Posts

சாத்தானின் மனவெளிக் குறிப்புகள்.

Image
அதிகாரம் - 1 1.      தன் தாயிடமிருந்து குழந்தைகளைப் பிரிக்கும் நாளிலேயே தகப்பன்மார் எவரும் சாத்தானாகிறார்கள். அவர்களின் கீழ்மையினாலே நிகழும் எல்லா அழிவுகளும் பிள்ளைகளையும் கேடுகளை நோக்கி இழுத்துச் செல்கிறது. 2.      தன் தகப்பனை கடவுளென நம்பச் சொல்லும் சமூகத்தவனாகிய கதிர், பால்யத்தில் எதிர்கொண்ட துர்கனவுகள் அவ்வளவிற்கும் தகப்பனே காரணம் என்று நம்பினபடியால் அவரை ஒரு நாளும் மரியாதைக்குரியவராய் நினைத்தானில்லை. பொறுப்பற்ற கணவன்மார் குடுமபத்தை சீரழிக்கும் களைகள். 3.      கதிர் வீட்டிலிருந்து விடுதிக்கு அனுப்பப்பட்ட நாளில் கனவுகளில் சந்தோசப்பட பழகினான். எல்லா சந்தோசங்களும் தற்காலிகமானவை என்பதை பால்யம் உணர்த்திய நாளில் அவனுக்கு கனவுகளின் மீது வெறுப்புண்டானது. எதையெல்லாம் விரும்புகிறோமோ அதையெல்லாம் வெறுக்க நேரும் சூழல் வருந்தத்தக்கது. 4.      பசியால் நிரம்பிய பகலும், பயத்தால் நிரம்பின இரவுகளும் வாய்க்கப்பெற்ற விடுதிக் காலத்தில் வெளிச்சம் கூட பாதுகாப்பாய் இருந்ததில்லையென கர்த்தரிடத்தில் அவன் மன்றாடாத நாளி...

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

Image
லஷ்மி சரவணகுமார்.             நமக்கு விதிக்கப்பட்ட வாழ்வை, துயரின் அரூபங்களை நாம் கதைகளாக்கியபடியே தான் இருக்கிறோம். வரலாறு கதை சொல்லுதலின் நீட்சிதான். எல்லா வரலாறுகளும். இந்திய தேசத்தின் வரலாற்றுக் கதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் பின்னாலிருந்து துவங்கும் போதே மனிதன் பேசுவதிலிருந்து அதிகாரத்திற்கும் அதிகாரத்தின் வழி யுத்தத்திற்கும் இடம்பெயர்ந்த கதைகள் நமக்கு சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதிகாரத்தின் கதைகளை கேட்டே வளர்ந்தவர்கள் நாம். எளிய மனிதர்கள் அந்தக் கதைகளின் துயர் மிக்க சின்னஞ்சிறிய சாட்சியங்களாகவே எப்போதும் அடையாளப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் சின்னஞ் சிறிய மக்கள் கூட்டம் பேசும் ஏதோ சில மொழிகள் நம் தேசத்தில் அதன் சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு மொழி அழியும் போது அதனோடு சேர்ந்து அதன் பல்லாயிர வருட வரலாறும் அழிக்கப்படுகிறது. வரலாற்றை அழிப்பதின் வழிதான் ஒற்றை தேசியத்திற்குள் ஒடுக்கப்பட்ட மக்களும், பழங்குடியினரும் அடிமைகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் புத்த...

ஒளிநார்கள் கிளித்து கூடுகட்டும் தூக்கணாங்குருவிப் பெண் பாயிஸா :

Image
எஸ்.ஃபாயிஸா அலியின் கடல் முற்றம் தொகுப்பிற்கான முன்னுரை.  ------------------------------ ------------------------------ ------------------------------ ---------------------- பெண் சூழ்நிலைகளை எதிர்கொண்டு பொருந்திக்கொள்ள வேண்டும். அவள் ஏன் அப்படி பொருந்திக்கொள்ள வேண்டியவளாகிறாள்? இந்த உலகத்தில் இன, மத, நிற, தேசங்கள் என்னும் வேறுபாடுகள் கடந்து பிரபஞ்சத்தின் சகல திசைகளிலும் வாழ்ந்துவரும் ஒவ்வொரு பெண்ணுக்கு முன்பும், கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் மீற முடியாத ஏதோ ஒரு தடை இருக்கின்றது. பூசிமெழுகப்பட்டதாகவோ, நன்கு கவனமெடுத்து அலங்கரிக்கப்பட்டதாகவோ அன்றி சிலநேரங்களில் ஆறமுடியாத, ஆழமான வெட்டுக்காயமாகவோ காய்ந்த தழும்பாகவோ உள்ளுர பெண் மாத்திரமே அதை உணரக்கூடியவாறு அந்தத் தடையானது சிறுகச் சிறுக பெண்ணின் உயிர்ப்பையே கொல்லுகின்றது. தொடர்ச்சியான நசிவுற்றலில் அகப்பட்டபடியே சிரித்துச் சமாளித்து அவள் இந்த வாழ்க்கையை வாழக்கூடும். ஒரு பெண் எதை தன்னுடைய கனவுகளால் தகர்க்க முயலுகின்றாள்? தன்னுடைய கவிதைகளால் எதைத் தாண்ட முயலுகின்றாள்? அவளுடைய கலைத்துவத்தில் இதற்கான பதிலை கண்டெடுக்க முடியும். பெண்ணு...