Posts

Showing posts from 2017

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

Image
லஷ்மி சரவணகுமார்.             நமக்கு விதிக்கப்பட்ட வாழ்வை, துயரின் அரூபங்களை நாம் கதைகளாக்கியபடியே தான் இருக்கிறோம். வரலாறு கதை சொல்லுதலின் நீட்சிதான். எல்லா வரலாறுகளும். இந்திய தேசத்தின் வரலாற்றுக் கதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் பின்னாலிருந்து துவங்கும் போதே மனிதன் பேசுவதிலிருந்து அதிகாரத்திற்கும் அதிகாரத்தின் வழி யுத்தத்திற்கும் இடம்பெயர்ந்த கதைகள் நமக்கு சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதிகாரத்தின் கதைகளை கேட்டே வளர்ந்தவர்கள் நாம். எளிய மனிதர்கள் அந்தக் கதைகளின் துயர் மிக்க சின்னஞ்சிறிய சாட்சியங்களாகவே எப்போதும் அடையாளப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் சின்னஞ் சிறிய மக்கள் கூட்டம் பேசும் ஏதோ சில மொழிகள் நம் தேசத்தில் அதன் சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு மொழி அழியும் போது அதனோடு சேர்ந்து அதன் பல்லாயிர வருட வரலாறும் அழிக்கப்படுகிறது. வரலாற்றை அழிப்பதின் வழிதான் ஒற்றை தேசியத்திற்குள் ஒடுக்கப்பட்ட மக்களும், பழங்குடியினரும் அடிமைகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் புத்தகம் ஒரு தனி மனித வரலாறாகவோ, நாவலாகவோ எப்படி வேண்டுமானா

ஒளிநார்கள் கிளித்து கூடுகட்டும் தூக்கணாங்குருவிப் பெண் பாயிஸா :

Image
எஸ்.ஃபாயிஸா அலியின் கடல் முற்றம் தொகுப்பிற்கான முன்னுரை.  ------------------------------ ------------------------------ ------------------------------ ---------------------- பெண் சூழ்நிலைகளை எதிர்கொண்டு பொருந்திக்கொள்ள வேண்டும். அவள் ஏன் அப்படி பொருந்திக்கொள்ள வேண்டியவளாகிறாள்? இந்த உலகத்தில் இன, மத, நிற, தேசங்கள் என்னும் வேறுபாடுகள் கடந்து பிரபஞ்சத்தின் சகல திசைகளிலும் வாழ்ந்துவரும் ஒவ்வொரு பெண்ணுக்கு முன்பும், கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் மீற முடியாத ஏதோ ஒரு தடை இருக்கின்றது. பூசிமெழுகப்பட்டதாகவோ, நன்கு கவனமெடுத்து அலங்கரிக்கப்பட்டதாகவோ அன்றி சிலநேரங்களில் ஆறமுடியாத, ஆழமான வெட்டுக்காயமாகவோ காய்ந்த தழும்பாகவோ உள்ளுர பெண் மாத்திரமே அதை உணரக்கூடியவாறு அந்தத் தடையானது சிறுகச் சிறுக பெண்ணின் உயிர்ப்பையே கொல்லுகின்றது. தொடர்ச்சியான நசிவுற்றலில் அகப்பட்டபடியே சிரித்துச் சமாளித்து அவள் இந்த வாழ்க்கையை வாழக்கூடும். ஒரு பெண் எதை தன்னுடைய கனவுகளால் தகர்க்க முயலுகின்றாள்? தன்னுடைய கவிதைகளால் எதைத் தாண்ட முயலுகின்றாள்? அவளுடைய கலைத்துவத்தில் இதற்கான பதிலை கண்டெடுக்க முடியும். பெண்ணுக்கெ

தமிழர் கண்ணோட்டம் இதழில் வெளியான நேர்காணல்.

Image
“இந்திய அரசின் விருது கிடைத்ததைவிட, அதைத் திருப்பி அனுப்பிய போதே நான் உற்சாகமடைந்தேன்!” இளம் எழுத்தாளர் இலட்சுமி சரவணக்குமார் செவ்வி! ஏறுதழுவல் உரிமையைப் பறித்த இந்திய அரசைக் கண்டித்து, தனக்கு அளிக்கப்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கான சாகித்திய அகாதெமியின் “யுவபுரஸ்கர்” விருதைத் திருப்பி அளித்து, எழுத்துலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இலட்சுமி சரவணக்குமார். தமிழர் கண்ணோட்டம் இதழுக்காக அவரை நேரில் சந்தித்தோம்! இனி அவருடன்… த.க : வணக்கம் திரு. சரவணக்குமார்! முதலில் யுவபுரஸ்கார் விருதைத் திருப்பி அளித்தமைக்காக எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்! குமார் : மிக்க நன்றி! த.க : உங்களைப் பற்றிய சிறு அறிமுகம்? குமார் : எனது சொந்த ஊர் மதுரை அருகிலுள்ள திருமங்கலம். 2006ஆம் ஆண்டிலிருந்து சென்னையில் வசக்கிறேன். பதினோறாம் வகுப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டவன் நான். இப்பொழுது, முழுநேர எழுத்தாளன்.   த.க : எழுத்துலகில் மிகவும் மதிக்கத்தக்க சாகித்திய அகாதெமியின் இளம் எழுத்தாளர்  விருதை, உங்கள் “கானகன்” நாவல் பெற்றுள்ளது. சூழலியல் பாதுகாப்பு சார்ந்த அந்த நாவலுக்கான

இலங்கைப் பயணம் : சில தருணங்கள். 1

படிப்பின் மீதான வெறுப்பில் கைவசம் இருந்த இரண்டு துணிகளோடு பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு முடிவில் வீட்டை விட்டு ஓடிய நாளில் தான் ஊர் சுற்றுதலின் மீதான பெரும் விருப்பம் துவங்கியது. அப்போதிலிருந்தே சிரமங்கள், சந்தோஷங்கள், தனிமை என எல்லா உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள பயணம் அத்தியவசியமாகிப் போனது.   அலைச்சலுக்கான தவிப்பை உடல் தான் முதலில் ஏற்படுத்துகிறது . வெவ்வேறான கால நிலைகளில் வெவ்வேறான கூரைகளின் கீழ் சலித்து உறங்கும் நாட்களில் தான் வினோதமானதொரு நிறைவை உணர முடிகிறது . பொதுவில் நான் தனித்து அலைய விரும்புகிறவன் . ஏனெனில் இலக்குகளோடு சரியாக திட்டமிட்டு பயணிப்பதை விரும்பாதவன் . இத்தனை நாட்களுக்குள் இத்தனை இடங்களை சுற்றிவிட வேண்டுமென நினைப்பது ஒரு டூரிஸ்ட் கைடின் வேலை . ஒரு இன்பச் சுற்றுலாவிற்கான மனநிலைகளுக்குள் நான் எந்த ஊரின் சாலைகளையும் தேடுவதில்லை . ஒவ்வொரு சாலையும் பிரத்யேக கதைகளின் மனிதர்களின் பொக்கிஷம் . அவற்றோடு பயணிப்பதின் வழி தான் அந்தரங்கமாக அனேக சமாச்சாரங்களை கற்றுக் கொள்ள முடிகிறது . பயணம் தரும் இன்பத்தை முழும