மண்ட்டோ , நர்கீஸ் மற்றும் சில பெண்களும் அவர்களைத் துரத்தும் நானும்...(மணல்வீடு மண்ட்டோ சிறப்பிதழுக்காக எழுதப்பட்டு தேர்வாகாதது..)
“ எனக்குத் தெரிந்த மட்டில் அவன் யாருடைய சிந்தனைகளாலும் எப்பொழுதும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த உலகததை விளக்க முயற்சிப்பவர்கள் எல்லோரையும் முட்டாள்களென்றே கருதினான். இந்த உலகத்தை ஒருவனால் மற்றவனுக்கு விளக்க முடியாது. ஒருவன் தானாக அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.” - ‘மண்ட்டோவைப் பற்றி மண்ட்டோவே எழுதியதொரு சொற்சித்திரத்திலிருந்து..’ பம்பாயின் அழுக்கும் இருளும் நிரம்பியதொரு தெருவிலிருந்து கிளம்பி கொஞ்சம் கதைகளடங்கிய காகிதக் கட்டுகளுடன் பழைய ரயில் பெட்டியொன்றில் பயணிக்கும் மண்ட்டோ உடன் தனது தோழிகள் சிலரை அழைத்துக் கொண்டு செல்கிறார். கதைக்கார்ர்களுக்கு மட்டுமேயான அந்த பிரத்யேக பெட்டியில் எல்லா ஊரிலும் சிலர் ஏறிக்கொள்வதும் அவருடன் மதுவருந்தி சண்டையிட்டு முடியாமல் பாதி வழியில் இறங்கிக் கொள்வதும் வெகு இயல்பாய் நடக்கிறது. எல்லாக் காலங்களிலும் இப்படி சிலர் ஏறிக்கொள்வதும் அவர் கதைகளில் வரும் பெண்களின் மீது காதல் கொண்டு பேசப்போய் சண்டை போட்டுக் கொண்டு வருவதும் நடந்து ...