எனது சிறுகதைத் தொகுப்பிற்கு ச.விசயலட்சுமி எழுதிய முன்னுரை....
விழிபடலத்தில் சுழலுமொரு உலகமும் மௌனத்தின் பெருங்குரலும் வெறும் பார்வையாளர் ஒவ்வொருவரும் ஒன்று கோழையாகஇருக்கவேண்டும் அல்லது துரோகியாக இருக்க வேண்டும் _ஃப்ரான்ஸ் ஃபனான் 1 பசுமை போர்த்திய நிலத்தின் மேற்பரப்பு பழுப்புநிறமாகத்தொடங்கியதன் பின்னணியில் வாழ்நிலை ஒரு கோணத்திலிருந்து மறுகோணத்தை நோக்கி புரண்டதோடு அதன் நுட்பமான வலைகளுக்குள் பிடித்துக்கொள்ள தயாரிப்புகளோடு பதுங்கியிருக்கியிருக்கிறது.இதனிடமிருந்து தப்பமுடியாமலும் ஒப்புக்கொள்ளவியலாமலுமான இடைவெளி எச்சமாய் எழுந்தவாறிருக்கின்றன. இயற்கைக்கும் இயற்கையாய் அமைந்த உடலுக்கும் சமகால வாழ்க்கைக்குமான ஒத்திசைவற்ற அம்சங்கள் சிந்தனையின் வேர்க்கால்களை அசைக்கிறது.உயிர்பிடித்து வாழவும் வாழ்க்கைக்கென சிறிது ருசியிருக்கிறதாவென தேடவும் தொடங்குகிற மனசின் அந்தகாரப்பகுதி முழுமையாய் வெளிப்படாமல் பார்த்துக்கொள்ளப் பழக்கிவைக்கப் படுகிறோம்.வெளியுலகிற்கு தக்கவகையில் உள்ளுணர்வை பதப்படுத்துகிறோம்.உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தினால் அக்கம்பக்கத்தினர் உள்ளிட்ட சமூகம் தன்னை பார்க்கும் விதம் குறித்த ஐயத்தை சுமந்து கொண்டு வாழ்கிறோம். கைகால் விரல் நகங்களை, பற்களை இளைப்...