பட்டு - ஆழ் குளத்தில் நீந்தும் வார்த்தை மீன்கள்.
மிக அற்புதமான இரவு இது ... அலெசாண்டோ பாரிக்கோவின் ‘பட்டு’ நாவலை வாசித்தேன்... வெறும் ஒன்றரை மணி நேரத்திற்குள் படித்து முடித்துவிட்டாலும் அந்த நாவல் ஏற்படுத்தியிருக்கும் மனக்கிளர்ச்சி அபாரமானதாய் இருக்கிறது. வாசிப்பவனின் மனதிற்குள் மிக ஆழமாக பயணிக்கும் சொற்கள் ... ஒரு மிக இனிய இசையைக் கோர்வையைக் கேட்டபடி தொலைவில் எங்கோ இருக்கும் காதலியை அணைத்துக் கொள்வது போன்ற மனநிலை ... தனிமனிதனின் மென்னுணர்வுகளை லாவகமாக சுழலுக்குள்ளாக்கி மீண்டும் மீண்டும் வார்த்தைகளை விழுங்க வைக்கிறது நாவல்... மிக அற்புதமான மொழிபெயர்ப்பு .... இப்படியொரு நாவலை மொழிபெயர்த்துக் கொடுத்ததற்காக நன்றி சுகுமாரன்... ( ஆயிரம் பக்கம் எழுதினால் தான் நாவல் என பிடிவாதமாக மொக்கை போடும் என் சக நாவலாசிரிய செல்லக்க்குட்டிகளுக்கெல்லாம் ஆளுக்கொரு பிரதி வாங்கி அனுப்பி வைக்க ஆசையாய் இருக்கிறது... ) இந்த நாவலில் திடீர்த் திருப்பங்களோ, அதிர்ச்சியூட்டும் சம்பவங்களோ, உலகையே புரட்டிப்போடும் வரலாறோ ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு ஜென் துஇறவி அமைதியாக இவ்வுலகைக் கண்டு புன்னகைக்கும் ஒரு அசாத்தியமான எளிமையும் கவித்துவமும் இருக்கிறது. இருப்பதிலேயே மிகச்...