Posts

இலங்கைப் பயணம் : சில தருணங்கள். 1

படிப்பின் மீதான வெறுப்பில் கைவசம் இருந்த இரண்டு துணிகளோடு பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு முடிவில் வீட்டை விட்டு ஓடிய நாளில் தான் ஊர் சுற்றுதலின் மீதான பெரும் விருப்பம் துவங்கியது. அப்போதிலிருந்தே சிரமங்கள், சந்தோஷங்கள், தனிமை என எல்லா உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள பயணம் அத்தியவசியமாகிப் போனது.   அலைச்சலுக்கான தவிப்பை உடல் தான் முதலில் ஏற்படுத்துகிறது . வெவ்வேறான கால நிலைகளில் வெவ்வேறான கூரைகளின் கீழ் சலித்து உறங்கும் நாட்களில் தான் வினோதமானதொரு நிறைவை உணர முடிகிறது . பொதுவில் நான் தனித்து அலைய விரும்புகிறவன் . ஏனெனில் இலக்குகளோடு சரியாக திட்டமிட்டு பயணிப்பதை விரும்பாதவன் . இத்தனை நாட்களுக்குள் இத்தனை இடங்களை சுற்றிவிட வேண்டுமென நினைப்பது ஒரு டூரிஸ்ட் கைடின் வேலை . ஒரு இன்பச் சுற்றுலாவிற்கான மனநிலைகளுக்குள் நான் எந்த ஊரின் சாலைகளையும் தேடுவதில்லை . ஒவ்வொரு சாலையும் பிரத்யேக கதைகளின் மனிதர்களின் பொக்கிஷம் . அவற்றோடு பயணிப்பதின் வழி தான் அந்தரங்கமாக அனேக சமாச்சாரங்களை கற்றுக் கொள்ள முடிகிறது . பயணம் தரும் இன்பத்தை ம...

ஒரு ராஜா வந்தாராம்.

Image
( சிறுகதையாளனின் வாசிப்பு குறிப்புகளில் இருந்து.) லஷ்மி சரவணகுமார். எப்போது எழுதத் துவங்கினோம் என்கிற கேள்விக்கு ஒருவருக்கு சொல்வதற்கு தெளிவானதொரு தருணமிருக்கிறதைப் போல், எப்போது வாசிக்கத் துவங்கினோம் என்கிற கேள்விக்கு பெரும்பாலும் இருப்பதில்லை. பஷீரிடம் ஒரு முறை  எது உங்களை எழுத வைத்தது? என்று கேட்டபோது யோசிக்காமல் அவர் ‘பசி’ என்று சொன்னது மாதிரிதான், என்னை வாசிக்க வைத்ததும் பசியாக இருந்தது. ஆதரவற்றோருக்கான விடுதியில் வார இறுதி நாளில் நடைபெறும் பைபிள் வகுப்பிற்கு ஒழுங்காக செல்கிறவர்களுக்கும் வசனங்களை தெளிவாக ஒப்புவிக்கிறவர்களுக்கும் அன்பளிப்பாய் தரப்படுகிற க்ரீம் பன் மட்டுமே அன்றைய நாளில் தேவ அப்பம். ஆக அந்த பன்னுக்காக பைபிளை வாசித்ததில் துவங்கியது வாசிப்பு. கதை சொல்லவும் கதை கேட்கவும் அடியாழத்தில் யாருமறியாமல் விதைகளைத் தூவியது ஜீசஸும், ரோஸி ஆண்ட்டியும் தான். அவள் சொன்ன கதைகளின் வழியாகவே கதை என்னும் இந்த தனித்த உலகின் மீதான எல்லா பைத்தியக்காரத்தனங்களும் துவங்கியது. எழுத்தாளனாக வேண்டுமென்கிற எளிய விருப்பம் தலை தூக்கின நாளில் எல்லோரையும் போல் கவிதை எழுதவே விளைந்தேன் என...