நீலநதியில் மிதக்கும் யாக்கை..;
நகரத்தின் தனிமையின் பிரமாண்டமான கதவுகள் ஒரே நேரத்தில் சாத்தவும்படுகின்றன திறந்துவிடவும்படுகின்றன . அடைபடுவதும் வெளியேறுவதுமாய் இருக்கிறார்கள் மனிதர்கள் . நகரத்தின் வாழ்வு ஒரு சிலருக்கு கொண்டாட்டத்தையும் பலருக்கு தீராத சலிப்பையும் சுகபோக வாழ்வை சதா எட்ட ஏங்கித் திரியும் அலைகழியும் வாழ்வையே கொடுக்கிறது. இன்னொரு பக்கம் நாம் அறியாத சகித்துக்கொள்ளவே முடியாத விளிம்புநிலை வாழ்வை கொண்டவர்களின் நரகக் கூடாரகமாகவும் இருக்கிறது வெளிக்கண்களுக்கு பகட்டாகவே தெரியும் நகரம். நகரத்திலிருந்து விடுபட முடியாத கனவை கொண்டிருக்கும் நான் அதன் இரக்கமற்ற ஒதுக்கலை பல நேரங்களில் நேரடியாக அனுபவித்திருப்பதால் இக்கதைகளில் விளிம்புநிலை வாழ்வை நெருக்கமாக உணர முடிகிறது. குற்றங்களும் அதன் பின்னணிகளும் அதனால் உருவாக்கப்படும் குற்றத்தின் மீதான வசீகரமும் தீராத வாசிப்பதை முதல் கணத்திலேயே கொடுத்துவிடுகின்றன . உடல் இவ்வெளியில் மாபெரும் கடலைப் போன்று திறந்தே கிடக்கிறது . அவைகள் ஒளிந்து கொண்டிருக்கும் பின்னணிகளே இக்கதைகள் . மனிதநேயம் காணாமல்போய் சூன்யவெளி ஒன்று நம்மைச் சுற்றி இயங்கிக் கொ...