சொல்வனம் இணைய இதழில் கிருஷ்ண பிரபு எழுதி இருக்கும் மதிப்புரை.
உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார் கிருஷ்ண பிரபு | இதழ் 81 | 28-01-2013| அச்சிடு நீல வானின் திட்டுத் திட்டான வெண்மேகங்கள் அங்குமிங்கும் கொட்டிக் கிடப்பதைப் போலவே, நகரம் சார்ந்த மனித உறவுகள் தேவைக்கதிகமான இடைவெளியில் உருக்கொண்ட தனித் தீவுகள் போல் சிதறிக் கிடக்கின்றன. எவ்வளவிற்கு எவ்வளவு இருப்பிடங்கள் குறுகியதாகவும் நெருக்கமானதாகவும் இருக்கின்றனவோ, அவ்வளவுக்கு நேரெதிர் முரணாக சகமனித இடைவெளி என்பது சமுத்திரம் போல் நீள்கிறது. அருகில் இருந்தும் அன்னியர்களே என்ற மன நிலையை நகரங்கள் சுலபமாக ஏற்படுத்தி விடுகின்றன. ஆகவேதான் நகர மனிதர்கள் தம்மை நிலை நிறுத்திக்கொள்ள மனிதம் கடந்த எல்லைக்குச் செல்வதற்குக் கூட தயங்குவதே இல்லை. என்றாலும் வாழ்வின் கோரத்தை வெளிப்படுத்தும் அதே அயோக்கிய முகங்கள்தான் அன்பின் ஊற்றையும் சுரக்கின்றன. போலித்தனங்களால்தான் சமூக இருப்பானது நிலைக்கும் என்று வரும்பொழுது எமாற்றுக்காரர்களையும், ஜேப்படித் திருடர்களையும், போக்கிரிகளையும், ஊழல்வாதிகளையும், குண்டர்களையும், சமூக விரோதிகளையும் உலகமானது சந்தித்தே ஆக வேண்டும். எனினும் அவர்களும் சமூகத்தின...