வலசையில் வெளியான கதை...
முதல் தகவல் அறிக்கை. லக்ஷ்மி சரவணக்குமார். க/எ 108/ 66 நாதமுனி தெருவில் வசித்து வந்த (லேட்) பெரியமாயத் தேவரின் மனைவியான திருமதி.ஒச்சம்மாள் ( வயது 76 ) கடந்த 14.7.2008 அன்று அதே தெருவில் மேற்கண்ட இலக்கத்தில் இருக்கும் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் கேள்விப்பட்டு 15. 7. 2008 காலை ஆறு மணியளவில் தலமைக் காவலர்கள் அ.சுப்பிரமணி மற்றும் ரத்தினம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அப்பொழுதுதான் வீட்டுக் கதவை உடைத்து இறங்கி இருந்தார்கள். கிழவி நல்ல கருத்த தேகம், பல் இன்னும் வலுவாய் இருக்கிறது. செத்து நீண்ட நேரமாகியிருந்ததில் நாக்கு நீலமாகிவிட்டது. இது விசயமாய் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் வழக்கு 15.7.2008 அன்று பதிவு செய்யப்பட்டது. திருமங்கலம் நகர் அரசு மருத்துவர்கள் திரு . எஸ்.அழகன் மற்றும் திருமதி மணிமேகலை ஆகியோரின் பிரேத பரிசோதனை மற்றும் தீவிர விசாரணைக்குப் பிறகு ஒச்சம்மாள் அவர்களின் மரணம் குறித்த முதல் தகவல் அறிக்கைகள் பின்வருமாறு. ( பிரேத பரிசோதனை அறிக்கை தனியாக இணைக்கப...