எங்களது சிறிய நகரில் இப்பொழுது கடவுளர்கள் இல்லை
… தமிழ் சினிமா ரசிகமனோபாவத்தில் நுழையும் சாதி அரசியல். உலகின் வேறெங்கும் இல்லாத எவ்வளவோ அம்சங்கள் தமிழ் சினிமாவில் மட்டுமே பிரத்யேகமாக இருக்கும். நாயகியுடன் பாடும் முதலிரவு பாடல் காட்சியில் ஐம்பது பெண்கள் உடன் ஆடுவார்கள், ஏன் எதற்கென்று நாம் ஒருபோதும் கேட்க முடியாது. நாயகன் சோற்றுக்கு இல்லாத பரதேசியாய்க் காட்டப் படுவான், ஆனால் டூயட் பாடுவது மட்டும் நிச்சயம் ஏதாவது வெளிநாட்டு லொக்கேஷனாகத்தான் இருக்கும். இப்படித் தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் செய்கிற எவ்வளவோ விசயங்களை நாம் இன்னும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப்போதைக்கு இவற்றையெல்லாம் மன்னித்து விட்டாலும் ஒரு விசயத்தில் மிக அவசரமாக அல்லது அத்யாவசியமாக நாம் இவர்களை மாற்றச் செய்ய வேண்டும். வேறு எந்த மொழியிலும் இவ்வளவு தூரத்திற்கு நாயகர்களின் வழிபாடு இருக்குமா என்பது சந்தேகம். முன்னூறு அடிக்கு கட் அவுட்கள், பாலபிசேகம், இன்னும் பார்த்தாலே பதைபதைக்கும் எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன. சரி ஏன் இவ்வளவையு...