Posts

வெயிலுக்கு சுமதி என்று பெயர்.

Image
                       கூடியிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த வெயில் காலத்தின் சற்றே சலிப்பு மிக்கதொரு மாலையில் இந்த பேச்சையும்  கேட்க நேர்ந்துவிட்ட துரதிர்ஷ்டவசத்துக்காய் ஒருமுறை மன்னிப்பைக் கோருகிறேன். அடிப்படையில் நானொரு புனைவெழுத்தாளன். எல்லாவற்றையும் கதைகளாகப் பார்க்கப் பழகியவன். கேட்கிற பேசுகிற எல்லாவற்றிலும் கதைகளின் கிளைகளைத் தொடர்ந்து செல்லவே விரும்புகிற எளிய மனிதன். இன்னொரு வகையில் சொல்லப் போனால் கவிதைகள் எழுத முயன்று தோற்றுப் போனவன். ஆனாலும் எல்லாக் காலத்திலும் கவிதைகளின் மீதான காதலுண்டு. கவிதைகளின் வழியாகத்தான் எனது கதைகளுக்கான மொழியை நான் தேர்ந்தெடுக்கிறேன். சொற்களை இரவல் வாங்குகிறேன். ஏனெனில் கவிதை எப்பொழுதும் ஒரு மொழியை வழிநடத்திச் செல்லும் மகத்தான வடிவமாய் இருக்கிறது. கவிதைகளின் குறைபாடுகள் சார்ந்து பல சமயங்களில் நான் கடுமையாக பேசுவதும் அப்படி பேசுவதற்காக உதை வாங்க நேர்வதும் கவிதைகளின் மீதான ப்ரியங்களால் தான். போகட்டும். நான் வெக்கையின் நறுமணம் மிக்க கவிதைகள...

ஒரு நேர்காணல்

கவிஞர் நண்பர் றியாஸ் குரானாவுடனான எனது உரையாடல். கொஞ்சம் விலாவாரியான கூடவே சுவாரஸ்யமான கேள்வி பதில்கள். அவரது வலைதளத்தில் தொடர்ந்து முக்கியமான எழுத்தாளர்களை நேர்காணல் செய்து வருகிறார். அதன் வரிசையில் இதுவும். நேர்காணலை முழுமையாக வாசிக்க இணைப்பில் செல்லவும். http://maatrupirathi.blogspot.in/2016/01/blog-post_18.html

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

Image
அருவருப்பின் வசீகர நிழல். 2002 ம் ஆண்டின் பிற்பகுதியில் மொழிபெயர்ப்பாளர் என்.நாகராஜனுடன் ஒரு உரையாடலின் போதுதான் முதல் முறையாக தஞ்சை ப்ரகாஷ் என்ற பெயரைக் கேள்விப்பட்டேன். அப்பொழுது 17 வயது. ஜானகிராமன், எம்.விவெங்கட்ராம், நா.பிச்சமூர்த்தி, கு.பா.ரா என வாசிப்பின் வழியாக அதிகம் சேமித்திருந்தது தஞ்சை நிலத்துக் கதைகளையே. தி.ஜாவின் எழுத்திலிருந்த எளிமையும்,கவித்துவமும் மெல்லிய காமமும் அவரை ஆதர்ஷமென அழுத்தமாக நம்பச் செய்த பருவம். ப்ரகாஷின் கரமுண்டார் வீடு நாவலை சிலாகித்துப் பேசிய அவர் ‘இதைப் படித்துவிட்டு வா, பிறகு பேசுவோம்.’ என இரண்டு மூன்று அட்டை போட்டு பாதுகாத்த அந்தப் புத்தகத்தைக் கொடுத்தார்.  அந்த நாவலின் முதல் சில பக்கங்களிலேயே அதைத் தொடர்ந்து வாசிக்க முடியாதபடி அனேக  நெருடல்கள். முக்கியமாய் அதன் மொழி. முழுக்கவும் தஞ்சை வட்டார பேச்சு வழக்கிலேயே நகரும் அந்நாவல் அதுவரையிலுமான தஞ்சை எழுத்தாளர்களின் கதைமொழியிலிருந்து தன்னை முற்றிலுமாய்த் துண்டித்துக் கொண்டிருந்தது. அந்நாவலை நிதானமாக வாசிக்கத் துவங்கியபின், எழுத்தின் வழி முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் காத்து வைத்திருந்த அறம் அ...

நானும் உயிரெழுத்தும்.

Image
சிற்றிதழ்களின் வழி எழுத்தை அறிந்து கொள்வது பதின் பருவத்தில் அலாதியான மயக்கம். எல்லாவற்றையும் கேள்வி கேட்கவும் மறுதலிக்கவுமான அபரிமித துணிச்சல்கள் வாசிப்புத் தரும் இரவலாய் ஒரு வாசகனுக்குள் இறங்கிவிடுகிறது. அப்படியாகத்தான் நான் எழுதத் துவங்கிய நாட்களில் உயிரெழுத்தும் எனக்கு அறிமுகமானது. உயிரெழுத்தின் முதல் இதழ் வெளியான ஒரு சில மாதங்களுக்கு முன்பாகத்தான் நான் லஷ்மி சரவணகுமார் ஆகியிருந்தேன். அதற்கு முன்பு வேறு வேறு பெயர்களில் இலக்கிய களமாடிய வரலாறு அத்தனை சுவாரஸ்யமில்லை. லஷ்மி சரவணகுமாரின் மூன்று சிறுகதைகள் பிரசுரமானதின் வழி எழுத்தாளராக தனக்குத் தானே அறியப்பட்டுக் கொண்டிருந்தார். அல்லது ஏற்கனவே அவரைத் தெரிந்த சிலருக்கு தெரிந்ததொரு கூடுதல் விசயமாய் அந்த சங்கதிகள் இருந்திருக்கக் கூடும். வாழ்வின் யதார்த்தம் ஆசைக்கு எழுதிய வரை போதுமென பின்னிழுக்க, விடாது மனம் தளரா வேட்கையுடன் எழுதிக் குவித்த நாட்களவை. உயிரெழுத்தின் முதல் இதழில் சிறுகதைகளுக்கு சிறப்பான கவனம் கொடுக்கப்பட்டதில் உற்சாகம் பிறந்தது. ‘ஆஹா இது நமக்கென இதழ். அந்த களிப்பு எழுதிக் கொண்டிருந்த கதைகளிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்து வேகம...
Image
” நவீன மனிதன் என்பவன் தன்னைக் கண்டுபிடிக்க முயல்பவன், நவீனத்துவம் அவனை அவனது இருத்தலில் இருந்து விடுதலை செய்யவில்லை.” -     மிஷெல் ஃபூக்கோ. மிகப் பழக்கப்பட்ட ஒரு மொழியில் சொல்லப்பட்ட கதைகளிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு கதை சொன்னவர்கள் தமிழில் இதற்கு முன்னும் நிறையபேர் இருக்கவே செய்கிறார்கள். தொண்ணூறுகளில் பின் நவீனச்சிறுகதைகள் மாஜிக்கல் ரியலிஸத்தையும் தாண்டி வேறு வேறு கூறுகளுடன் இயங்க ஆரம்பித்தன . நேரற்ற எழுத்து , வகைமை தாண்டிய எழுத்து , பகடி செய்தல் , தரப்படுத்தப்பட்ட விழுமியங்களைக் கேள்விக்குள்ளாக்குதல் போன்ற பலவிதமான முயற்சிகள் எழுத்தில் மேற்கொள்ளப்பட்டன .  ஜெயமோகன் போன்றவர்கள் தங்கள் சிறுகதைகளில் வடிவப் பரிசோதனைகளை மேற்கொண்டார்கள் . ஆனால் இவர்களின் பிரதிகளில் தங்கள் காலத்தின் விழுமியங்கள் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை .  அந்தவகையில்   அவை வெறும்   மிகையுணர்ச்சிப் பிரதிகளாக   மட்டுமே நின்று விட்டன .   பகடி , நகைமுரண் , அங்கதம் ஆகிய கூறுகளின் மூலம் வாசகனின் சமநிலையைக் குலைக்கும் நவீன கதை...

துய்ப்பு எந்திரத்தின் ஒளிர்நீல விளக்கும் நறுமணத் தைலம் படர்ந்த வாசனைக் கத்திகளும் – நேசமித்ரன்

Image
க லைஞன் என்பவன் தான் சார்ந்த சமூக அமைப்பின் மேலும் ஒரு ஒத்திசைத்துகள்தான் என்றானால் அவனது மீச்சிறு உராய்வே அவனது படைப்புலகு. குற்றங்களுக்கான தகவுகளை பெருக்கிக் கொண்டே தண்டனைகளுக்கு நம்முடலை பழக்கும் பன்முனை அதிகாரமையங்கள்  நம்மை ’வளர்த்துப் பழக்கும் ’ (Taming ) வாழ்முறைக்கு எதிராய் எழும் ‘அவசியத்தீங்கே’ (Necessary evil) கலை ஆகிறது. ஆசிரியரின் இந்த தேர்ந்தெடுத்த கதைகள் எழுதப்பட்ட காலத்தை முன்னிருத்திப் பார்க்கையில் நுகர்ச்சியை கொண்டாடும் நுகர்ச்சியின் படிநிலைகளை ஆராதிக்கும் நுகர்ச்சியை அருவருக்கும் நுகர்ச்சியின் மீது உமிழும் கலையை எழுத நிர்பந்தப்பட்டவர்களாய் புத்தாயிரத்தின் எழுத்தாளர்கள்  புறப்பாடு அமைந்திருப்பதை உணர முடிகிறது.இங்கு முன் வைக்கப்படும் பிரதி சார்ந்த பார்வைகளை அறிபுலன்கள் கொண்டு நிகழ்த்தும் குறுக்கீடுகளாக வாசிக்கப்படுவதாக. இந்த பிரதி சொல்லும் கதைகள் அவ்விதமாகவும்/ அவ்வாறில்லாமல் மேம்பட்டும் திரிந்தும் தம்மை உங்கள் வாசிப்பிற்கேற்ப  நிகழ்த்திக் காட்டக்கூடும் வாழ்புலத்திலிருந்து தம்மைத் துண்டித்துக் கொள்ளும் வேட்கையுடைய கதைமாந்தர்களின் தேடல் மற்றும...