Posts

Showing posts from May, 2011

கடிதம்

அன்புடையீர்

வணக்கம். மரபார்ந்த தொல்கலைகளை (தோற்பாவை. கட்ட பொம்மலாட்டம், கூத்து)
மீட்டெடுக்கவும், தாய் வடிவம் மாறாது அவற்றை வளர் தலைமுறையினருக்கு கைமாற்றி
கொடுக்கவுமான செயற்பாடுகளை கடந்த நான்கு வருடங்களாக களரி சிரமேற்கொண்டு
இயங்கிவருகிறது. தொடர் முயற்சிகளில் மேலும் சில காரியங்களை செய்யவது
கருதியிருக்கிறது.

*1.பாரம்பர்யம் மிக்க நிகழ்த்துக்கலையான கூத்தை, காண்முறை பயிற்சி
முகாம்கள்(நிகழ்த்துதல் வழியான பயிற்றுவித்தல்) மூலம் ஆர்வமுள்ள இளைய
கலைஞர்களுக்குக் கற்றுக் கொடுப்பது.
திட்ட மதிப்பு- ரூ50000
(பதினைந்து மாணாக்கர், ஐந்து வாத்தியார்கள், கொண்ட இருபது நாள் முகாம்.)*

*2.கையிருக்கும் கலையை, கலைஞர்களின் வாழ்வியலை ஆவணமாக்குதல். திட்ட மதிப்பீடு-
ரூ-50000
(முதலில் தோற்பாவை கலைஞர் திருமதி. ஜெயா செல்லப்பன் குறித்த பதிவு)*
*
3.கலைஞர்களால் கலைஞர்களுக்காகவே நிர்மாணிக்கப்பட்ட ஆவண காப்பகம்,நூலகம்,
தங்குமிடம் இணைந்த பயிற்சிபட்டறை
இப்படியாக ....................... (நீண்ட கால திட்டம்)*

எண்ணங்கள் செயலாக முழுமை பெற வேண்டுமெனில் அடிப்படை ஆதாரம் நிதி ஆதாரமே!
இவ்விடயத்தில் அக்கறையுள்ள அன்பர்கள் தங்களால் இயன்றளவு பண உதவி
செய்…

மழையென உதிரும் சொற்களின் வழி காண முடிந்த இன்னுமொரு உலகின் அழகிய பதிவு….

தானெழுத நினைக்கிறதொரு கவிதையை எவ்வளவு எழுதித் தீர்த்த பின்னும் தேடியபடியே இருக்கிறான் கவிஞன். விருப்பமானதொரு வார்த்தையின் வழியாக எட்டிப்பிடித்து விடுகிற நிகழ்வுகளையும் அந்நிகழ்வுகளுக்கு முன்பாக, பின்பாக விரவியிருக்கும் ஸ்திரமான் மெளங்களை நம்மில் பலர் சட்டை செய்வதில்லை. தன்னைச் சுற்றி இயங்கிக் கொண்டே இருக்கும் இன்னுமொரு உலகின் ஒட்டுமொத்தமான அசைவுகளையும் நுட்பமாக கவனிப்பதோடு அதன் சிறு, சிறு அழகினைக்கூட காதலுடன் பார்ப்பதிலிருந்து உருவாகியிருக்கின்றன பென்னியின் கவிதைகள். அழகானதொரு மழை தினத்தில் சந்திக்க நேர்கிற எல்லாமும் அழகானவையாகவே இருப்பதைப்போல் ஈரமும், மெல்லிய வன்மமும் ஏமாற்றங்களும் பூர்ணமாய் கலந்து கிடக்கிற இத்தொகுப்பின் கவிதைகள் தோறும் எல்லாவற்றையும் மீறி வாசகனை தன்வசம் இழுத்து வைத்துக்கொண்டிருப்பது கவிஞன் வாசகன் என்கிற சமநிலை நோக்குதலைத் தாண்டின தோழமைதான்.

      எல்லாப் பொய்களையும் பொய்களாகவே ஏற்றுக்கொள்ள முடியாததைப் போலவே எல்லா உண்மைகளையும் உண்மைகளாகவே நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. எல்லாம் பொய் என்பதிலிருந்து தன் சொற்களைத் துவக்கும் இவன் சில சமயங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட அல்லத…

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....

Image
பேருந்து அவர்களை இறக்கிவிட்டுப் போனபோது நிலம் முழுக்க வெயில் ஆக்கிரமித்து விட்டிருந்த்து. அவர்களின் நிழலைத் தவிர்த்து அங்கு ஒதுங்குவதற்கென நிழல் எதுவுமில்லை. இருபுறமும் மண்டிக்கிடந்த கருவேல மரங்களுக்குள்ளாக நீண்டு குறுகி தொலைவில் ஓர் புள்ளியைப்போல் மறைந்து விட்டிருந்த்து சாம்பல் நிறச்சாலை. பேருந்து போன தட்த்தை பின்பற்றியபடியே வந்த தம்பியை சித்தி தலையில் தட்டிக் கூப்பிட்டபோதுதான், தார்ச்சாலையிலிருந்து காட்டினூடாக நீண்டு கிடந்த மண்சாலையை அடையாளம் கண்டு கொண்டான். வாசுகி அக்கா அவர்கள் இருவருக்கும் முன்பாக சென்றுகொண்டிருந்தாள். செருப்பில்லாத கால்களோடு சித்தி வெயிலை எப்படிப் பொறுத்துக் கொள்கிறாள் என நினைத்து ஆச்சர்யங் கொண்டான்.


உனக்கு காலு பொசுக்கலையா சித்தி என அவன் கேட்பதற்கு முன்பாகவே சித்தி இவனைத் திரும்பிப் பார்த்து “காலு பொசுக்குதாடா?” எனக்கேட்க அப்பா புதிதாக வாங்கித் தந்திருந்த ரப்பர் செருப்பை அவளிடம் காட்டினான். அது எப்பொழுது வாங்கப்பட்டிருக்கும் என்பது குறித்து அவள் கேட்க்க் கூடுமென காத்திருந்தவனுக்கு அதனை பொருட்படுத்தாமல் அவள் சென்றதில் வருத்தம்தான். முன்னால் சென்று கொண்டிருந…

ஆம் நண்பர்களே நாங்கள் அப்படித்தானிருக்கிறோம்.....

Image
இது தமிழ் சிறு பத்திரிக்கை எழுத்தாளர்களுக்கு மட்டும்...அல்லது அதனை வாசிக்கிற அன்பர்களுக்கு மட்டும்...நிச்சயமாக சுடசுட இல்லை..கொஞ்சம் ஆறிப்போனதுதான்..ஒரேயொரு நிபந்தனை இதை வாசிக்கும் முன்பாக நீங்கள் சிறு தொகையொன்றை எனக்குத் தந்துவிட வேண்டும், ஏனெனில் நானும் காசுக்காக  எழுதுகிறவன்...

ஒரு பொஸ்தவத்த எதுக்காகவெல்லாம் விமர்சனம் செய்வாக, பொழுது போகாங்காட்டி பொறங்கைய தலக்கிக் குடுத்து படிச்ச அலுப்புத் தீர...இல்லாங்காட்டிக்கு எங்காச்சும் நாலு இளிச்சவாயனுங்க உக்காந்திருந்தா அவய்ங்களுக்கு வெளயாட்டுக் காட்டி சிரிக்க வெக்க...பெறகு எழுதறவன்னு ஒருத்தன் இருப்பானே அவன் தெரிஞ்சவனா இருந்தா சொறிஞ்சு விடனும்..இல்லியா டவுசரக் கழட்டிப் பிடனும்..இதுக்குப் பெறவால என்ன தேவயிருக்கு வெமர்சனத்துக்கு..(இன்னும் பாத்தியன்னா உரிமையோட படிச்சிப்பிட்டு வெமர்சனம் செய்யப் போயி செல பேரு என்ன மாதிரி செருப்படி வாங்கிட்டு வாறதும் நடக்கும் அது தனிக்கத)

செரி..நா விசயத்துக்கு வாறேன்....கொஞ்ச நா மிந்தி சேலத்துல நாவல் விமர்சனக் கூட்டம் நடந்துச்சாமாம்...நல்ல விசயந்தான..எழுத்தாளன் பாவம் பொஸ்தவம் போட்டுப்பிட்டு நீ படிச்சயா நீ படிச்சயானு…

கன்னிமார்களின் பின்னிரவு பாடல் கேட்டு கதை சொல்ல நேர்ந்தவனின் கதை .....

Image
ஒவ்வொரு காலகட்டத்திலும் திசைமாறி பறக்கும் பறவைகள் கொஞ்சத்தை முதன் முதலாக பார்த்த ஒரு பிற்பகலில்தான் நிறம் மாறும் வானத்தின் குழந்தை முகம் பிடிபட்ட்து. பாட்டியின் கதை கேட்டு வளரும் அதிர்ஸ்டம் இல்லாதிருந்தாலும் ஜீசஸின் கதைகளை சொல்லவும் தோத்திரப் பாடல்கள் சொல்லிக் கொடுக்கவும் அருகாமையில் ரோஸி ஆண்ட்டி இருந்த்து பேரதிர்ஸ்டம்தான். தெரிந்த ஒன்றிலிருந்து  தெரியாத ஓர் உலகின் அத்தனை முடிச்சுகளிலும் ஓடி விளையாட சொல்லிக் கொடுத்தவள் அவளாகத்தான் இருக்க முடியும். என்னை முதலில் கதை சொல்லச் சொல்லிக் கேட்டவளுக்கு நான் சொன்ன கதைகளின் அத்தனை ராஜா ராணிகளையும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கலாம், ஆனால் தேவதைக் கதைகளின் அத்தனை தேவதைகளும் அவள் மட்டும்தான் என்பதை ஒருநாளும் அவளுக்கு நானும் சொல்லியிருக்கவில்லை அவளாகவும் கேட்டிருக்கவில்லை. அப்படிச் சொல்ல நினைத்து முடியாமல் போன ஒரு தேவதையைப் பற்றித்தான் பதினெட்டு வயதில் ஒரு கணக்கு நோட்டுத் தாளில் அவளுக்கே சொல்வதாக ஒரு கதை எழுதினேன். எத்தனை முறை ரோஸி என்கிற பெயர் வந்த்த்தெனக் கணக்கிட்டால் நீங்கள் மொத்த வார்த்தையில் ஒரு 30 வார்த்தைகளை மட்டும் கழித்து சொல்ல்லாம். கி…

மிகத் தாமதமானதொரு கடிதம் அல்லது எப்பொழுதோ எழுத சேகரித்திருந்த ஓர் கடிதம்....

பிரியமுள்ள ரம்யாவுக்கு,

இந்த ப்ரியமென்கிற வார்த்தை என்னை இப்பொழுது சில வருடங்களுக்குப் பிந்தையதொரு நிமிடத்திற்கு கொண்டுபோகிறது. எந்தவிதமான நேசத்திற்கான வார்த்தைகளையும் நீயோ அல்லது நானோ நேரிடையாக ஒருபொழுதும் பகிர்ந்து கொண்டதில்லை. என்றாலும் ப்ரியமுள்ள என்கிற வார்த்தை இந்நொடி என்னை உனக்கு மிக நெருக்கமானவனாக உணரச்செய்வதில் சந்தோசப்படுகிறேன்.

ஒவ்வொருமுறையும் உன்னிடம் பகிர்ந்திருக்க வேண்டிய வார்த்தைகளென்று கொஞ்சம் எப்பொழுதும் எஞ்சி நிற்கும். சம்பந்தமேயில்லாமல் ரயில் பயண இரவுகளிலும், திரையரங்குகளில் டிக்கெட் எடுப்பதற்கான வரிசையில் காத்திருக்கையிலும் வந்து தொலைக்கும் அந்த சொற்கள் உனக்கென்று எழுத நினைக்கிற சமயங்களில் ஒருபொழுதும் அவ்வளவு எளிதில் வந்துவிடுவதில்லை. சில நாட்களுக்கு முன் தஞ்சை வந்திருந்தேன் ரம்யா. முன்பு நீ பார்த்த அந்த அழுக்கு சட்டை சரவணனாக அல்ல...கொஞ்சம் புதிதாக, அல்லது சிரமப்பட்டு கொஞ்சம் ஒப்பனைகளுடன். ஒவ்வொரு முறையும் தஞ்சை வருகிற பொழுது ஏதோ உலகின் இன்னொரு துருவத்திற்கு போவதுபோல் அப்படியொரு சந்தோசமும் உற்சாகமும் இருக்கும். எல்லாவற்றிற்கும்ன் இரண்டே காரணங்கள்தான். ஒன்று நீ...இன்…