Posts

Showing posts from August, 2018

சாத்தானின் மனவெளிக் குறிப்புகள்.

Image
அதிகாரம் - 1 1.      தன் தாயிடமிருந்து குழந்தைகளைப் பிரிக்கும் நாளிலேயே தகப்பன்மார் எவரும் சாத்தானாகிறார்கள். அவர்களின் கீழ்மையினாலே நிகழும் எல்லா அழிவுகளும் பிள்ளைகளையும் கேடுகளை நோக்கி இழுத்துச் செல்கிறது. 2.      தன் தகப்பனை கடவுளென நம்பச் சொல்லும் சமூகத்தவனாகிய கதிர், பால்யத்தில் எதிர்கொண்ட துர்கனவுகள் அவ்வளவிற்கும் தகப்பனே காரணம் என்று நம்பினபடியால் அவரை ஒரு நாளும் மரியாதைக்குரியவராய் நினைத்தானில்லை. பொறுப்பற்ற கணவன்மார் குடுமபத்தை சீரழிக்கும் களைகள். 3.      கதிர் வீட்டிலிருந்து விடுதிக்கு அனுப்பப்பட்ட நாளில் கனவுகளில் சந்தோசப்பட பழகினான். எல்லா சந்தோசங்களும் தற்காலிகமானவை என்பதை பால்யம் உணர்த்திய நாளில் அவனுக்கு கனவுகளின் மீது வெறுப்புண்டானது. எதையெல்லாம் விரும்புகிறோமோ அதையெல்லாம் வெறுக்க நேரும் சூழல் வருந்தத்தக்கது. 4.      பசியால் நிரம்பிய பகலும், பயத்தால் நிரம்பின இரவுகளும் வாய்க்கப்பெற்ற விடுதிக் காலத்தில் வெளிச்சம் கூட பாதுகாப்பாய் இருந்ததில்லையென கர்த்தரிடத்தில் அவன் மன்றாடாத நாளில்லை. 5.      கர்த்தர் அவனிடம் பேசுவதுண்டு, அவன் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்ப