Posts

Showing posts from January, 2012

எனது சிறுகதைத் தொகுப்பிற்கு ச.விசயலட்சுமி எழுதிய முன்னுரை....

Image
விழிபடலத்தில் சுழலுமொரு உலகமும் மௌனத்தின் பெருங்குரலும் வெறும் பார்வையாளர் ஒவ்வொருவரும் ஒன்று கோழையாகஇருக்கவேண்டும் அல்லது துரோகியாக இருக்க வேண்டும் _ஃப்ரான்ஸ் ஃபனான் 1 பசுமை போர்த்திய நிலத்தின் மேற்பரப்பு பழுப்புநிறமாகத்தொடங்கியதன் பின்னணியில் வாழ்நிலை ஒரு கோணத்திலிருந்து மறுகோணத்தை நோக்கி புரண்டதோடு அதன் நுட்பமான வலைகளுக்குள் பிடித்துக்கொள்ள தயாரிப்புகளோடு பதுங்கியிருக்கியிருக்கிறது.இதனிடமிருந்து தப்பமுடியாமலும் ஒப்புக்கொள்ளவியலாமலுமான இடைவெளி எச்சமாய் எழுந்தவாறிருக்கின்றன. இயற்கைக்கும் இயற்கையாய் அமைந்த உடலுக்கும் சமகால வாழ்க்கைக்குமான ஒத்திசைவற்ற அம்சங்கள் சிந்தனையின் வேர்க்கால்களை அசைக்கிறது.உயிர்பிடித்து வாழவும் வாழ்க்கைக்கென சிறிது ருசியிருக்கிறதாவென தேடவும் தொடங்குகிற மனசின் அந்தகாரப்பகுதி முழுமையாய் வெளிப்படாமல் பார்த்துக்கொள்ளப் பழக்கிவைக்கப் படுகிறோம்.வெளியுலகிற்கு தக்கவகையில் உள்ளுணர்வை பதப்படுத்துகிறோம்.உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தினால் அக்கம்பக்கத்தினர் உள்ளிட்ட சமூகம் தன்னை பார்க்கும் விதம் குறித்த ஐயத்தை சுமந்து கொண்டு வாழ்கிறோம். கைகால் விரல் நகங்களை, பற்களை இளைப்

எனதருகில் சில மொழிகள்....

Image
நூல் வெளியீடு குறித்து இருந்த ஆர்வமெல்லாம் டிசம்பர் 31 லேயே முடிந்து போனாலும் சின்னதாய் நண்பர்களின் அன்பிற்காக இன்னொருமுறை முயற்சித்துப் பார்க்கலாம் என்றிருந்தது. (அதிகபட்சமாய் எனது நண்பர்களென சொல்வதென்றால் மூன்று அல்லது நான்கு பேர்தான். என் எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன், நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று.... யாருக்குப் பொருந்துமோ இல்லையோ எனக்கு மிக நன்றாய் பொருந்தும்....) புத்தக வெளியீடு குறித்து தொடர்ந்து நம்பிக்கையளிக்கும்படி பேசியதில் மயூ முக்கியமானவள். ஒரு வழியாக ஜனவரி 8ம் தேதி வெளியிட முடிவு செய்தாயிற்று.... யாரைக் கூப்பிடவேண்டும், எப்படி நிகழ்வை நடத்த வேண்டுமென்கிற எந்தக் கூறுவாறும் எனக்கில்லை.... ஆனாலும் என்ன நடக்கிறதோ நடக்கட்டுமென அமைதியாக இருந்துவிட்டேன்.... சக்தி ஜோதியின் நூலை வெளியிட வந்த வண்ணதாசனையே எனது நூலையும் வெளியிடச் சொல்லிவிட்டேன்... எனது அதிர்ஸ்டம் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொஞ்சம் வாசகர் கூட்டம் தாரளமாய் இருந்தது.. இல்லாவிட்டால் நிலமை கொடூரமாகியிருக்கும்... எனது நெருக்கமான நண்பர்கள் வினோத், கலை, சதீஸ், விவேக், முகேஷ் வந்திருந்தனர். இவர்கள் யாருக்கு

நாவலிலிருந்து ஒரு சிறு பகுதி

Image
கோடைபுற்களின் இடப்பெயர்வு… “ ஒவ்வொரு பொருளும் தன் ஸ்திதியிலேயே இருக்கவே ஆசைப்படுகிறது . ஒரு கல் எப்போதும் கல்லாகவேயிருக்க விரும்புகிறது . புலி தானொரு புலியாயிருக்கவே ஆசைப்படுகிறது .” - ஸ்பினோசா ஆதம்மா இந்த நகருக்கு வந்த நாள் முதல் ஒருமுறையேனும் கடற்கரைக்குப் போகவேண்டுமென ஆசைகொண்டிருந்தாள். வெக்கையும் உலர்மணலும் நிரம்பிய தன்னூரில் குடிக்கத் தண்ணீர் எடுக்க வேண்டு ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அவள் இரண்டு மூன்று கிலோமீட்டர்கள் நடக்க வேண்டும். அப்பொழுதெல்லாம் தண்ணீர் பேரதிசயம். ஊரிலிருக்கும் எல்லோரையும் போலவே இவர்கள் குடும்பமும் கிடைத்த வேலைகளைச் செய்வதற்காக சொந்த ஊரைவிட்டுக் கிளம்பினார். ராஜஸ்தானிற்கும் மஹாராஷ்டிராவிற்குமாக இவளின் சொந்தக்காரர்கள் நிறையபேர் நகர்ந்து போனாலும் இவள் அப்பாவான ராஜீவுக்கு அவ்வளவு தூரம் போவதில் விருப்பமில்லை, வீட்டிலிருந்து கொஞ்சம் பொருட்களைக் கட்டிக்கொண்டு சென்னைக்கு வந்திறங்கிய தினத்தில் மொத்த நகரும் பெருமழை பெய்து நிறைந்திருந்தது. சாலைகள், ரயில்வே தண்டவாளங்கள் வீடுகள் அவ்வளவிலும் மழைநீர் தேங்கிய குளமென தளும்பிக்கொண்டிருந்தன. இந

இந்த வருசம் புத்தகத் திருவிழாவில்....

Image
புத்தகங்கள் வாசிக்கத் துவங்கிய வயதில் ஒரு நல்லப் புத்தகத்தை சொந்தமாக வாங்க முடியாதளவிற்கு துரதிர்ஸ்டசாலி நான். ஊரிலிருந்த ஒரு பெரிய இலக்கியவாதியிடம் அப்பொழுது நான் வாசிக்க ஒரு சில புத்தகங்களைக் கேட்டுப் போகையில் ஒரு பொருட்டாகக் கூட என்னை மதித்திருக்கவில்லை. லைப்ரைரியில இருக்க புத்தகத்த எல்லாம் படிச்சிட்டியா எங்கிட்ட வந்து கேக்கற?... எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.... வேறு வழியே இல்லை என்ற நிலையில் வீட்டிற்குத் திரும்பியவனுக்கு பக்கத்துவீட்டிலிருந்த ஒரு டீச்சர் நூலகத்தில் எனக்கு உறுப்பினர் அட்டை எடுத்துக் கொடுத்தார்.... இரவுகளில் தறி ஓட்டுகிற வேலை... பகலில் நூலகம்....நல்ல வேளை அந்த மாபெரும் எழுத்தாளன் எனக்குப் புத்தகம் தந்திருக்கவில்லை. தந்திருந்தால் நான் நூலகம் போயிருக்க மாட்டேன்... தூசுகளும் குப்பைகளுமாய் அடர்ந்திருந்த நூலகத்தின் அத்தனை அடுக்குகளுக்குள்ளும் பகல் முழுக்க அலைந்து திரிந்தன என் கண்கள்., ஒரு நான்கு வருடங்கள் என்னுடைய பகல் நேரங்கள் முழுக்க அந்த நூலகத்தில் கழிந்தன... அங்கு வருகிற நிறையபேர் நான் அங்கு வேலை பார்ப்பதாகத்தான் நினைத்திருந்தார்கள். அட்டை கிழிந்த புத்தகங்கள்....ய