கடிதம்
அன்புடையீர் வணக்கம். மரபார்ந்த தொல்கலைகளை (தோற்பாவை. கட்ட பொம்மலாட்டம் , கூத்து) மீட்டெடுக்கவும் , தாய் வடிவம் மாறாது அவற்றை வளர் தலைமுறையினருக்கு கைமாற்றி கொடுக்கவுமான செயற்பாடுகளை கடந்த நான்கு வருடங்களாக களரி சிரமேற்கொண்டு இயங்கிவருகிறது. தொடர் முயற்சிகளில் மேலும் சில காரியங்களை செய்யவது கருதியிருக்கிறது. *1. பாரம்பர்யம் மிக்க நிகழ்த்துக்கலையான கூத்தை , காண்முறை பயிற்சி முகாம்கள்(நிகழ்த்துதல் வழியான பயிற்றுவித்தல்) மூலம் ஆர்வமுள்ள இளைய கலைஞர்களுக்குக் கற்றுக் கொடுப்பது. திட்ட மதிப்பு- ரூ 50000 ( பதினைந்து மாணாக்கர் , ஐந்து வாத்தியார்கள் , கொண்ட இருபது நாள் முகாம்.)* *2. கையிருக்கும் கலையை , கலைஞர்களின் வாழ்வியலை ஆவணமாக்குதல். திட்ட மதிப்பீடு- ரூ- 50000 ( முதலில் தோற்பாவை கலைஞர் திருமதி. ஜெயா செல்லப்பன் குறித்த பதிவு)* * 3. கலைஞர்களால் கலைஞர்களுக்காகவே நிர்மாணிக்கப்பட்ட ஆவண காப்பகம் , நூலகம் , தங்குமிடம் இணைந்த பயிற்சிபட்டறை இப்படியாக ....................... (நீண்ட கால திட்டம்)* எண்ணங்கள் செயலாக முழுமை பெற வேண்டுமெனில் அடிப்படை ஆதாரம் நிதி ஆதாரமே! இவ்விடயத்தில்...