மத்திய சிறைவாசி எண் : 3718
அன்புள்ள விஜி… ”நினைவின் எல்லா திருப்பங்களும் ரணங்களால் நிரம்பியிருக்க சபிக்கப்பட்டவர்கள் நாம். ஒவ்வொருமுறை உன்னை பார்த்துவிட்டுத் திரும்பும் போதும் சிறைச்சாலையின் உயர்ந்த சுவர்களுக்குள்ளாக நீ படும் அவஸ்தைகளை உன் முகம் உணர்த்திவிடுகிறது. அடிக்கடி வந்து பார்க்கச் சொல்கிறாய், எங்கனம் சாத்தியம்? ‘எதுக்கு இந்த மாமாவ அடிக்கடி பாக்கப் போறம்மா?’ என ஆதிரா கேக்கிறாள். சில கேள்விகளுக்கு மெளனத்தை பதிலாக சொல்வது எத்தனை சிக்கலானது தெரியுமா? என்னை எதிர்நோக்குகிற அனேகரும் என் முதுகுக்கு பின்னால் சத்தமாகவே இதைக் கேட்கிறார்கள். அதற்கான பதிலையும் தெரிந்து வைத்திருப்பது போல் சிரித்துக் கொள்கிறார்கள். என் பாதைகளெங்கும் இப்போதெல்லாம் அவமானத்தின் நகைப்புகள் முதுகிலேறி தொடர்ந்தபடியே தான் இருக்கிறது. எதிர்காலம் குறித்து எந்தவிதமான நம்பிக்கைகளையும் உனக்கு இப்போது தர முடியாதுதான். ஆனாலும் உனக்கே உனக்கான அமுதாவாக இந்த வாழ்வை வாழும்...