உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....

       பேருந்து அவர்களை இறக்கிவிட்டுப் போனபோது நிலம் முழுக்க வெயில் ஆக்கிரமித்து விட்டிருந்த்து. அவர்களின் நிழலைத் தவிர்த்து அங்கு ஒதுங்குவதற்கென நிழல் எதுவுமில்லை. இருபுறமும் மண்டிக்கிடந்த கருவேல மரங்களுக்குள்ளாக நீண்டு குறுகி தொலைவில் ஓர் புள்ளியைப்போல் மறைந்து விட்டிருந்த்து சாம்பல் நிறச்சாலை. பேருந்து போன தட்த்தை பின்பற்றியபடியே வந்த தம்பியை சித்தி தலையில் தட்டிக் கூப்பிட்டபோதுதான், தார்ச்சாலையிலிருந்து காட்டினூடாக நீண்டு கிடந்த மண்சாலையை அடையாளம் கண்டு கொண்டான். வாசுகி அக்கா அவர்கள் இருவருக்கும் முன்பாக சென்றுகொண்டிருந்தாள். செருப்பில்லாத கால்களோடு சித்தி வெயிலை எப்படிப் பொறுத்துக் கொள்கிறாள் என நினைத்து ஆச்சர்யங் கொண்டான்.


உனக்கு காலு பொசுக்கலையா சித்தி என அவன் கேட்பதற்கு முன்பாகவே சித்தி இவனைத் திரும்பிப் பார்த்து “காலு பொசுக்குதாடா?எனக்கேட்க அப்பா புதிதாக வாங்கித் தந்திருந்த ரப்பர் செருப்பை அவளிடம் காட்டினான். அது எப்பொழுது வாங்கப்பட்டிருக்கும் என்பது குறித்து அவள் கேட்க்க் கூடுமென காத்திருந்தவனுக்கு அதனை பொருட்படுத்தாமல் அவள் சென்றதில் வருத்தம்தான். முன்னால் சென்று கொண்டிருந்த வாசுகி அக்காவின் தலைக்கு மேலாக இரண்டு தட்டான்கள் பறந்து கொண்டிருந்தன. இவன் சத்தம் போட்டு சொல்ல நினைத்தான். அப்படிச் சொன்னாலுங்கூட அதுகுறித்து அவள் அக்கறை கொள்ளப் போவதில்லை. அவளுக்கு தட்டான்களை விடவும் வண்னத்துப்பூச்சிகளின் மீதுதான் அதீதப்பிரியம் இருந்த்து. அவள் சேகரித்து வைத்திருக்கும் இறந்துபோன வண்ணத்துப் பூச்சிகளிலிருந்து வெளிப்படும் வினொத நெடியை தம்பி ஒருபோதும் விரும்பியதில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு சித்தியோடு கோயிலுக்கு வந்திருக்கிறான். சமீப நாட்களாக அவள்மீது ஒரு விதமான வெறுப்பே இவனுக்குள் ஊர்ந்த்தேயன்றி முன்பு கொண்டிருந்த அன்பும் நெருக்கமும் துளியும் மிஞ்சியிருக்கவில்லை. அவள் இந்த வீட்டிற்கு புதிதாக வந்தபோது இவன்மீது காட்டிய அதீதப் ப்ரியத்தில் சதாவும் அவளுடன் இருக்கத் தோன்றும். இவனுக்குப் பிடித்தமான சினிமா பிலிம் வாங்கிக் குடுப்பதும் யானை விளையாடுவதுமாய் இவனோடுதான் நிறைய நேரங்களை செலவிட்டாள். வெளியில் கூட்டிப் போகும்போது வெள்ளரிக்காயையோ மாம்பழத்தையோ வாங்கிக் கொடுப்பாள். அந்த சித்திதானா இப்பொழுது இப்படி மாறியிருக்கிறாள் என நினைக்கிற பொழுது வேதனையாக  இருந்த்து. வாசுகி அக்காவிற்கு முன்பிருந்தே அவளைப் பிடிப்பதில்லை. ‘தலைக்கனம் பிடித்தவள்என அவள் சொல்லியதை நம்பியிருக்காத தம்பிக்கு இப்பொழுது உண்மையோ எனப்பட்டது.
அவளருகாமையை அவ்வளவு எளிதில் வெறுத்து ஒதுக்கித் தள்ள முடியாதுதான், சதாவும் அலைவுறும் அவளின் கண்களில் சொல்ல முடியாத்தொரு துயரமும் பேரன்பும் சுரந்து வழியும். நிதானித்துக் கவனிக்கையில்  அவள் முகம் தீட்டி முடிக்கப்படாத்தொரு ஓவியமென பொலிவற்றிருக்கும்.   இதனாலேயே அவளிடம் நெருக்கம் கொண்டிருந்த தம்பி முன்பைப்போல் இப்பொழுது அவளுடன் வெளியே வருவதை வெறுத்துவிட்டிருந்தான்.  சில சமயம் அவளாகவே இவனைக் கூப்பிடுகிற பொழுதும் படிக்க வேண்டுமென சொல்லிவிட்டோ அல்லது வேறு ஏதேனுமொரு காரணத்தை சொல்லியோ போக மறுத்துவிடுவான். அப்படியொன்றும் பெரியபடிப்பெல்லாம் படிக்கிற ஆளில்லை, ஐந்தாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தான். இவனுக்கு விருப்பமில்லை என்பதை சித்தியும் புரிந்து கொண்டிருந்தாளனெனினும் இவன் குழந்தமையை விரும்பியவளாய் ஒவ்வொரு முறையும் அவனைத் தன்னோடு கூட்டிப்போகவே விரும்பினாள். இன்றும்கூட அவள் கூப்பிட்டாளென அம்மா சொன்னபோது முடியவே முடியாதென மறுத்தவன், எவ்வளவு சொல்லியும் கேட்காமல் செமத்தியாக இரண்டு அடி வாங்கிய பிறகு அழுது கொண்டே போய் அக்காவிடம் சொன்ன பொழுது உம்மனா மூஞ்சியுடன் தானும் வருவதாக அவள் சொல்லவும்தான் இவனுக்கு ஆறுதலாக இருந்த்து. பேருக்கு மட்டுமே சித்தியோடு பேசும் வாசுகி எப்படி சம்மதித்திருப்பாள் என நினைத்தபடி அவள் முகத்தினை கவனமாக பார்த்தபோது முரட்டு விரல்கள் பட்டு சிவந்து போயிருந்தது. அனேகமாக அப்பாவினுடையதாக இருக்கலாம். நீண்டநேரமாக கண்ணாடியில் முகம் பார்த்தபடி வாசுகி அழுது கொண்டிருந்த்தைக் கவனித்த போது தம்பிக்கு தனக்கும் அழவேண்டும் போலிருந்த்து.

      சித்தி தோற்றத்திலேயேகூட மற்றவர்களிடம் நெருங்காதவளாகவே இருந்தாள். குட்டையாகவும், கருப்பாகவும், முகம் முழுக்க அம்மைத் தழும்புகளுமாய் விகாரமானவளாக இருந்தவளுடன் எவரும் நெருங்கிப் பேசிப்பழகி அவன் பார்த்த்தில்லை. உமா என்று அவளுக்கு பெயர் வைத்த தாத்தா இப்பொழுது உயிருடனிருந்தால் பெயர் வைத்த்தற்கான காரணத்தைக் கேட்டிருப்பான். ஏனெனில் அந்தப்பெயர் அழகானதாக இருந்தபோதும் அவளுக்குப் பொருத்தமில்லாமல் இருப்பதாய்ப் பட்ட்து. இந்த வீட்டிற்கு வந்த சில மாதங்களிலேயே அவளுக்கு தனியார் பள்ளியொன்றில் ஐயாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துவிட்டிருந்த்து. அதன்பிறகுதான், அவள்மீதான வெறுப்பு வீட்டில் யாவருக்குள்ளும் வளர்ந்து விட்டிருந்த்து. சமயங்களில் தனக்கான உணவை தானே சமைத்துக் கொள்பவளாகவும் முடிந்தால் கடைகளில் சாப்பிட்டுக் கொண்டும் இருந்துவிட்டு இந்த வீட்டிற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பதைப் போலிருப்பாள். வேண்டா வெறுப்புடனேனும் அதன்பிறகு அம்மாவோ அப்பாவோ அவளை சமாதானப் படுத்தினாள்தான் இயல்பிற்கு வருவாள். அவளின் மீதான கோபத்தை விடவும் ஒவ்வொரு மாதமும் அவள் கொடுக்கிற இரண்டாயிரம் ரூபாயை அவர்கள் இழக்க விரும்பாத்து காரணமாயிருக்கலாம். வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே அவள் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம் தென்பட்டிருந்தன. அவள் மனம் கொண்ட அத்தனை மாற்றங்களையும் தன்னுடலில் வெளிப்படுத்த துவங்கியவள் யாவரிடமிருந்தும் தன்னைத் துண்டித்துக் கொண்டவளாக இருக்க அவளுடலின் வாசனையுட்பட மாறிப்போயிருந்தது. கருத்து பளபளக்கும் ஒரே நிறத்திலான சேலைகளை மட்டுமே ஆவளுடன் அணிந்து கொள்கிறவளாகவும் அதற்கு ஈடான வகையிலயே வளையல், செருப்பு என எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்தாள். அதிக நேரம் அவளறையிலேயே இருந்த தம்பி ஜன்னல் வழியாகககூட பார்க்கதவனாகிவிட்டிருந்தான். எப்பொழுதும் அங்கிருந்து மட்டும் சாக்லெட்டின் வாசனை மிகுதியாக கசிவதாக சொன்னவனிடம் முதலில் அக்கறை கொள்ளாத அக்கா  ஜன்னலுக்கு வெளியே நிறைய சாக்லெட் தாள்களை கவனித்த தினத்தில்தான் நம்பினாள். அவ்வளவு சாக்லெட் காகிதங்களை பார்க்கிற யாருக்கும் ஒருவகையில் சித்திக்கு கிறுக்கு பிடித்து விட்டதோவென்றுதான் தோன்றும்.

      ஊரில் எவ்வளவோ கோவில்கள் இருக்கிற பொழுது கருவேலங்காட்டுக் குள்ளிருக்கிற இந்தக் கோயிலின்மீது இவ்வளவு பிரியமாக இருக்கிறாளென்பது ஒருவருக்கும் புரியாத்தாகத்தான் இருக்கும். இங்கு வருகிற ஒவ்வொரு முறையும் மூட்டைப் பூச்சி உடலெங்கும் ஊர்ந்து நெளிகிற அச்சங்கொண்டவனாய் தம்பி இருந்தான். பெருங்கோபத்துடன் கண்கள் உருள குதிரையில் நிற்கும் ஐய்யனார் சிலைக்குக் கீழாக மண்ணில் செய்யப்பட்டிருக்கிற நாய்களின் பிரம்மாண்ட தோற்றத்தினை நினைத்து பயந்தபடி பல இரவுகளில் தூக்கத்தில் மூத்திரம் பெய்து விட்டிருக்கிறான். அந்தக் கோவிலின் பிரம்மாண்டம் சுற்றிலும் நிலவிய மயான அமைதியில்தான் விகாரமானதொன்றாக நினைக்கச் செய்தது. தனியாகவே நிற்கு ஐய்யனாருக்கும் சித்திக்கும் பெரிய வித்யாசங்களொன்றுமில்லை, ஆனால் இவ்வளவு தனிமையில் எப்படி பயமில்லாமல் அவர்களால் இருக்க முடிகிறது.
      சற்றுதூரம் நடந்து வந்தவுடன் அவர்களால் கோவிலைப் பார்க்க முடிந்த்து. வெயில் பட்டு ஐய்யனாரைச் சுற்றி விழுந்திருந்த தண்ணீர் வளையம் நெருங்கிச் செல்ல செல்ல விலகி தெளிந்தவுடன் ஐய்யனாரின் கண்கள் மட்டும் சூட்டில் பெரிதானதைப் போலிருந்த்து மிளிர்வுடன். கோவிலுக்குப் பக்கத்திலிருந்த ஆலமரத்தைப் பார்த்துக்கொண்டே இவன் வந்து கொண்டிருக்க, இவர்கள் இருவருக்கும் காத்திராதவளாக அக்கா கோவிலை அடைந்து விட்டிருந்தாள். பீட்த்திற்கு அப்பாலிருந்த மண்சுவரில் போய் அக்கா உட்கார்ந்து கொள்ள, சித்தி அவளை கண்டுகொள்ளாமலேயே கோவிலுக்கு பின்னால் சென்றாள். இரண்டு பேருமே சாமி கும்பிடாமல் ஆளுக்கொரு திசையில் இருப்பதைப் பார்த்தவன் தன் செருப்பை கழட்டி வைக்க இடம் தேடியவனாய் நின்றான். சித்தி பின்னால் கொஞ்சம் தூரமாக சென்றிருக்க வேண்டும் அவளின் நிழல்கூட தெரிந்திருக்கவில்லை. வாசுகி வயர்க்கூடையை வைத்திருந்த  திண்டிற்குக் கீழாக செருப்பை செருப்பை விட்டவன்  தள்ளியிருந்த ஆலமரத்தில் கிளி இருக்கிறதாவென பார்ர்க்க ஓடினான். மரத்தில் கொஞ்சம் மேலேறி ஒரு கிளையை பிடித்துத் தொங்கியவனுக்கு சற்று தூரத்தில் முழங்கால் வரை சேலையைத் தூக்கி சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தாள். சில நொடிகள் இருவருமே ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, இவன் கீழே குதித்து கோவிலுக்கு ஓடினான். 

Comments

  1. தலைப்பில் உள்ள "சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்" என்பதை புரியமுடியவில்லை எழுத்தாளரே..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

நொண்டிக் கருப்பு