்தில் யாருமறியாமல் விதைகளைத் தூவியது ஜீசஸும், ரோஸி ஆண்ட்டியும் தான். அவள் சொன்ன கதைகளின் வழியாகவே கதை என்னும் இந்த தனித்த உலகின் மீதான எல்லா பைத்தியக்காரத்தனங்களும் துவங்கியது. எழுத்தாளனாக வேண்டுமென்கிற எளிய விருப்பம் தலை தூக்கின நாளில் எல்லோரையும் போல் கவிதை எழுதவே விளைந்தேன் என்றால