வசுந்தரா என்னும் நீலவர்ணப் பறவைக்கு ஊடகவியலாளர் சுகிதா எழுதியிருக்கும் விமர்சனம்.

எழுத்து சார்ந்த புரிதலும் .... எழுத்தாளர் சார்ந்த புரிதலும் படைப்புக்கான வெற்றியை தீர்மானிக்கின்றன... வாசகனுக்கு எழுத்தாளன் சார்ந்த புரிதல் தேவைப்படாது...ஆனால் எழுத்து சார்ந்த புரிதல் வேண்டும் ....இந்த இரண்டும் எனக்கு வாய்த்திருக்கிறது நண்பன் என்ற முறையில் லஷ்மையை நன்கறிவதால் .... ஒவ்வொரு பத்தாண்டிலும் சிறுகதையின் போக்கு திசைமாற்றம் கொள்கிறது. புதுமைபித்தனின் துவங்கி இன்று எழுதிக் கொண்டிருக்கும ் இளம்படைப்பாளி வரை சிறுகதை அடைந்துள்ள மாற்றமும் வளர்ச்சியும் அபரிமிதமானது. இரண்டாயிரத்திற்கு பிறகு எழுதத் துவங்கிய இளம் எழுத்தாளர்களில் பலர் நல்ல சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு என தனித்துவமான கதை சொல்லும் முறையும் கதைக்களமும் இருக்கிறது. . அந்த வரிசையில் லஷ்மியின் கதைகளில் புனைவுகளை தாண்டி இயல்புகள் ஆங்காகங்கே துருத்திக் கொண்டு நிற்கின்றன. இன்றைய சிறுகதையின் பலம் அதன் கதை சொல்லும் முறை. இந்ததொகுப்பில் அப்படி மாறுபட்ட கதை சொல்லும் முறைகளும் கதைமொழியும் காணமுடிகிறது. கதையை படிக்கும் சில நேரங்களில் நானே அப்பாத்திரமாக மாறினேன்... குறிப்பாக அத்தை கதை என் ஊரில் எனக்கு நேர்ந்த அதே திருவ...