எனதருகில் சில மொழிகள்....

நூல் வெளியீடு குறித்து இருந்த ஆர்வமெல்லாம் டிசம்பர் 31 லேயே முடிந்து போனாலும் சின்னதாய் நண்பர்களின் அன்பிற்காக இன்னொருமுறை முயற்சித்துப் பார்க்கலாம் என்றிருந்தது. (அதிகபட்சமாய் எனது நண்பர்களென சொல்வதென்றால் மூன்று அல்லது நான்கு பேர்தான். என் எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன், நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று.... யாருக்குப் பொருந்துமோ இல்லையோ எனக்கு மிக நன்றாய் பொருந்தும்....)
புத்தக வெளியீடு குறித்து தொடர்ந்து நம்பிக்கையளிக்கும்படி பேசியதில் மயூ முக்கியமானவள். ஒரு வழியாக ஜனவரி 8ம் தேதி வெளியிட முடிவு செய்தாயிற்று.... யாரைக் கூப்பிடவேண்டும், எப்படி நிகழ்வை நடத்த வேண்டுமென்கிற எந்தக் கூறுவாறும் எனக்கில்லை.... ஆனாலும் என்ன நடக்கிறதோ நடக்கட்டுமென அமைதியாக இருந்துவிட்டேன்.... சக்தி ஜோதியின் நூலை வெளியிட வந்த வண்ணதாசனையே எனது நூலையும் வெளியிடச் சொல்லிவிட்டேன்...
எனது அதிர்ஸ்டம் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொஞ்சம் வாசகர் கூட்டம் தாரளமாய் இருந்தது.. இல்லாவிட்டால் நிலமை கொடூரமாகியிருக்கும்... எனது நெருக்கமான நண்பர்கள் வினோத், கலை, சதீஸ், விவேக், முகேஷ் வந்திருந்தனர். இவர்கள் யாருக்கும் இலக்கியத்தோடு வாசகன் என்பதைத் தாண்டி எந்த தொடர்பும் இல்லாதது எனக்கு நிம்மதி...
இதில்லாமல் கொஞ்சம் இலக்கிய நண்பர்களும் கலந்து கொண்டது சந்தோசம்.,... நல்ல வேளையாக சினிமாக்காரர்கள் யாரும் ஸ்டால் பக்கம் வரவில்லை., வந்திருந்தால் அவர்களையும் நிகழ்வில் கலந்து கொள்ளச் சொல்லும் துர்பாக்கியம் நிகழ்ந்திருக்கும்.
என் எழுத்தைக் குறித்த மற்றவர்களின் அபிப்பிராயங்கள் எப்பொழுதும் எனக்கு வினோதமாகத்தான் இருக்கிறது. பலரும் படித்துவிட்டு என் முகத்திற்கு நேராக ஒன்றையும் மற்றவர்களிடம் ஒன்றையுமாய் பேசுவது ஏன்?... படித்ததை என்ன உணர்கிறோமோ அதை நேரடியாக பதிவு செய்வதுதானே இலக்கிய நேர்மை.... உண்மையில் இது இந்த தலைமுறை எழுத்தாளனுக்குத்தான் இது இல்லையோ எனத் தோன்றுகிறது.
எழுத்தாளார் சோ.தர்மனிடன் என்னை அறிமுகப்படுத்தும் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு தமிழின் மிக முக்கியமான எழுத்தாளன் என என்னை அறிமுகப்படுத்துவதில் எந்த தயக்கமும் இருந்திருக்கவில்லை. நாஞ்சில் நாடன் தனது நண்பர்களின் முன்னால் எனக்கு விருப்பமான இளையதலைமுறை எழுத்தாளன் என சந்தோசமாக அறிமுகப்படுத்துகிறார். எஸ்.ராமகிருஷ்ணன் தனது பெரும்பாலான உரைகளின் எனது கதைகள் குறித்து பேசுகிறார்... முந்தைய தலைமுறை எழுத்தாளர்களிடம் இருக்கிற அந்த நேர்மை ஏன் இளையதலைமுறை எழுத்தாளர்களிடம் இல்லாமல் போகிறது?
நண்பன் நிலா ரசிகன் நாவல் மிக நன்றாய் வந்திருப்பதாகச் சொல்லிவிட்டு விமர்சனக்கூட்டம் யாராவது நடத்துகிறார்களா எனக்க்கேட்டார்.... எந்தக் காலத்திலும் எனக்கு ஒருவரும் நடத்த மாட்டார்களென்றேன். நீல நதிக்கும், யாக்கைக்கும் நடத்தியிருக்கவில்லை (கோவையில் இளஞ்சேரல் ஒரு கூட்டம் நடத்தினார் என்பதை வரலாற்றின் மிக முக்கியமான பதிவாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்..) ஒருவேளை என் நண்பர்கள் எதிர்பார்க்கிறபடி நான் இல்லாமல் இருந்திருக்கலாம்.
போகட்டும்....
நிகழ்ச்சி நன்றாக நடந்தது. வந்து கலந்து கொள்ள முடியாமல் போனாலும் எனது நண்பன் ஏகப்பன் கடல் கடந்து தனது அன்பான வார்த்தைகளால் சந்தோசப்படுத்தினான். அப்படியே மயூவும்... நாவலுக்கு விமர்சனம் எழுதுவதாகச் சொன்னாள். எனக்கு ஒருவகையில் சந்தோசம்.

குறிப்பு : உயிர் எழுத்தின் எல்லா நூல் வெளியீட்டு விழாவுக்கும் என்னைதான் தொகுத்து வழங்கவிட்டார்கள். ஆனால் ஒருவர் கூட அதை இதுவரை குரிப்பிட்டதாய்த் தெரியவில்லை.... ஒருவேளை நம்மபையன் தானே என்கிற அன்போ?..,...

Comments

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.