Posts

பெருநகரில் நிலைகொள்ளாது அலையும் உப்புநாய்கள் …

நாவலுக்கான முன்னுரை                 -       பார்க்கிற கேட்கிற எல்லாக் கதைகளைவிடவும் பெருநகரங்கள் பிரம்மாண்டமானதொரு கதையாய் எப்பொழுதும் என் முன்னால் விரிந்து கிடக்கின்றன.   பகலில் வெவ்வேறான முகம் கொண்டிருக்கும் அத்தனை நகரங்களும் இரவில் ஒரேமாதிரியானவைகளாய்த்தான் இருக்கின்றன.   இரவுகளில் பாதுகாப்பற்றதாய்ப் போயிருக்கும் நகரங்களில் மெளனம்   மட்டுந்தான் எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டிருக்கின்றது. எல்லா வீதிகளிலும் யாரோ சிலர் மெளனத்தின் நீள் கயிறுகளைப் பிடித்தபடி இரவையும் பகலையும் பிணைக்கும் அத்யாவசியாமனதொரு வேலையை செய்கின்றனர்.   அவர்களின் விரல் வழி இரவு காற்றென கரைந்து எல்லோரின் நினைவுகளுக்குள்ளும் சொல்லாத கதைகளாய் நிரம்புகின்றன. ஏதேதோ கிராமங்களிலிருந்து பிழைப்பிற்காக சென்னை வருகிறவர்களின் கனவுகள் தங்களின் விருப்பங்களின் வழியாயும், யாரோ சிலரின் நினைவுகளின் வாயிலாகவும் இந்நகரின் எல்லா ரகசியங்களையும் தெரிந்து கொள்ளவே விழைகின்றன.      விரல்களை மடித்து விரி...

எனது சிறுகதைத் தொகுப்பிற்கு ச.விசயலட்சுமி எழுதிய முன்னுரை....

Image
விழிபடலத்தில் சுழலுமொரு உலகமும் மௌனத்தின் பெருங்குரலும் வெறும் பார்வையாளர் ஒவ்வொருவரும் ஒன்று கோழையாகஇருக்கவேண்டும் அல்லது துரோகியாக இருக்க வேண்டும் _ஃப்ரான்ஸ் ஃபனான் 1 பசுமை போர்த்திய நிலத்தின் மேற்பரப்பு பழுப்புநிறமாகத்தொடங்கியதன் பின்னணியில் வாழ்நிலை ஒரு கோணத்திலிருந்து மறுகோணத்தை நோக்கி புரண்டதோடு அதன் நுட்பமான வலைகளுக்குள் பிடித்துக்கொள்ள தயாரிப்புகளோடு பதுங்கியிருக்கியிருக்கிறது.இதனிடமிருந்து தப்பமுடியாமலும் ஒப்புக்கொள்ளவியலாமலுமான இடைவெளி எச்சமாய் எழுந்தவாறிருக்கின்றன. இயற்கைக்கும் இயற்கையாய் அமைந்த உடலுக்கும் சமகால வாழ்க்கைக்குமான ஒத்திசைவற்ற அம்சங்கள் சிந்தனையின் வேர்க்கால்களை அசைக்கிறது.உயிர்பிடித்து வாழவும் வாழ்க்கைக்கென சிறிது ருசியிருக்கிறதாவென தேடவும் தொடங்குகிற மனசின் அந்தகாரப்பகுதி முழுமையாய் வெளிப்படாமல் பார்த்துக்கொள்ளப் பழக்கிவைக்கப் படுகிறோம்.வெளியுலகிற்கு தக்கவகையில் உள்ளுணர்வை பதப்படுத்துகிறோம்.உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தினால் அக்கம்பக்கத்தினர் உள்ளிட்ட சமூகம் தன்னை பார்க்கும் விதம் குறித்த ஐயத்தை சுமந்து கொண்டு வாழ்கிறோம். கைகால் விரல் நகங்களை, பற்களை இளைப்...

எனதருகில் சில மொழிகள்....

Image
நூல் வெளியீடு குறித்து இருந்த ஆர்வமெல்லாம் டிசம்பர் 31 லேயே முடிந்து போனாலும் சின்னதாய் நண்பர்களின் அன்பிற்காக இன்னொருமுறை முயற்சித்துப் பார்க்கலாம் என்றிருந்தது. (அதிகபட்சமாய் எனது நண்பர்களென சொல்வதென்றால் மூன்று அல்லது நான்கு பேர்தான். என் எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன், நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று.... யாருக்குப் பொருந்துமோ இல்லையோ எனக்கு மிக நன்றாய் பொருந்தும்....) புத்தக வெளியீடு குறித்து தொடர்ந்து நம்பிக்கையளிக்கும்படி பேசியதில் மயூ முக்கியமானவள். ஒரு வழியாக ஜனவரி 8ம் தேதி வெளியிட முடிவு செய்தாயிற்று.... யாரைக் கூப்பிடவேண்டும், எப்படி நிகழ்வை நடத்த வேண்டுமென்கிற எந்தக் கூறுவாறும் எனக்கில்லை.... ஆனாலும் என்ன நடக்கிறதோ நடக்கட்டுமென அமைதியாக இருந்துவிட்டேன்.... சக்தி ஜோதியின் நூலை வெளியிட வந்த வண்ணதாசனையே எனது நூலையும் வெளியிடச் சொல்லிவிட்டேன்... எனது அதிர்ஸ்டம் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொஞ்சம் வாசகர் கூட்டம் தாரளமாய் இருந்தது.. இல்லாவிட்டால் நிலமை கொடூரமாகியிருக்கும்... எனது நெருக்கமான நண்பர்கள் வினோத், கலை, சதீஸ், விவேக், முகேஷ் வந்திருந்தனர். இவர்கள் யாருக்கு...

நாவலிலிருந்து ஒரு சிறு பகுதி

Image
கோடைபுற்களின் இடப்பெயர்வு… “ ஒவ்வொரு பொருளும் தன் ஸ்திதியிலேயே இருக்கவே ஆசைப்படுகிறது . ஒரு கல் எப்போதும் கல்லாகவேயிருக்க விரும்புகிறது . புலி தானொரு புலியாயிருக்கவே ஆசைப்படுகிறது .” - ஸ்பினோசா ஆதம்மா இந்த நகருக்கு வந்த நாள் முதல் ஒருமுறையேனும் கடற்கரைக்குப் போகவேண்டுமென ஆசைகொண்டிருந்தாள். வெக்கையும் உலர்மணலும் நிரம்பிய தன்னூரில் குடிக்கத் தண்ணீர் எடுக்க வேண்டு ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அவள் இரண்டு மூன்று கிலோமீட்டர்கள் நடக்க வேண்டும். அப்பொழுதெல்லாம் தண்ணீர் பேரதிசயம். ஊரிலிருக்கும் எல்லோரையும் போலவே இவர்கள் குடும்பமும் கிடைத்த வேலைகளைச் செய்வதற்காக சொந்த ஊரைவிட்டுக் கிளம்பினார். ராஜஸ்தானிற்கும் மஹாராஷ்டிராவிற்குமாக இவளின் சொந்தக்காரர்கள் நிறையபேர் நகர்ந்து போனாலும் இவள் அப்பாவான ராஜீவுக்கு அவ்வளவு தூரம் போவதில் விருப்பமில்லை, வீட்டிலிருந்து கொஞ்சம் பொருட்களைக் கட்டிக்கொண்டு சென்னைக்கு வந்திறங்கிய தினத்தில் மொத்த நகரும் பெருமழை பெய்து நிறைந்திருந்தது. சாலைகள், ரயில்வே தண்டவாளங்கள் வீடுகள் அவ்வளவிலும் மழைநீர் தேங்கிய குளமென தளும்பிக்கொண்டிருந்தன. இந...

இந்த வருசம் புத்தகத் திருவிழாவில்....

Image
புத்தகங்கள் வாசிக்கத் துவங்கிய வயதில் ஒரு நல்லப் புத்தகத்தை சொந்தமாக வாங்க முடியாதளவிற்கு துரதிர்ஸ்டசாலி நான். ஊரிலிருந்த ஒரு பெரிய இலக்கியவாதியிடம் அப்பொழுது நான் வாசிக்க ஒரு சில புத்தகங்களைக் கேட்டுப் போகையில் ஒரு பொருட்டாகக் கூட என்னை மதித்திருக்கவில்லை. லைப்ரைரியில இருக்க புத்தகத்த எல்லாம் படிச்சிட்டியா எங்கிட்ட வந்து கேக்கற?... எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.... வேறு வழியே இல்லை என்ற நிலையில் வீட்டிற்குத் திரும்பியவனுக்கு பக்கத்துவீட்டிலிருந்த ஒரு டீச்சர் நூலகத்தில் எனக்கு உறுப்பினர் அட்டை எடுத்துக் கொடுத்தார்.... இரவுகளில் தறி ஓட்டுகிற வேலை... பகலில் நூலகம்....நல்ல வேளை அந்த மாபெரும் எழுத்தாளன் எனக்குப் புத்தகம் தந்திருக்கவில்லை. தந்திருந்தால் நான் நூலகம் போயிருக்க மாட்டேன்... தூசுகளும் குப்பைகளுமாய் அடர்ந்திருந்த நூலகத்தின் அத்தனை அடுக்குகளுக்குள்ளும் பகல் முழுக்க அலைந்து திரிந்தன என் கண்கள்., ஒரு நான்கு வருடங்கள் என்னுடைய பகல் நேரங்கள் முழுக்க அந்த நூலகத்தில் கழிந்தன... அங்கு வருகிற நிறையபேர் நான் அங்கு வேலை பார்ப்பதாகத்தான் நினைத்திருந்தார்கள். அட்டை கிழிந்த புத்தகங்கள்....ய...

முத்துப்பிள்ளை கிணறு…

          கோடை ஒரு வற்றா ஆறென அந்த வருடத்தின் பிற்பகுதி முழுக்க கரிசல் நிலம் முழுக்க விரிந்து கிடந்தது. வெயிலடித்துச் செத்துப்ப்போன ஆடுகள் தோலுரிக்கப்பட்டு இறைச்சிகளாய் உப்புக்கண்டம் போடப்பட்டு தெருவில் எலக்ட்ரிக் போஸ்ட் மரங்களில் தொங்கிக் கொண்டிருந்தன. எல்லாவற்றிலும் வெயிலின் வாசனை. பாய்கடை ஆட்டுக்கால் சூப் இப்பொழுதெல்லாம் சுவையற்று நீர்த்துப் போயிருக்கிறது. தனித்துவமான காரணங்களெதுவுமில்ல, முன்பு ஆடுகள் உயிரோடு அறுக்கப்பட்டன, இப்பொழுது இறந்து பல மணிநேரங்களுக்குப் பிறகு அறுக்கப்படுகின்றன. அப்படியும்கூட ஊர்களில் பாதி வீடுகளுக்குமேல் சோளமும், கம்பும் தீர்ந்து போய் சனம் கீக்காட்டுக்கு நாத்து நடப்போக நேரம் பாத்துக் கொண்டிருந்தது. அடுத்த மழைக்காலம் வந்து வெதச்சு அறுக்க நாளிருக்கு நிறைய. பிள்ளைகள் எப்படி பசி தாங்கும்? சோளம் கசக்கி வாய் நெறய மெல்லும் சின்னப்பிள்ளைகள் இப்பொழுது வெறும் வாயை மென்றுகொண்டிருக்கின்றன. சம்சாரி வீடுகளில் குதிர்கள் தீர்ந்து மஞ்சள் பைகளிலும், துணிப்பைகளிலும்   சேகரித்து கொஞ்ச நஞ்ச தான்யங்களில் பொழுதோடிக்கொண்டிருந்தது.    ...

முதல் தகவல் அறிக்கை...

      க/எ 108/ 66 நாதமுனி தெருவில் வசித்து வந்த (லேட்) பெரியமாயத் தேவரின் மனைவியான திருமதி.ஒச்சம்மாள் ( வயது 76 ) கடந்த 14.7.2008 அன்று அதே தெருவில் மேற்கண்ட இலக்கத்தில் இருக்கும் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் கேள்விப்பட்டு 15. 7. 2008 காலை ஆறு மணியளவில் தலமைக் காவலர்கள் அ.சுப்பிரமணி மற்றும் ரத்தினம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அப்பொழுதுதான் வீட்டுக் கதவை உடைத்து இறங்கி இருந்தார்கள்.  கிழவி நல்ல கருத்த தேகம், பல் இன்னும் வலுவாய் இருக்கிறது. செத்து நீண்ட நேரமாகியிருந்ததில் நாக்கு நீலமாகிவிட்டது.  இது விசயமாய் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் வழக்கு 15.7.2008 அன்று பதிவு செய்யப்பட்டது. மேலதிக கவனிப்பில் திருமங்கலம் நகர் அரசு மருத்துவர்கள் திரு . எஸ்.அழகன் மற்றும் திருமதி மணிமேகலை ஆகியோரின் பிரேத பரிசோதனை மற்றும் தீவிர விசாரணைக்குப் பிறகு ஒச்சம்மாள் அவர்களின் மரணம் குறித்த முதல் தகவல் அறிக்கைகள் பின்வருமாறு. ( பிரேத பரிசோதனை அறிக்கை தனியாக இணைக்கப்பட்டுள்ளது.) இதுவிசயமாய் உதவி காவல் ஆய்வாளர் திரு. கு.ரவீ...