Posts

ச. விசயலட்சுமியின் பெருவெளிப்பெண் கவிதைத்தொகுப்பில் சமுதாயச் சிந்தனைகள்

முனைவர் கோ . குணசேகர் தமிழ்த்துறைத் தலைவர் ஆச்சாரியா கலை மற் றும் அறிவியல் கல்லூரி வில்லியனூர் , புதுச்சேரி - 605 110. புதுக்கவிதை தமிழக இலக்கியக் களத்தில் கால்கொண்டபோது எண்ணற்ற விமர்சனங்களைச் சந்தித்தது . ஆனால் கல்விகற்றோர்களால் வாசகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்பு புதுக்கவிதைத்துறை பல்நோக்கில் வளர்ந்தது . வட்டார நோக்கிலும் , புதிய புதிய உத்திமுறைகளைக் கொண்டும் இன்றைக்கும் குறிப்பிடத்தக்கதொரு வளர்ச்சி நிலையை எட்டியிருக்கின்றது . புதுக்கவிதைத் துறையில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கவிஞர்களும் மிகச் சிறந்த கவிதைத் தொகுப்புகளைப் படைத்திருக்கிறார்கள் . அவை பெண்களின் உணர்வுகளையும் , அவர்களின் இருப்பினையும் தெளிவாக்குகின்றன . அவ்வகையில் ச . விசயலட்சுமி படைத்திருக்கும் பெருவெளிப்பெண் என்னும் கவிதைத் தொகுப்பு , பெண்களுக்குச் சமுதாயத்தில் நிகழும் அவலங்களையும் , அவர்கள் உரிமை பெறவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றது . பெண்களை ஒதுக்கி வைத்தல் : பெண்கள் மாதவிலக்குக் காலத்தில் தனித்து இருக்க வேண்டும் , அவர்கள் பொருள்களைத் தொட...

பெருநகரில் நிலைகொள்ளாது அலையும் உப்புநாய்கள் …

நாவலுக்கான முன்னுரை                 -       பார்க்கிற கேட்கிற எல்லாக் கதைகளைவிடவும் பெருநகரங்கள் பிரம்மாண்டமானதொரு கதையாய் எப்பொழுதும் என் முன்னால் விரிந்து கிடக்கின்றன.   பகலில் வெவ்வேறான முகம் கொண்டிருக்கும் அத்தனை நகரங்களும் இரவில் ஒரேமாதிரியானவைகளாய்த்தான் இருக்கின்றன.   இரவுகளில் பாதுகாப்பற்றதாய்ப் போயிருக்கும் நகரங்களில் மெளனம்   மட்டுந்தான் எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டிருக்கின்றது. எல்லா வீதிகளிலும் யாரோ சிலர் மெளனத்தின் நீள் கயிறுகளைப் பிடித்தபடி இரவையும் பகலையும் பிணைக்கும் அத்யாவசியாமனதொரு வேலையை செய்கின்றனர்.   அவர்களின் விரல் வழி இரவு காற்றென கரைந்து எல்லோரின் நினைவுகளுக்குள்ளும் சொல்லாத கதைகளாய் நிரம்புகின்றன. ஏதேதோ கிராமங்களிலிருந்து பிழைப்பிற்காக சென்னை வருகிறவர்களின் கனவுகள் தங்களின் விருப்பங்களின் வழியாயும், யாரோ சிலரின் நினைவுகளின் வாயிலாகவும் இந்நகரின் எல்லா ரகசியங்களையும் தெரிந்து கொள்ளவே விழைகின்றன.      விரல்களை மடித்து விரி...

எனது சிறுகதைத் தொகுப்பிற்கு ச.விசயலட்சுமி எழுதிய முன்னுரை....

Image
விழிபடலத்தில் சுழலுமொரு உலகமும் மௌனத்தின் பெருங்குரலும் வெறும் பார்வையாளர் ஒவ்வொருவரும் ஒன்று கோழையாகஇருக்கவேண்டும் அல்லது துரோகியாக இருக்க வேண்டும் _ஃப்ரான்ஸ் ஃபனான் 1 பசுமை போர்த்திய நிலத்தின் மேற்பரப்பு பழுப்புநிறமாகத்தொடங்கியதன் பின்னணியில் வாழ்நிலை ஒரு கோணத்திலிருந்து மறுகோணத்தை நோக்கி புரண்டதோடு அதன் நுட்பமான வலைகளுக்குள் பிடித்துக்கொள்ள தயாரிப்புகளோடு பதுங்கியிருக்கியிருக்கிறது.இதனிடமிருந்து தப்பமுடியாமலும் ஒப்புக்கொள்ளவியலாமலுமான இடைவெளி எச்சமாய் எழுந்தவாறிருக்கின்றன. இயற்கைக்கும் இயற்கையாய் அமைந்த உடலுக்கும் சமகால வாழ்க்கைக்குமான ஒத்திசைவற்ற அம்சங்கள் சிந்தனையின் வேர்க்கால்களை அசைக்கிறது.உயிர்பிடித்து வாழவும் வாழ்க்கைக்கென சிறிது ருசியிருக்கிறதாவென தேடவும் தொடங்குகிற மனசின் அந்தகாரப்பகுதி முழுமையாய் வெளிப்படாமல் பார்த்துக்கொள்ளப் பழக்கிவைக்கப் படுகிறோம்.வெளியுலகிற்கு தக்கவகையில் உள்ளுணர்வை பதப்படுத்துகிறோம்.உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தினால் அக்கம்பக்கத்தினர் உள்ளிட்ட சமூகம் தன்னை பார்க்கும் விதம் குறித்த ஐயத்தை சுமந்து கொண்டு வாழ்கிறோம். கைகால் விரல் நகங்களை, பற்களை இளைப்...