நாவலில் ஒரு பகுதி .....
6 . சாம்பல் இரவின் தேவதைகள்…. “ ஒரு மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பதை விடவும் இச்சமூகத்திற்கு அவன் சொல்வதற்கென செய்திகளொன்றும் இல்லை .” சம்பத் தனது வாழ்வின் மூலமாய் எந்த செய்தியையும் உலகிற்கு சொல்ல விரும்பவில்லை. அவனிடம் பணம் சேரத்துவங்கிய தினத்தில் அவனுக்கான செய்தி உலகத்திடமிருந்து எல்லா வகையிலும் வந்து கொண்டிருந்தது. அம்மா தேடி வந்தாள். அவளிடம் தற்காலிகமாய் பாசமிருந்தது. ஆர்மீனியன் சர்ச் இளைஞர்களைப் பற்றி அந்தப் பகுதியிலிருக்கும் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அவர்கள் அச்சத்துடன் முன்பு பார்த்தது போய் அவர்களைச் சுற்றி ஒரு அதிகார வட்டம் உருவாகிக் கொண்டிருப்பதை கவனித்தபடியிருந்தனர். அந்த வருடத்தின் மழைக்காலம் முடியும் போது பாஸ்கர் அந்தப் பகுதியில் பெயர் சொல்லும்படி ஒரு ஆளாகிவிட்டான். அவனுக்கு போட்டியாய் இருந்தது சுந்தர் மட்டும்தான். இருவரில் யாருக்கு ஆட்கள் அதிகம் என்பதிலிருந்து எல்லாவற்றிலும் போட்டி வந்தது. ஆனாலும் அவர்களில் யாரும் இன்னொருவனை ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை. சுந்தருக்கு பாக்ஸிங் இல்லாமல் பந்தய புறா வளர்ப்பதும் பிடிக்கும். அவனை எந்தப் பந