உயிரோசையில் வெளியான ஒரு பழைய கட்டுரை...
2000 ற்குப் பிறகான தமிழ் சினிமா (யாருடைய காலகட்டம் ? ....) வன்முறை, சாதியம், கொஞ்சம் ஊறுகாய் அரசியல் எந்த அடிப்படையில் சினிமாவை வேறொன்றாக அது கொண்டிருக்கும் கோணல் மானலான விதிமுறைகளுக்கு அப்பால் பார்க்க வேண்டியுள்ளது? ஒரு சமூகத்தின் மிகப்பெரிய அரசியல் நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்லக் கூடிய எல்லா அம்சங்களையும் கொண்டிருக்கிற கலையாகவும் எல்லை தாண்டி எல்லோருடனும் அது கொண்டிருக்கும் உறவிலிருந்தும்தான் அதற்கான முக்கியத்துவத்தினை உணரமுடிகிறது.. ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவில் நிகழும் மாற்றங்களை சற்று நிதானிதுக் கவனித்தால் அதன் பின்பாக வெவ்வேறான சமூக நிகழ்வுகளின் மாற்றங்களும் பிணைந்து போயிருப்பதை நாம் உணரமுடியும்? எழுச்சியும் வீழ்ச்சியும் மா...