கடிதம்

அன்புடையீர்

வணக்கம். மரபார்ந்த தொல்கலைகளை (தோற்பாவை. கட்ட பொம்மலாட்டம், கூத்து)
மீட்டெடுக்கவும், தாய் வடிவம் மாறாது அவற்றை வளர் தலைமுறையினருக்கு கைமாற்றி
கொடுக்கவுமான செயற்பாடுகளை கடந்த நான்கு வருடங்களாக களரி சிரமேற்கொண்டு
இயங்கிவருகிறது. தொடர் முயற்சிகளில் மேலும் சில காரியங்களை செய்யவது
கருதியிருக்கிறது.

*1.
பாரம்பர்யம் மிக்க நிகழ்த்துக்கலையான கூத்தை, காண்முறை பயிற்சி
முகாம்கள்(நிகழ்த்துதல் வழியான பயிற்றுவித்தல்) மூலம் ஆர்வமுள்ள இளைய
கலைஞர்களுக்குக் கற்றுக் கொடுப்பது.
திட்ட மதிப்பு- ரூ50000
(
பதினைந்து மாணாக்கர், ஐந்து வாத்தியார்கள், கொண்ட இருபது நாள் முகாம்.)*

*2.
கையிருக்கும் கலையை, கலைஞர்களின் வாழ்வியலை ஆவணமாக்குதல். திட்ட மதிப்பீடு-
ரூ-50000
(
முதலில் தோற்பாவை கலைஞர் திருமதி. ஜெயா செல்லப்பன் குறித்த பதிவு)*
*
3.
கலைஞர்களால் கலைஞர்களுக்காகவே நிர்மாணிக்கப்பட்ட ஆவண காப்பகம்,நூலகம்,
தங்குமிடம் இணைந்த பயிற்சிபட்டறை
இப்படியாக ....................... (நீண்ட கால திட்டம்)*

எண்ணங்கள் செயலாக முழுமை பெற வேண்டுமெனில் அடிப்படை ஆதாரம் நிதி ஆதாரமே!
இவ்விடயத்தில் அக்கறையுள்ள அன்பர்கள் தங்களால் இயன்றளவு பண உதவி
செய்யவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்

இவண்
மு.ஹரிகிருஷ்ணன்.

*
குறிப்பு : *
நிதியளிப்போர் கீழ் காணும் வங்கி கணக்கு எண்ணில் பணம் செலுத்தலாம்.
kalari heritage and charitable trust.
a\c. no. 31467515260
sb-account
state bank of india
mecheri-branch
branch code-12786
trustees- m.harikrishnan, r.dhanabal

களரி தொல்கலைகள் &கலைஞர்கள் மேம்பாட்டு மையம் நடத்தும்
காண்முறை கூத்து பயிற்சி முகாம்.

*
நாள்: 28-5-2011
நேரம்: இரவு-மணி-9.00
இடம்: பச்சாயி அம்மன் கோவில்
சுண்ட மேட்டூர்
எடப்பாடி வட்டம்
சேலம் மாவட்டம்*
தொடர்புக்கு:
9894605371
9677520060

*
தொடக்க நிகழ்வு:*

*
கூத்து:  பதிமூன்றாம் நாள் யுத்தம்.
*
பங்கேற்பு:
திரு.அன்செட்டிப்பட்டி துரைசாமி
திரு. கூலிப்பட்டி சுப்ரமணி
திரு.ஏகாபுரம் சுப்ரு
திரு. மாணிக்கம்பட்டி கணேசன்
திரு. அம்மாபேட்டை கணேசன்
திரு.சின்னபையன்
திரு. கோவிந்த சாமி
திரு. தானாபதியூர் அரச்சுனன்
திரு. துத்திபாளையம் தங்கவேலு
திரு.செல்வம்
திரு.ஐயந்துரை
திரு. மாணிக்கம்
திரு.ரமேஷ்
திரு.காவேரி
திருமிகு.கனகு

*
நிகழ்வுதொடர்ச்சி:*

*
கூத்து பயிற்சி:*
1-6-2011
முதல் 20-6-2011வரை
இடம்:
ஏர்வாடி
குட்டப்பட்டி-அஞ்சல்
மேட்டூர்- வட்டம்
சேலம்-மாவட்டம்
636453
தொடர்புக்கு:
9894605371
9677520060
04298-264018

நிகழ்த்துப் பனுவல், நெறியாளுகை, அடவினங்கள்:
அம்மாபேட்டை கணேசன்.


பயிற்றுநர்கள்:

திரு. கூலிப்பட்டி சுப்ரமணி
திரு.ஏகாபுரம் சுப்ரு
திரு. மாணிக்கம்பட்டி கணேசன்
திரு. வடிவேல்
திரு. கோவிந்த சாமி

மிருதங்கம்:
செல்லப்பன்
பெருமாள்

முகவீணை:
செல்வம்
குமார்

ஹார்மோனியம்:
சின்னுச்சாமி

தாளம்:
கோவிந்தசாமி

Comments

Popular posts from this blog

மன்னார் பொழுதுகள் : சாபத்தின் வடுக்களை மீறி எழும் நட்பின் கதைகளும் குருதிக்கறைப் படிந்த மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களும்

நொண்டிக் கருப்பு

வெயிலுக்கு சுமதி என்று பெயர்.