காலச்சுவடு இந்த இதழில் உப்பு நாய்களுக்கு காசி மாரியப்பன் எழுதியிருக்கும் மதிப்புரை
காத்திரமான விளிம்புநிலை நாவல்
க.காசிமாரியப்பன்
ஜி.நாகராஜனும் ஜெயகாந்தனும் இருளில்புழங்குவோரை அச்சுக்குக் கொண்டுவந்தாh;கள் நாஞ்சில்நாடன் ‘எட்டுத்திக்கும்மதயானை’யைச் செலுத்தினார;. பகல்வாராப் பெண்களை இமயத்தின் ஆறுமுகம் கண்டார;. இன்னும் சிலா; முயன்றனா;. மாறிவரும் பொருளியல்பண்பாடும் உலகளாவியஅதிகாரமும் தொழில்விரிவும் குற்றவுணா;வுகளைககுறைத்த மட்டுமீறிய பணப்புழக்கமும் நடப்பு வாழ்வின் பாதகங்களைப் பெருக்கிவிட்டன. இத்தகைய நவீனவாழ்வின் பாpமாணங்களை ஜெயகாந்தனிடமோ நாகராஜனிடமோ காணமுடியாது. குற்றம், உடலரசியல் பின்புலத்தை உட்சொpத்த மையமானநோக்கமும் அவா;களுக்கில்லை. லகூ;மி சரவணக்குமாரின் எழுத்து மேற்சொன்னவற்றின் மேல்நின்று காண்பதால் தனித்துத் துலங்குகிறது. பெருநகரவெளியில் நிகழும் குற்றங்களையும் வாதைகளையும் காத்திரமாக முன்வைக்கும் லகூ;மி சரவணக்குமாரின் ‘உப்பு நாய்கள்’ பதைபதைப்பையும் பெருஞ்சலனத்தையும் மனத்தில் உண்டாக்குகிறது: வசீகரமான நகா;சார;மொழியும் நாவலில் வெளிப்படும் வாழ்க்கையும் தரும் சஞ்சலம்.
;கழிசடைகள்’ எனப்படும் மனிதா;களின் குற்றங்களை இவ்வளவு உக்கிரமாக இதுவரை யாரும் சொன்னதில்லை. கஞ்சா அபின் கடத்துதல், குதப்புணா;ச்சி, வாய்ப்புணா;ச்சி, பெண்டாட்டியைக் கூட்டிகொடுத்தல், சிறுநீரகம்அறுத்தல், குறியினைத்துண்டித்தல், ஆபாசப்படமெடுத்தல், கைகால்களை வெட்டிக் கொலை செய்தல், குழந்தைகளைப் பாலியல் தொழிலுக்குக் கடத்துதல் எனப் பொது மனத்துக்கு உவப்பில்லாக்குற்றங்கள் பல நாவலை நகா;த்துகின்றன, குற்றங்களைச் செய்பவர;களுக்கு அழுகையும் கண்ணீரும் உண்டென்றபோதிலும் தொழில் குறித்துப் பெரிய வருத்தங்களோ குற்றவுணா;வோ இல்லை. குற்றமெனும் தெய்வம் எல்லாம் தரும்.
இல்லம்சார;ந்த புழங்குவெளிகளிலும், அலுவலகங்களிலும் மேலோர; நிலங்களிலும் கிடந்த நாவலைக் கரிசல் காடுகளுக்கும் இட்டேரித் தடங்களுக்கும் இழுத்துச்சென்ற வரலாற்றுக்குப்பின்னரே புறக்கணிக்கப்பட்ட வெளிகளை அடைய இயன்றது. இதற்குத் தொண்ணூறுகளில் பெரிய அளவுக்குப் பேசப்பட்ட விளிம்புநிலைக் கருத்துக்கள் அடிப்படைகளைத் தந்தன.
‘உப்பு நாய்கள்’ நாவல் இயங்குவெளி மாநகரப்புவிப்பரப்பைச் சுற்றுகிறது. இருட்பொழுதுகளே பிரதானம். குற்றங்களை உண்டாக்கும் பெருநகரம் பல்திரள் ஜனக்கூட்டம், பசி, அதிகாரப் போட்டிகள், பிறழ்வு, பெருங்காமத்தைக் காட்டும் நவீனமொழி குற்றங்களுக்கான ஏற்பினை மனப்பரப்பில் ஏற்றிவிடுகிறது. சரவணக்குமாரின் வல்லமையும் அதுதான்.
எல்லாப் பாதைகளும் மாநகரத்தில் நிறைவடைகின்றன ஆந்திராவின் ‘ஜம்பலமடுகு’விலிருந்து பஞ்சம்பிழைக்க சித்தாள் வேலைக்கு வரும் ஆதம்மாவின் குடும்பம், பாக்கட் அடித்துவாழ மதுரையிலிருந்து புறப்படும் செல்வியின் குடும்பம். ராஜஸ்தான் ஜெய்சால்மீரிலிருந்து சென்னைக்கு வாழ்க்கைப்படும் சேட்டுப்பெண் ‘pவானியின் குடும்பம். இவா;களுடன் ஆh;மினியன் சா;ச் அருகே வாழ்வைத் தொடங்கும் சம்பத். இவா;களின் ஓட்டமே நாவலின் கதை. இவா;களில் ‘pவானியும் சம்பத்தும் சந்திக்கிறாh;கள். மற்றவா;கள் கதை தனித்தனி. பல மட்ட வாழ்க்கையைப் பிரதிநிதித்துவப்படும் இவா;களில் யாருக்கும் நிறைவில்லை.
அச்சம் தருகிறது நகரம், பசியைப் போக்கியபோதும். தீமைகளின் உருவகமல்ல. குற்றங்களின் குறியீடு. வழவழப்பான வி‘ப்பாம்பைப் போல வேகமும் சீறலும். ஆனால் பெருநகரத்தின் மீது எந்தவொருகுற்றச்சாட்டையும் வீசாமல் கட்டடங்களையும் கடலையும் ரசித்து விளையாடும் குழந்தை ஆதம்மாவின் பேச்சற்ற மொழிக்குக் கட்டுப்பட்டு நகரப்பாம்பு பம்முகிறது, நெளிந்து சொல்பேச்சு கேட்கிறது. அடங்காமல் வால் சுழற்றுகிறது பிறருக்கு. நல்ல வாழ்க்கைக்கும் சொந்த இடத்திற்கும் மீள்வதற்கும் ஆசை இருக்கிறது பலருக்கு. சித்தாள் வேலையில் வயிற்றைக்கழுவும் ராஜீவின் பெண்டாட்டி ஜம்பலமடுகுக்குப் போய்ச்சேர விரும்புகிறாள். குற்றங்களைத்தவிர வேறொன்றுமறியாத சம்பத்துக்கு வீட்டில் அமைதியாய்ப்படுத்திருப்பது சந்தோ‘மாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது. பாக்கட் அடிக்கும் செல்விக்குக் குழந்தை பெற்று வாழும் சராசாp வாழ்க்கை மேல் நாட்டம். நிலைவெளியான வீடும் இயக்கம்குறைந்த ஊர;; அமைதியினையும் பொது வெளிகளான தேவாலயம், ரயில்வே ஸ்டேசன், இயங்குவெளியான ரயிலும் பிறவும் வெறுப்பினையும் தருவதாக நாவல் காட்டுகிறது.
எந்தக் கோட்பாட்டையும் வைத்து அளக்கமுடியாத நிகழ்வுகள் என்ற போதிலும் புhpந்துகொள்ளமுடிகிறது. தன்னுடன் பஸ்ஸில்வரும் செல்வியின் மாh;பைத்தடவுபவனின் குறியை ஆணியால் இறுக்குகிறாள் தவுடு. அம்மாவுடன் கூடும் மணியின் சாமானைக் கிரைண்டா;கல்லால் அடித்துப்பிய்க்கிறான் சம்பத். புரு‘ன் விளக்குப்பிடிக்க தன்மீது ஏறும் ஒரிஸ்ஸாக்காரனின் உயிh;த்தடத்தை வாயால் கடித்துத்துப்புகிறாள் ஆதம்மாவின் அம்மா. பல பெண்களோடு தொடா;பு கொண்டுள்ள சம்பத்துக்குத் தன் அம்மா மணியுடன் கொள்ளும்உறவு தகாததாகப் படுகிறது. மணியின் கையையும் குறியையும் துண்டித்தபிறகு சேலையை உருவித் தாயை அம்மணமாக்குகிறான். இவை அதிh;ச்சி மதிப்புகளுக்காக அன்று. மிகுகாமத்திற்கு மனிதா;கள் தரும் மாpயாதையான தண்டனை.
காமத்தையும் உடல்வாதையையும் ஓh;மையுடன் லகூ;மி சரவணக்குமார; இணைக்கிறாh;. கொடுங்காமம், பெருங்கோபம். ‘pவானி - மகே‘;, இவாஞ்சலின் - சம்பத், செல்வி - முத்துலட்சுமி, ஆதம்மாவின் அம்மா - ஒhpஸ்ஸாக்காரன், சம்பத்தின் அம்மா - மணி போன்றோh; உறவுகளில் உடலைவதைப்பதும் துய்ப்பதும் சினங்கொள்ளுவதுமான புள்ளிகள். சொத் சொத் என அறைகிறாh;கள். வெறிகொண்ட விலங்கெனப் பிணைகிறாh;கள்.
காமத்தில் கிளரும் உடற்சூடு தகிக்கும் சூடு, எhpயும் உடல் எல்லா உறவுகளின் போதும் சொல்லப்படுகிறது. காமத்தையும் நகரத்தையும் பாம்பெனக் காண்பதும் வாசனைகளாக நுகா;வதுமான செயற்பாடுகள் நாவலில் உள.
அடைபட்ட வெளிகளில் தனித்து நிகழும் மரபுப்புணா;ச்சிக்கு மாறாகப் பகற்பொழுதுக் கடற்கரைப் பெரும் மணற்பரப்பில், இருள்சூழ் பாலக்கீழ் வெளியில், மருத்துவமனைச்சுவா; மறைப்பில், வாகனமேற்பரப்பில், பலா;கூடும் திரையரங்கில் வெளிப்பட்டு பொங்கி வெளியேறும் காமம். காமத்தின் பொருட்டே கொலை செய்யப்படும் பாதிரியார;, பாஸ்கா;, ராஜீவ். குறியை இழக்கும் மணி. குற்றத்தில் பெரிது கொடுங்காமம் போலும்.
குற்றங்களை வாழ்க்கையாகக் கொண்டவா;களுக்கும் தாh;மீகங்கள் இருக்கின்றன. குழந்தைகளிடம் திருடக்கூடாது எனும் செல்வி, பாப்பாத்தியிடம் திருடினால் பாவமில்லை என நினைக்கிறாள். அவளுக்குத் தொழில்செய்யும் பெண்களிடம் இருந்து பெறும் பணம் தொந்தரவைத் தருகிறது. முத்துலட்சுமியுடன் கட்டிலில் புரண்டாலும் ‘புரு‘ன் பொண்டாட்டி உறவென்பது படுத்து எந்திhpக்க உண்டாக்கின உறவல்ல’ என்பது செல்வியின் எண்ணம். ‘சம்பத்துக்கும் அவன் செய்யும் தொழிலைத்தாண்டி சில நோ;மைகளிருந்தன. குழந்தையைக் கடத்தும்போது வாழ்வில் முதன்முறையாகத் தப்பு செய்து விட்டோமோ என்ற வருத்தம் மனதை அhpத்துக் கொண்டிருந்தது’.
நாய் அறுத்து ஹோட்டல்களுக்கு விற்கும் கோபால், நாய்களைத் தேர;வு செய்யும்போது கவனமாக இருக்கிறான். ‘சீக்கில்லாத நாயாக இருக்கவேண்டும் சின்னதொரு காயமோ உடல் சுருங்கியோ இருந்தால் கோபால் நாய்க்குப் பதிலாய் அதைத்தூக்கி வந்தவனைக் கட்டிவைத்து உதைப்பான். சாப்பிடறவனுக்கு நல்லதா குடுக்கணும்டா இதத்துன்னா என்னாவும்’ என்பது அவன் அக்கறை. அறம்.
செறிவானகட்டமைப்பையும் தேர;ந்த சொற்சேர;க்கையும் நாவல் கொண்டிருந்த போதிலும் எழுத்துப்பிழைகள், இடறலான தொடா;கள், ஒரு, ஒரு என ஓயாமல் எல்லாவற்றிலும் இடம்பெறும் முன்னொட்டு தவிh;க்கப்பட வேண்டியவை எல்லோரிடமிருந்தும் முன்னெப்போதை யும்விட, விறைப் பெடுத்துக், கவனிக் கிறாளென எனச் சொற்களைச் சீh;பிhpப்பது அச்சுப்பிழையாகக் கூடும். மொழி மூலம் வாழ்வை விவாpக்கும் படைப்பாளிகள் அதில் தோ;ச்சி பெறுவது தவறன்று.
ஆh;மீனியன்சா;ச் எனும் குற்றங்களின் கூடாரம். கூப்பிட்டவுடன் வருவதற்காகக் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு கன்னியாஸ்திரீகள் காத்திருக்கிறாh;கள் என நாவலைப் படிக்கும்போது தோன்றுகிறது. தற்புணா;ச்சியின் போது சாத்தானைப் போலிருக்கும் இவாஞ்சலின் ஜீஸசைப் பார;த்துக்குருதி பெருக வன்மையாக உறுப்பைத் தூண்டுகிறாள். éரணமான சந்தோசத்தை அப்பொழுது உணா;ந்தாள் எனக் காட்டுவது எதன் பொருட்டு?
‘ஒரு மனிதன் தன் ரகசியங்களை அளவுக்கு அதிகமாகப் பாதுகாக்க நினைக்கும்பொழுது அவன் தனக்கான முடிவுகளை எளிதில் தேடிக்கொள்கிறான்… அதிகாரமில்லாதமனிதன் அரை மனிதன் எனப் பல தொடா;களில் வழியும் ஆண்மையைத் தன்மையை லகூ;மிசரவணக்குமார; கண்டுகொள்ள வேண்டும்.
‘அதிகமாய் குற்றவுணா;வு கொள்கிற மனிதா;கள்தாம் அதிகமாய் குற்றம் புhpயத் தூண்டப்படுகிறாh;கள். குற்றங்களைச் செய்து திருப்திகொள்பவன் மேலதிகமான குற்றங்களைச் செய்யத் தவிர;க்கின்றான்’ என்கிறாh; நாவலாசிhpயா;. இப்பிரகடனத்தை மெய்ப்பிக்கும்சான்றுகள் நாவலில் ஏதுமில்லை: பிரகடனங்கள் தேவையுமில்லை. தூய குழந்தைகளைப்புணரும் பாதிரி, குழந்தைகளைக் கடத்தும் சுந்தா;, பிச்சைக்காரிகளை நோண்டும் பாஸ்கா; எனப்பலருக்கு அகாலமரணங்களைப் பாpசளிக்கிறார; நாவலாசிhpயர;. ஆயின் குற்றவுணா;வு கொண்ட தவுடு, ஆதம்மாவின் அம்மா, குழந்தையிடம் அன்பு காட்டும் ஆh;த்தி குற்றமிழைக்காதவர;கள் மீது கருணை காட்டுகிறார;.
குழந்தைகள் மீதான பரிவை முன்னிலைப்படுத்த நாவல் விரும்புகிறது. சித்தாள் வேலைபார;க்கும் குழந்தை ஆதம்மா நிர;க்கதியாக நிற்கும்போது தன் வீட்டில் தங்க வைக்கும் ஆர;த்தி. தவுடு கருவுற்றிருப்பதை அறிந்தவுடன் அவளைப் பார;க்கத் துடிக்கும் செல்வி குழந்தையைக் காப்பாற்ற ஊரைவிட்டு ஓடும் ஆதம்மாவின் அம்மா எனத் தாய்மைéhpக்கும் பெண்கள், அன்பு செய்வதைத் தவிர எந்த எதிர;பார;ப்புமில்லாத ஆதம்மாவுக்கு எல்லாரும் ஆர;த்தியைப் போல் அன்பு செய்யப்பட வேண்டியவா;கள்’ என்ற தொடரெல்லாம் அன்பிற்பாற்பட்டதுதான்.
சாகஸத்திற்காகவும் சுவராசியத்திற்காகவும் செய்யப்படுபவை குற்றங்கள் என்ற ஆசிhpயர; கூற்று அதீதமாகப்படுகிறது. ‘குற்றங்களென்னும் கலை’ என்ற தொடா; தரும் கவித்துவம் கருணையைக் கொலை செய்கிறது.
வல்லரசுகள், தாய்நாடு, பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கும் குற்றங்களை நீக்கிய சமூகத்தை நிறுவுவதற்கான சாத்தியங்கள் இல்லை. ஆயின் குற்றங்களை வற்புறுத்தும் பொதுப்புத்திக்கு எதிராக நிற்பதற்கு மாறாகக் குற்றங்களைக் கொண்டாடுதல் எங்ஙனம் சாpயாகும்? உடல் நாசம், உயிரழிவு, கண்ணீh;, ஆதரவு இழக்கும் குழந்தைகள், சடலங்கள் மேல் பறக்கும் குற்றக்கொடியை வணங்க முடியவில்லை.
திரளை திரளையாய் சொற்களைத் திரட்டி வானில் எறியும் மினுக்கமான éசாரிகளின் சக்கைகளைத் தின்று வாழும் உயிh;க்கு ல‘;மி சரவணன் தருவது சாரம்மிக்க காரம்.
உப்பு நாய்கள் (நாவல்), லகூ;மிசரவணக்குமார;, உயிர;எழுத்து பதிப்பகம், திருச்சி - 1. டிசம்பா; 2011, ப.252 விலை ரூ.180.
Comments
Post a Comment