வள்ளி திருமணம்.


வள்ளியாய் மேக்கப் போட்டுக் கொண்டிருந்த கலைமகளின் கவனம் ஒரு பக்கம் தன் முன்னால் இருக்கும் கண்ணாடியில் இருந்தாலும் இன்னொரு பக்கம் பஃபூன் சூர்யா தன்னை கவனிக்கிறானா என்பதிலும் இருந்தது. அவன் தன்னை கவனிக்க வேண்டுமென்பதற்காகவேதான் இன்று மாரில் கூடுதலாக இன்னொரு பேட் வைத்திருக்கிறாள். அவனோடு சேர்ந்து நாற்பது நாடகங்கள் நடித்து விட்டாள். ஆனாலும் அவன் இவளை சீண்டுவதாக இல்லை. இக்கட்டான சமயத்தில் மேடையில் தர்க்கம் பண்ணுகையில் பலமுறை அவளை சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறான். “என்னய்யா இது வள்ளி முருகன் கிட்ட தர்க்கம் பண்ணி தோக்கும்னு பாத்தா, பஃபூன் கிட்டயே தோத்துப் போச்சு..” என அடுத்த நாள் காலையில் ஊர்க்காரர்கள் கேவலமாகப் பேசுவதை அவளுக்குக் காது கொடுத்துக் கேட்க சகிக்காது. இன்னிய தேதியில் மதுரை நாடக நடிகர் சங்கத்தில்  கலைமகள் தான் ஸ்டார் நடிகை. அவளோடு சேர்ந்து நடிக்க ராஜபார்ட் நடிகர்களே போட்டி போடுவதுண்டு. இவன் ஒருவன் மட்டுந்தான் அவளை திரும்பிக்கூட  பார்ப்பதில்லை. இவளே வலியச் சென்று பேசுவது, வீட்டிற்கு சாப்பிடக் கூப்பிடுவது, தன் புருஷனிடம் அவனுக்கு பிராந்தி வாங்கிக் கொடுத்து கவனிக்கச் சொல்லுவது என அவள் விட்ட எல்லா அஸ்திரங்களும் வீர்யமின்றி செயல் இழந்தன. 
     கலை அன்றைய தினம் வந்திருந்த லேடி டான்ஸரைக் கண்டுதான் அதிகமும் பொறாமைப்படுகிறாள். திண்டுக்கல்காரி, ஆள் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் மேக்கப் போட்டபின் அவள் உடல்வாகிற்கு ஆளே மாறிப்போவாள். பார்க்க ஒரு கண் போதாதெனச் சொல்வார்களே அப்படியானதொரு உடம்பு, இறுக்கமாக உடை அணியாமலேயே பின்னால் தூக்கிக் கொண்டு நிற்கும். காருக்குப் பின்னாலிருக்கும் டிக்கியை விடவும் கொஞ்சம் பெரிதாய் இருக்கும் அவளுடயை பின்புறத்திற்காகவே பல ஊர்களில் அவளை நிகழ்ச்சிக்குக் கூப்பிடுகிறார்கள்.  கலைமகளுக்கே அவளை சில சமயங்களில் பார்த்து ஆசை வரும். ‘கருமம் இவள மாதிரி நம்மளுக்கு உடம்பு அமைய மாட்டேங்குதே இடுப்பை ஆட்டி ஆடும் போது கூட மார்புகளும் அழகாக ஆடும். கலைமகளின் நிலைமைதான் பரிதாபம். அவள் உயரத்திற்கு மார்புகள் கொஞ்சம் சிறியவை. முகலட்சணம் இருந்தாலும் கூட  ஒல்லி என்பதால் இவளே வலிய தன் உடலை ஆட்டிக் காண்பித்தாலும் பார்ப்பவர்களுக்கு அதில் என்ன சுவாரஸ்யமிருக்கும்? மேடையில் லேடி டான்ஸர் ஆட, ஆட மக்கள் கூட்டம் ஆராவரிக்கும் சத்தம் கேட்டது.
முருங்கக் காயிக்கு ஆசப்பட்டு என் மூத்தார வெச்சுக்கிட்டேன்…” பாடியபடியே ஆல்ரவுண்ட் வாசித்துக் கொண்டிருந்த சீனியை வம்புக்கு இழுத்தாள். “ஏய் என்னத்த மூத்தார வெச்சுக்கிட்டேன்னு என்னய இழுக்கிறவ ஓழி உனக்கு ஈடு குடுத்து என்னால அடிக்க முடியுமா?” அவரும் விடுவதாக இல்லை. கீழே உட்கார்ந்திருந்த ஊர்க்காரர்கள் எல்லாம் சத்தமாக சிரித்தார்கள். கண்ணாடியில் இன்னொருமுறை தன் கழுத்திற்குக் கீழ் பார்த்தாள். வெளியில் ஊர்க்கார்கள் சிரிப்பது சத்தமாகக் கேட்க, எழுந்து கொண்டவள் தன் உடைகள் இருக்கும் பையை மட்டும் எடுத்துக் கொண்டு துணி மாற்றுவதற்காகப் போடப்பட்ட சேலை மறைப்பிற்குப் பின்னால் போனாள். கையைப் பின்னால் விட்டு கொக்கியை அவிழ்க்க முயன்றாள், கை எட்டவில்லை. சேலையை விலக்கிவிட்டுத் தன் புருஷன் இருக்கிறானாவெனப் பார்த்தாள். அவள் பார்ப்பதைக் கவனித்த பஃபூன் சூர்யா “என்னத்தா யாரத் தேடற?...” சிரித்தான். “எங்க வீட்டுக்காரர. ஆளக் காணாம் கொஞ்சம் இப்பிடி வர்றீங்களா?...” சூர்யா சிரித்துக் கொண்டே எழுந்து போனான். ”கொக்கியக் கொஞ்சம் அவுத்து விடறீங்களா? கை எட்ட மாட்டேங்குது…” அவனைப் பார்க்காதது போல் கேட்டாள். அவன் எதுவும் பேசிக்கொள்ளாமல் சாதாரணமாக அவள் முதுகில் கைகளைப் படரவிட்டான். மேலாடை அவிழ்க்கப்பட்ட வெற்று உடலோடு அவள் தன் மார்க்கச்சையில் இன்னொரு பேடை பொருத்திக் கொண்டிருந்தாள். இறுக்கம் குலையாத அவளின் குட்டி முலைகளை முதல் தடவையாய் ஆசையோடு பார்த்த சூர்யா அவளைத் தன் பக்கமாக இழுத்து முத்தமிட்டான். மேக்கப் முழுமையாகி இருந்ததால் அவள் மேலிருந்து ரோஸ் பவுடரின் வாசனைத் தூக்கலாக வந்தது. வேக வேகமாய் அவளின் உடலெங்கும் கைகளைப் படரவிட்டவனை சந்தோசமாய் அனுமதித்தாள். “உனக்கு பேட் எதுவும் வெக்காம இருந்தாத்தான் நல்லா இருக்கு. நீ எதுக்கு அந்தக் கருமத்த எல்லாம் வெக்கிற?...ம்..” அவளின் காதில் கிசுகிசுத்தான். அவள் அவனை இறுக அணைத்துக் கொண்டு சிரித்தாள். இருவரும் தட்டியை ஒட்டி மூர்க்கமாய் பிணைந்து இருந்தனர். சூர்யாவின் உதடுகளில் இருந்த லிஃப்ஸ்டிக் மொத்தத்தையும் உறிஞ்சி எடுக்கும் ஆர்வத்துடன் கலை முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். மேடையில் லேடி டான்ஸர்
யோவ் பஃபூனு எங்கய்யா போன? ஊர்க்கார குட்டிங்க எதையும் மடக்கிட்டியா? பயபுள்ள துணி மாத்திட்டு வர்றதுக்கு எம்புட்டு நேரம்னு பாருங்க மாமா…” எனக் கத்த, சூர்யா நிதானமாய் கலையை தன்னிடம் இருந்து  விலக்கி விட்டு சேலை மறைப்பிற்கு வெளியில் வந்து கடைசியாய் ஒருமுறை புருவத்தையும் லிஃப்ஸ்டிக்கையும் மட்டும் சரி செய்து கொண்டு வேக வேகமாய் மேடைக்கு ஓடினான். கலை உடையை மாற்றிக் கொண்டு வெளியே வர இருக்கையில் அவளுக்கு எதிர்ப்பக்கத்தில் துளை போடப்பட்ட தட்டியின் வழியாய் இரண்டு கண்கள் இவளைப் பார்ப்பதைக் கவனித்தாள். அவள் நகர நகர அந்தக் கண்களும் நகர்ந்தன. எல்லா ஊர்க்காரர்களும் ஒரே மாதிரிதான். அவர்கள் நாடகம் பார்ப்பதில் காட்டும் ஆர்வத்தை விடவும் இந்தத் துளையின் வழியாய் பார்ப்பதில் தான் அக்கறையாய் இருக்கிறார்கள். அந்தக் கண்களுக்கு அருகில் போனவள் தன் பாவாடையை உயர்த்தி அந்தக் கண்களுக்கு மிக அருகில் உள்ளாடை எதுவும் அணியாத தன் இடை அழகைக் காட்டிவிட்டு வேகமாக வெளியே வந்தாள். தட்டிக்கு அந்தப் பக்கத்தில் இருந்து சத்தமாக சிரிக்கும் சத்தமும் ஆட்கள் நாலைந்து பேராக அந்த இடத்தை சுற்றி ஓடும் சத்தமும் கேட்டது.     
நாரதர் எப்படியிருப்பாரென ஏ.பி. நாகரஜானின் படங்களுக்கு பிறகு அடையாளம் கண்டு கொள்ள வேண்டுமானால் முத்துச்சிப்பியைப் பார்த்தால் போதும். முத்துச்சிப்பிக்கு இந்த ஊரில் என்றில்லை. மதுரை காரைக்குடி பகுதிகளில் மட்டும் ஐம்பது அறுபது கிராமங்களில் ரசிகர் மன்றம் இருக்கிறது. அவன் மேடையில் தோன்றும் பொழுது அவனது ரசிகர்கள் பூ தூவி வரவேற்பதெல்லாம் வழமையான விசயம். அந்த கனம் ஒரு நடிகனுக்குத் தேவதையே இறங்கி வந்து முத்தமிட்டுச் செல்லும் பரவசமின்றி வேறென்ன? இத்தனைக்கும் அவன் வள்ளி திருமணத்தைத் தவிர்த்து வேறு எந்த நாடகத்திலும் நடிப்பதில்லை. முப்பத்தி ஐந்து வயதைக் கூடத் தாண்டாத அவன் தோற்றம் மட்டும் உருண்டு திருண்டு கொஞ்சம் வழுக்கை விழுந்த தலையுடன் நாரதருக்கே உரியவனாய் அவனைக் காட்டும்.ஒரு நடிகனுக்கு ஒப்பனையும் உடையும் பொருந்தி வருவது ஒரு வரம். அவன் அவ்வரம் பெற்றவன். ஒப்பனை முடித்து இறுதியாக தனது கொண்டையை சரி செய்து கொண்டிருந்தான்.  அவனுக்கு அருகில் படுத்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்த ராஜபார்ட் ஆனந்தனுக்கு அந்த நொடியே அவனை அணைத்து முத்தமிட வேண்டுமென ஆசை. ஆனாலும் கட்டுப்படுத்திக் கொண்டான். ஆனந்தன் தனது இருபது வருட நாடக வாழ்க்கையில் எத்தனையோ பேரை காதலித்து இருக்கிறான். அவர்களில் ஒருவனாக முத்துச்சிப்பியை நினைக்க முடியவில்லை. இதற்கு முன்பு ஐந்து முறை முத்துச்சிப்பியோடு உறவு கொண்டிருக்கிறான். ஒவ்வொரு முறையும் தனது காதலியை நடத்துவது போல் தான் அவன் இவனை நடத்தி இருக்கிறான். எந்த நிலையிலும் தன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் ஒருவனாக இவனை நடத்தியதில்லை. ஆனந்தன் உறவு கொண்ட அனேக நாரதர்களும் பஃபூன் பார்ட்டுகளும் அவனை தங்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் மிருகமாகத்தான் நடத்தி இருக்கிறார்கள். முத்துச்சிப்பி காதலுக்குரியவன். ஆழமாக முத்தமிட்டு மேக்கப் கலைந்து விட்டால் கூட “இருக்கட்டுண்ணே, ஒரு அஞ்சு நிமிசம் மேக்கப் போட்டா சரியாப் போச்சு..” என சாதாரணமாக பதில் சொல்லுவான்.
அரிச்சந்திரனாகவோ சத்யாவானாகவோ நடிக்கும் ஒருவனுக்கு இயல்பிலேயே ஒரு வறட்டுத்தன்மை அவன் குரலிலும் உடலிலும் வந்துவிடும். முருகனாக நடிப்பவன் அப்படியில்லை. அவன் உடல் எப்போதும் குழைந்து இருக்கும். பெண்மைக்கான எல்லா நளினங்களையும் வசீகரங்களையும் கொண்டிருப்பவர்கள் அந்த வேஷம் போடுவது முருகன் பேரழகனாகிவிடுவார். முருகு என்றால் அழகு இல்லையா? வள்ளியை மணக்க வள்ளியைப் போன்றதொரு பெண்ணால் தானே முடியும்? முருகனாக நடிக்கும் ஒவ்வொருவனும் அதைப் புரிந்து கொண்ட பின்னால் தான் அந்தப் பாத்திரத்தை சிறப்பாக நடிக்க முடியும். ஆனந்தனின் கைகள் அவனையும் மீறி முத்துச்சிப்பியின் தொடையின் மீது ஊர்ந்து சென்றது. ஒவ்வொரு முறையும் ஒரு உடலை அனுகுகையில் சற்று முன்னர் பருவமெய்திய ஒரு சிறுமியின் கைபோல் அலாதியான கூச்சத்தையும் வெட்கத்தையும் தற்கவைத்துக் கொள்ளும் சாமர்த்யம் எப்படித்தான் வாய்க்குமோ? அவன் கொண்டையை சரி செய்தபடியே திரும்பி இவனைப் பார்த்துச் சிரித்தான். “இன்னும் வேஷம் போட ஆரம்பிக்கலையா நீங்க?” வாயில் ஹேர் பின்னை வைத்தபடி பேசியதால் வார்த்தைகள் பிசிறடித்தன. ”நடு ராத்திரி ரெண்டு மணிக்கு மேடைக்கு வர்றதுக்கு இப்ப என்ன வேஷம்? ஆட்டக்காரி இன்னைக்கு வெளுத்து வாங்கறா? எத்தன மாத்தர போட்டா?” தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் ஆனந்தன் கேட்க, மூன்று என விரல்களை மட்டும் காட்டி முத்துச் சிப்பி சிரித்தான். பதிலுக்கு ஆனந்தனும் சிரித்தான். “அப்ப இன்னைக்கு விடிய விடிய ஆட்டந்தான்.” ஆனந்தன் கண்கள் முழுக்க காதலோடு தன் கைகளை முத்துச் சிப்பியின் உடலில் படரவிட்டான்.
ஆலோலோம் சோ. ஆலோலோம் சோ…”
என மேடையில் வள்ளி தன் தோழியுடன் பாடிக் கொண்டிருந்தாள். இரண்டு பேருக்கும் எடுத்துக் கொடுக்கவும் வம்பிழுக்கவுமாய் பஃபூனும் மேடையில் வாயாடிக் கொண்டிருந்தான்.
வள்ளி மாயோனின் செல்வ மகள், காடு மேடு எல்லாம் அலைகிறாள்!
இத்தனைக்கும் முருகன் அவளிடம் ஆசையாக ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை! முன்னே-பின்னே நெருங்கிப் பார்த்ததும் இல்லை!
இப்படித், தான் பார்க்காத ஒரு முருகனுக்காக... பார்க்கும் எல்லா மாப்பிள்ளையும் தட்டிக் கழிக்கிறாள். எதிரில் இருக்கும் இந்த பஃபூனே முருகனாக வந்திருக்கலாம் மேடையிலேயே அள்ளி அணைத்திருப்பாள். எதற்கு தர்க்கமும் சண்டையும்? கலை இயல்பிலேயே பிசிறில்லாமல் பாடக்கூடியவள், திறமையான நடிகையும் கூட. இன்று சூர்யாவின் காதலால் அவள் உற்சாகம் முன்னை விடவும் அதிகமாகி இருக்கிறது.
வள்ளி இன்னைக்கு நல்லா அம்சமா இருந்தா இல்லியாண்ணே…” முத்துச்சிப்பி ஆனந்தனைப் பார்க்கமாலேயே கேட்டான். அவனுக்கு சுருக்கென்றது. இவ்வளவு நேரமும் தன் கைகளை அவளுடையதாக நினைத்து இருக்கிறான். அவசரமாய் கைகளை எடுத்துக் கொண்ட ஆனந்தன் சில நொடிகள் பதில்  சொல்லவில்லை. ”என்னத்த அம்சமா இருந்தா? எலுமிச்சம் பழத்த மூட்ட மூட்டய துணியக்கட்டி காட்டினாலும் அது மாம்பழமா ஆயிருமா?… அப்பிடியேதான் இருக்கும்…” அவன் குரலில் அதீதமானதொரு பெண் தன்மை வெளிப்பட, முத்துச்சிப்பி சுதாரித்து வேஷத்தை முடித்துக் கொண்டவன் போல் எழுந்து கொட்டகைக்குப் பின்னால் சிறுநீர் கழிக்கச் சென்றான்.
     விழா ஏற்பாடு செய்திருந்த ஊர்ப் பெரியவர்களில் ஒருவர் நிலை கொள்ளாத போதையில் மேக்கப் ரூமில் இருந்து மேடைக்குச் செல்லும் மரப்படிக்கட்டில் தள்ளாடியபடியே நின்றிருந்தார். தன் கையிலிருந்த மாலையை லேடி டான்ஸருக்குப் போடுவதா? அல்லது வள்ளிக்குப் போடுவதா எனக் குழப்பம். பால் நிலவை உருக்கி வைத்த ஜொலிப்பும் அழகும் வள்ளியின் முகத்தில். அகன்ற கண்களும் விரிந்த முகமுமாய் காமம் கொண்ட தாமரை மலரென மேடையில் நின்றாள். ஆனாலும் அதென்ன கழுத்திலிருந்து இடைவரை எந்த ஏற்ற இரக்கமும் இல்லாமல்? மாலை தானாகவே நடந்து லேடி டான்ஸரின் கழுத்தில் விழுந்தது. அவள் பவ்யமாய் குனிந்து மாலையை வாங்கிக் கொண்டாள். மாலையைப் போட்டுவிட்டவர் கூடவே ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவளின் இடது மாரில் சொருகினார். ஊர்க்காரர்கள் எல்லோரும் ஹோவெனக் கத்த வள்ளிக்கு மட்டும் அடிவயிற்றில் பற்றி எரிந்து கொண்டிருந்தது. லேடி டான்ஸர் பெருந்தன்மையானவள், கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி வள்ளிக்குப் போட்டுவிட்டாள். வள்ளி அதைப் பொருட்படுத்தாது போல் எடுத்து பின்னால் சாமிக்குப் போட்டுவிட்டு விட்ட இடத்தில் இருந்து பாட்டைத் துவக்கினாள். வள்ளியின் கண்கள் மட்டும் லேடி டான்ஸரின் மார் மீதே இருந்தது. கையில் குறுவாளோ அரிவாள் மனையோ இருந்திருந்தால் ஆடிய வாக்கில் இரண்டில் ஒன்றை மட்டுமாவது இப்போதைக்கு அறுத்து எடுத்திருப்பாள். இந்த சதைப்பிண்டம் ஏன் எல்லா ஆண்களையும் அவள் பக்கமாக இழுத்துச் செல்கிறது? சற்று நேரத்திற்கு முன்பு தன்னைக் கொஞ்சிய அந்த பாழாய்ப்போன பஃபூனும் இப்போது அவளையே தான் நோட்டம் விடுகிறான். இரண்டு பேருக்கும் குறுக்கும் நெடுக்குமாக பாடியபடியே ஆடிச் சென்றாள்.  பாடல் முடியப் போகிறது. அடுத்ததாக நாரதர் வர வேண்டும். நாரதரின் அறிமுகம் முடிந்து மீண்டும் இவள் மேடைக்கு வர இன்னும் முக்கால் மணி நேரம் இருக்கிறது. நடுவில் அரை மணி நேரம் பஃபூனும் மேக்கப் ரூமில் இருப்பான். என்ன செய்யலாம்? மூளை இத்தனையையும் யோசித்துக் கொண்டிருக்க எத்தனையோ மேடைகளில் பாடிப் பாடி பழக்கப்பட்டுப் போன வாய் வெகு இயல்பாக வள்ளியாய் நடித்துக் கொண்டிருந்தது.
     சிறுநீர் கழித்துவிட்டு வந்த முத்துச்சிப்பியிடம் ஆனந்தன் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. தனது தலையை ஒழுங்கு செய்து விட்டு முகத்தில் மெதுவாக ஒப்பனையை மட்டும் துவங்கி இருந்தார். புருவம் ஸ்த்ரீபார்ட் நடிகைகளை விடவும் மிக அழகாக அவரின் முகத்தில் வளைந்திருந்தது. ஒரு கண்ணால் மேடைக்கு ஏறத் தயாராய் இருக்கும் தன்னை அவர் கவனிக்கிறாரெனத் தெரிந்து கொண்ட முத்துச் சிப்பி ஏதாவதொரு வகையில் அவரை வெறுப்பேற்ற நினைத்தான். முதலில் வள்ளிதான் மேடையில் இருந்து இறங்குவாள், இறங்கட்டும். எல்லோரும் பாடி முடித்து பஃபூனும் லேடி டான்சரும் ஆடிக் கொண்டிருக்க வள்ளி வேகமாக மேக்கப் ரூம் இறங்கி வந்தாள். படியில் நின்று கொண்டிருந்த நாரதர் அவளுக்கு சின்னதாக இறங்க வழிவிட்டு அவள் தனக்கு அருகில் வந்ததும் ஆனந்தன் பார்க்கும்படி அவளின் ஒரு முலையை மட்டும் அள்ளிப் பிடித்து கசக்கினான். அவன் கைவைக்கும் நேரத்திற்கும் வள்ளியின் கணவன் மேக்கப் ரூமிற்குள் வருவதற்கும் சரியாய் இருந்தது. அவன் ஒரு நொடி நடந்ததைப் பார்த்துவிட்டு மெதுவாக மீண்டும் வெளியேறிப் போய்விட்டான். வள்ளி முத்துச்சிப்பியை கோவமாக முறைத்துவிட்டு அவசரமாக இறங்கி வந்தாள். அவளுக்குப் பின்னாலேயே வந்த லேடி டான்ஸர் முத்துச்சிப்பி செய்த சில்மிஷத்தைப் பார்த்து சிரித்தபடியே அவனை ஏறவிட்டு ஒதுங்கி நின்று கொண்டாள். கலைமகளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வர துணியால் முகத்தை மூடிக்கொண்டாள். ஆனந்தன் அங்கு நடந்த எதையும் கவனிக்காதவனாய் முகத்தில் ரோஸ் பவுடரைத் தேய்த்துக் கொண்டிருந்தான். லேடி டான்ஸர் ஆடிக் களைத்துப் போயிருந்தாள். இறங்கி வந்தவள் ஒன்றுக்கு இரண்டாய் தேநீரை வாங்கிக் குடித்துவிட்டு களைப்பில் அப்படியே தரையில் சாய்ந்து படுத்துக் கொண்டாள். ரசிகர்கள் பூ மாலை தூவ முத்துச்சிப்பி மேடையில் தன் கணீர் குரலில் பாடிக் கொண்டிருந்தான். ஒன்று  முடிந்து இன்னொன்றென வரிசையாக பாடல்கள். பெரிய சைஸ் ஸ்பீக்கரின் வழி எதிரொலித்த அவன் குரல் ஊரில் உறங்கிக் கொண்டிருந்த நாய் பூனைகளைக் கூட எழுப்பி விட்டது. 
     அடுத்த வேஷத்திற்கு மாற்ற வேண்டிய உடைகளை கலையின் பையில் இருந்து எடுத்த அவள் கணவன், “நீ துணி மாத்திட்டு செத்த கண்ண மூடிப் படு. நான் எதுத்தாப்ல இருக்க திண்ணைல கொஞ்சம் தூங்கறேன்…” துணியைக் கொடுத்துவிட்டு கூதலுக்குப் போர்த்திக் கொள்ள அவளின் சேலையை எடுத்துக் கொண்டு சென்றான். நடிகனுக்கு முகமும் உடலும் தான் பிரதானம். பவுடர்  போடுவதற்கு முன்பாக உறக்கம் இல்லாவிட்டாலும் சில நிமிடங்கள் கண் மூடி படுக்க வேண்டும் என்பது எல்லா வாத்தியார்களும் தங்களின் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பாலபாடம். கலை வெறும் ஜாக்கெட்டின் மேல் துண்டை மட்டும் போட்டுக் கொண்டு அப்படியே ஒரு ஓரமாய் சாய்ந்து படுத்தாள். பஃபூன் சூர்யாவின் கண்கள் லேடி டான்ஸரையே மேய்ந்து கொண்டிருந்தன. அவள் கால் மாட்டில் உட்கார்ந்து இருந்தவன் இடமில்லாமல் சாய்ந்து படுப்பது போல் அவளுக்கு நெருக்கமாகப் படுத்தான். அவ்வளவு ஆடிக் களைத்தும் முறுக்கிக் கொண்ட உடலில் இருந்து நரம்புகள் கிளைவிட்டுப் படர்ந்தன. உடலின் வினோத கண்களின் வழி அருகில் இருந்தவளின் உடலை உறிஞ்ச நினைத்தவனை எரிச்சலோடு எதிரில் இருந்து கலை பார்த்துக் கொண்டிருந்தாள்.   கொஞ்சம் வசதியாக கை கால்களை நீட்டிப் படுத்துக் கொள்ள நினைத்த லேடி டான்ஸர் கால்மாட்டில் இவன் படுத்திருப்பதில் அசெளகரியம் கொண்டாள். “ஏலே எதுக்கு இப்பிடி ஒரசிக்கிட்டு படுத்திருக்க இன்னும் மூணு நாளைக்கு ஒன்னும் நொட்ட முடியாது என் புருஷனே வீட்ல கோமணத்தக் கைல புடிச்சுக்கிட்டுத்தான் படுத்திருக்கான் இப்போ நீ வந்துட்ட. போ போயி வேற இடத்துல படு.” சூர்யாவுக்கு சப்பென்று ஆகிவிட்டது. நல்ல வேளை மேக்கப் ரூமில் அவர்கள் இருவரோடு சேர்த்து கலை மட்டுந்தான் அப்போதைக்கு இருந்தாள். ராஜபார்ட் பீடி குடிப்பதற்காக வெளியில் போயிருக்க வேண்டும். சூர்யாவும் மெதுவாக எழுந்து கொண்டு சிறுநீர் கழிக்க வெளியே வருவது போல் வந்து நின்றான். மேடையில் வள்ளியின் முரட்டு அழகைக் கேள்விப்பட்ட நாரதன் “வந்திருப்பதோ நாரத முனி, தேடி வந்ததோ வள்ளி எனும் கனி…” எதுகை மோனையில் வள்ளியைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தான். இன்னும் சில நிமிடங்களில் பஃபூன் மேடைக்குப் போக வேண்டும். பஃபூனும் நாரதரும் தர்க்கமும் பாட்டும் முடிந்த பின்பாகத்தான் வள்ளி வருவாள்.
     நாடகம் இப்போதெல்லாம் பழைய நாடகமாய் இல்லை. அரிச்சந்திரனையும் சத்தியவான் சாவித்திரியையும் மட்டும் கொஞ்சம் கொலை செய்யாமல்  வைத்திருக்கிறார்கள். வள்ளி திருமணம் குறவன் குறத்தி ஆட்டம் மாதிரியாகிவிட்டது. ஆல் ரவுண்ட் வாசித்த சீனிக்கு ஓய்வு நேரம். இன்றைய நாடகம் அவர் பிடித்தது தான். செலவு போக ஐந்தாயிரம் அவருக்கு நிற்குமென்பதால் உற்சாக மிகுதியில் பதினோறு மணிக்கெல்லாம் அரை பாட்டில் மேன்ஸன் ஹவுஸ் உள்ளே போயிருந்தது. சீனிக்கு கலை செல்லப் பிள்ளை. அவள் வந்ததில் இருந்தே வாட்டமாக இருப்பதைக் கவனித்திருந்த சீனி, மேக்கப் ரூமில் அவளுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் கேட்ட எதற்கும் மழுப்பலாகவே கலை பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். “கிறுக்குக் கழுத எதுண்டாலும் சொல்லு. உன் வீட்டுக்காரன் கூட எதுவும் சண்டையா?” சுற்றி சுற்றி ஒரே கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்த சீனியை எரிச்சலோடு பார்த்த கலை “ஒன்னுமில்லண்ணே நீ எந்திரிச்சுப் போ…” என  துரத்தினாள். அவள் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த சூர்யா, சீனியைப் பார்த்து சிநேகமாய்ப் புன்னகைத்தான். சீனி தேநீர் கப்பை எடுத்துக் கொண்டு வெளியில் வர, சூர்யா அவளுக்கு அருகில் போய் உட்கார்ந்தான். வெளியில் போயிருந்த ராஜபார்ட் திரும்பி வந்து இருவரிடமும் பொதுவாகச் சொல்வது போல் “இன்னைக்கு நல்ல கூதலப்பா?” சொன்னார். சூர்யா ஆமாம் என தலையாட்டியபடியே கலை தன் ஜாக்கெட்டின் மீது போர்த்தி இருந்த துண்டை எடுத்து உடலை சுற்றிக் கொண்டான். அவள் வெறுமனே அவனை முறைத்தாள். அத்தனைக் கூதலிலும் அவளின் மாருக்கு நடுவில் வியர்த்துப் பூத்திருந்த வியர்வைத் துளிகளைப் பார்த்த சூர்யா துண்டால் அதைத் துடைத்துவிட்டான். ”நீங்க துணி மாத்தலையா? நாரதரோட தர்க்கத்துக்குப் போகனும்ல…” வசதியாக சாய்ந்து உட்கார்ந்தபடி கலை கேட்டாள். சூர்யா தன் உடைகள் இருக்கும் கருப்பு நிற பேக்கில் இருந்து பள பளவென நீல நிற உடை ஒன்றை எடுத்தான். துண்டை அவளிடமே கொடுத்துவிட்டு சேலை மறைப்பிற்குப் போனவன் இவளைத் திரும்பிப் பார்த்தான். கலை குறுங்கத்தியென வளைந்த ராஜபார்ட்டின் புருவத்தைப் பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். ” அண்ணே, உனக்கு மட்டும் எப்பிடி புருவம் இம்புட்டு அழகா வளையிது எனக்கு என் புருவத்த கொஞ்சம் தீட்டி விடுறியா?...” சூர்யா கலை தன் பக்கமாகத் திரும்புவாள் என காத்திருந்தான். அவன் நிற்பதைப் பார்த்துப் புரிந்து கொண்ட ராஜபார்ட் “ஏத்தா பஃபூனு மேடைக்குப் போகனும்ல அவனுக்குத் துணி மாத்த போயி ஒத்தாச பண்ணு வந்து புருவம் வரையலாம்…” கலைக்கு சிரிப்பு வந்தது, காட்டிக் கொள்ளாமல் முகத்தை மட்டும் விருப்பமில்லாதவள் போல் வைத்துக் கொண்டு சூர்யாவுக்குப் பின்னால் போனாள்.
     கொட்டகையில் முன்பு போடப்பட்டிருந்த துளை இப்பொழுது சின்னதொரு கிணற்றின் அளவிற்கு பெரிதாகி இருந்தது. சூர்யா தான் அணிந்திருந்த வேஷ்டியை உருவி அதை மறைத்துப் போட்டான். முற்றிய அவன் வாழைக்காய் உள்ளாடையைக் கிழிக்கத் துடித்து அந்த அரை வெளிச்சத்தில் துடித்துக் கொண்டிருந்தைப் பார்த்து கலை சின்னதாக அச்சம் கொண்டாள். அவளின் அனுமதிக்கோ முத்தங்களுக்கோ காத்திருக்காத சூர்யா கொட்டகையைப் பிடித்துக் கொண்டபடி அவளை சாய்த்தான். அவன் முகத்தில் இதுவரையில் இல்லாத வினோத மூர்க்கம். இவளின் நீண்ட பாவாடையைத் தூக்கிப் பிடித்துக் கொள்ள முடியாதவனாய் அவசர அவசரமாய் உருவினான். ”மெதுவாங்க ஏன் இப்பிடி அவசரப்படறீங்க இப்போ இல்லைன்னா என்ன? காலைல கூட பாத்துக்கலாம்…” கலை அச்சத்தில் உளறினாள். “வாய மூடிட்டுப் பேசாம குனி சும்மா இருந்தவன நீதான நோண்டி விட்ட இப்ப என்ன மழுப்பற?” அவசரமாக அவள் மீது சாய்ந்து இயங்கத் துவங்கினான். நீண்ட நேரமாய் ஆடிய களைப்பில் தளர்ந்து போயிருந்த அவள் கால்கள் இப்பொழுது மூர்க்கமான ஒரு காளையின் தாக்குதலில் நிற்க முடியாமல் தடுமாறின.
நம்பி ராஜனே உன் புத்திரி, சகலமும் கற்றுத் தேர்ந்த கன்னிகை. அச்சம், மடம், ஞானம் எனும் பெண்களுக்கான சகல குணங்களையும் கொண்டவள், சர்வ லட்சணங்கள் பொருந்தியவள், சர்வாம்சம் பொருந்திய கற்பின் கனலை, வேடர் குல இளவரசியை முருகனுக்கே மணம் முடிக்க வேண்டுமென நாரதர் நம்பிராஜனிடம் கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் வள்ளி தன் மீது இயங்கும் கொடூர பூதத்திடமிருந்து இப்போது தப்பித்தால் போதுமென்கிற அவஸ்தையில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். தன் கணவனை விடவும் இவன் மெலிந்தவன், ஆனாலும் எப்படி இத்தனை மூர்க்கமானவனாய் இருக்கிறான். அருகில் நின்றால் அவளை விடவும் இரண்டு இஞ்ச் அவன் உயரமும் குறைவு, வேட்டையில் அகப்பட்ட மானைக் குதறும் மூர்க்கத்துடன் அவளை குதறிக் கொண்டிருந்தான். 
நம்பிராஜன் தன் பங்கிற்கு தன் மகளின் அருமை பெருமைகளை எல்லாம் சொல்லி இறுதி முடிவு எப்போதும் அவளே எடுப்பாளென அனுப்பி வைத்தார். ’நான் தான் இப்போது முடிவு எடுக்க வேண்டும்? பல மேடைகளில் எடுத்த முடிவில் என்ன சுவாரஸ்யம்? ஒருநாளைக்கு பஃபூனுக்கு மாலையிட்டுவிட்டால் என்ன? ச்சேச்சே சோறு போடுகிற தொழிலுக்குத் துரோகம் நினைக்கக் கூடாது.’ கலைக்கு மூச்சு வாங்கியது. சூர்யா பிடிமானத்திற்காக அவளது இடையைப் பிடித்து அழுத்தி இருந்ததில் அந்த இடம் சிவந்து ரத்தமாகி இருந்தது. ’சனியன் பிடிச்சவனே எப்படா முடிப்ப?’ நொடிக்கொருதரம் திரும்பித் திரும்பி அவனைப் பார்த்துக் கொண்டாள்.  மேடையில் இருந்து நடிகர்கள் ஒப்பனை மற்றும் ஓய்வுக்காக வந்துவிட பின்பாட்டுக்காரர்கள் மட்டும் பாடிக் கொண்டிருந்தனர். பகல் நேர உடல் வெக்கை உடலெங்கும் ஊர்ந்து செய்த தொந்தரவு அவ்வளவும் நீங்க, சூர்யா வெக்கையின் கடைசித்துளி வரை கலையின் உடலுக்குள் இறக்கி வைக்கும் மூர்க்கத்துடன் அசைந்து ஓய்ந்து அவள் மீது சாய்ந்து கொண்டான். குறுக்கு வலியுடன் எழுந்து நிற்க முடியாத கலையை வாரி அணைத்து முத்தமிட்டவன் “நாளைக்கே போயி காலண்டர்ல இந்த வருச நாடகத் தேதி எல்லாத்தையும் பாக்கறேன் முடிஞ்ச வரைக்கும் ரெண்டு பேர் நாடகமும் ஒன்னா இருக்கற மாதிரி சங்கத்துல சொல்லி தேதி மாத்திப் போட்டுக்குவோம்…” களைப்பு நீங்கி கலை சிரித்தாள். அவளின் தொடையிலிருந்து பாதம் நோக்கி வழிந்த சுடுநீரை சூர்யா தன் வேஷ்டியாலேயே துடைத்துவிட்டான். அத்தனை களைப்பிலும் வியர்வையிலும் கூட அழகுப் பதுமையாய் வீற்றிருந்தவளைப் பார்க்கையில் வள்ளிக்கு இவளை விடவும் பொருத்தமாய் ஒருத்தி இருந்துவிட முடியாது எனத் தோன்றியது.
     முத்துச்சிப்பி மேடையில் இருந்து இறங்கும் நேரத்தில் சூர்யாவும் கலையும் சேலை மறைப்பிற்குப் பின்னால் இருந்து வந்தனர். கலை நடக்க முடியாமல் கால்களை அகட்டி வந்து கொண்டிருந்தாள். எதுவுமே நடக்காததுபோல் மேக்கப் போட்டுக் கொண்டிருந்த ஆனந்தன் “ஏலே சூர்யா, உன் ஃபோன் ரெண்டு தடவ அடிச்சுச்சுடா உன் வீட்டுக்காரியாத்தான் இருக்கும் கூப்ட்டு என்னனு கேளு…” சூர்யாவின் கைகளில் ஃபோனைக் கொடுத்துவிட்டு சிரித்தார். சூர்யா அதைப் பொருட்படுத்தவில்லை. புருவத்தை சரிசெய்துவிட்டு வேகமாக மேடையேறினான். கோமாளியின் உற்சாகமான இரட்டை அர்த்தப் பாடல்கள் மீண்டும் துவங்க, மேக்கப் ரூமில் இருந்து லேடி டான்சரும் மேடையேறி வந்தாள். இருவரும் பாடிக் கொண்டிருக்க முத்துச்சிப்பி அவசரமாய்த் தேநீரைக் குடித்தான். வேறு யாரையும் திரும்பிப் பார்க்க விருப்பமில்லை. சீனியும் மேடையேற வேண்டும். முத்துச்சிப்பி சீனியை இடைமறித்து
சீனி அண்ணே விடிகாலைல நான் இங்க இருந்து காரைக்குடி போயிருவேன். நாளைக்கு தொண்டியில நாடகம், துட்ட இப்பயே குடுத்துடறியா?...” பதட்டத்தோடு கேட்டான்.
சீனி அத்தனை போதையிலும் சரியாக எண்ணி அவன் பணத்தைக் கொடுத்தார். நாடகத்திற்கு நல்ல நாரதர் கிடைப்பது சாதாரண விசயம் அல்ல. வள்ளி திருமணத்தில் அதிகமான சம்பளம் பஃபூனுக்கும், நாரதருக்கும் தான். அதற்கடுத்து வள்ளி. முருகனாக நடிப்பவருக்கு வேலை குறைவு என்பதால் சம்பளமும் குறைவுதான். பணத்தை வாங்கிக் கொண்ட முத்துச்சிப்பி தன் உள்ளாடைக்குள் ஒளித்து வைத்தபோது ஆனந்தனின் கண்கள் சில நொடிகள் தானாகவே பார்த்துவிட்டுத் திரும்பின.
நாரதரோடு பஃபூன் வம்பிழுக்கும் நேரம். ஊர்க்காரர்கள் உற்சாகமாய்க் கூடி இருந்தனர். பாட்டில் முத்துச்சிப்பிக்குக் கொஞ்சமும் குறைந்தவன் அல்ல சூர்யா. நாலரை கட்டையில் பாடும்போது சமயங்களில் ராஜபார்ட் நடிகர்களுக்கே விழி பிதுங்கிவிடும். சூர்யா அனாயசமாய்ப் பாடுவான். நாட்டுப்புறத்தானாக பஃபூன், படித்த மேதையாக நாரதர். இருவரின் சந்திப்பு. சூர்யாவின் உடல் உற்சாகத்தில் கொப்பளித்துக் கொண்டிருந்ததால் கால்கள் ஒரு இடத்தில் நிற்காமல் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தது. முத்துச்சிப்பியின் வினோத தொப்பையை சுற்றி சுற்றி வந்து நக்கலாக அவன் பார்க்க ஊர்க்கார்கள் அடிவயிறு வலிக்கச் சிரித்தனர்.
ஆமா உன் பேரென்ன?”
சாப்ட்டேன்…”
யோவ் பேரென்னன்னு கேட்டா நீ என்ன சொல்ற? பேரென்ன?”
அதேன் சாப்ட்டேன்…”
யோவ் நீ சாப்ட்டா என்னா சாப்டாட்டி எனக்கென்ன? பேரன்னன்னு சொல்லுய்யா?”
சும்மா ஒரு பேச்சுக்கு.”
என்னய்யா சும்மா ஒரு பேச்சுக்கு வந்தியான்னா வந்தேன் போனியான்னா போனேன் சாப்டியான்னா சாப்ட்டேன் இப்போ சொல்லு உன் பேரென்ன?”
நாரதன் சிரித்தான்
வந்தியான்னா வந்தேன் போனியான்னா போனேன் சாப்ட்டியான்னா சாப்ட்டேன்…” உடலை அசைக்காமல் சொன்னான். பஃபூன் தலையில் கை வைத்தபடியே உட்கார்ந்தான்.
தடித்தாயோளி நடுராத்திரில திங்கிறதுக்கு அலையிறானே…”
பஃபூன் சொல்லச் சொல்ல ஊர்க்காரர்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. மேடையில் வந்து நின்னதும் கேக்கும் முதல் கேள்வியில் துவங்குகிறது இரண்டு நடிகர்களுக்கான அன்றைய தினம். பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு வெறும் தர்க்கமாகத் தெரிந்தாலும் நடிப்பவனுக்கு அப்படி இல்லை.  தெரிந்த எல்லா சூட்சுமங்களின் வழியாகவும் எதிராளியை மடக்கி மண்டியிட வைத்து தோற்றுப்போக வைக்க வேண்டும். நாரதனின் முதல் பதிலிலேயே அவனிடம் இருக்கும் கோவத்தை சூர்யா புரிந்து கொண்டான். கலைமகளின் பொருட்டு வந்திருக்கலாம். ஆனால் தன்னை மடக்கும் அளவிற்கு முத்துச்சிப்பி அனுபவசாலியோ திறமைசாலியோ இல்லை என்பது நன்றாகவே தெரியும். முடிந்தவரை தர்க்கத்தைக் குறைத்துக் கொண்டு அவனை பாட வைக்க வேண்டுமென நினைத்துக் கொண்டான். நாலு கட்டைக்கு மேல் போனால் அவன் குரல் பிசிறடிக்கும். மூன்றாவது பாட்டில் அவனே மடங்கிவிடுவான். அதனால் துவக்கத்திலேயே சூர்யா ஹை பிட்ச் பாடல்களாக பாடத் துவங்கினான். முத்துச்சிப்பிக்கு சூர்யாவின் இந்தத் தாக்குதல் எதிர்பாராதது என்பதால் இன்றைய தினம் அவனிடம் சரண் அடைவதே உசிதமென நினைத்துக் கொண்டான். பஃபூன் நாரதரின் எல்லாக் கேள்விகளுக்கும் முட்டாளாகவே பதில் சொல்லி  சாமர்த்யமாய் கைதட்டல்களை அள்ளிக்கொண்டிருந்தான்.
     கலை அடுத்து மேடையேறத் தயாராகிக் கொண்டிருந்தாள். அணிய முடியாதளவிற்கு ஈரமாகிப் போன உள்ளாடையை பையில் வைத்துவிட்டு மாற்று உள்ளாடை இல்லாமல் தவித்தவள் மேடையில் இரண்டு பேரின் வசனங்களையும் கேட்டு சிரித்துக்கொண்டு லேடி டான்ஸரின் பேக்கில் அவளின் உள்ளாடை எதுவும் இருக்கிறதாவெனத் தேடினாள். முயற்சி வீண் போகவில்லை. அழுக்கேறி பழையதாகிப்போன ஒரு துணி கிடைக்க எடுத்துக் கொண்டு போய் மாற்றி வந்த பின்பாகத்தான் ஆசுவாசமாய் இருந்தது. மேடையில் நாரதருக்கும் பஃபூனுக்கும் மல்லுக்கட்டு நடப்பதைப் புரிந்து கொண்ட லேடி டான்ஸர் நாரதரை கும்கி யானையாக்கி “பார்கே மாணிக்கம் பார்கே மாணிக்கம்…” என உற்சாகப் படுத்தினாள்.
பாத்தும்மா, கும்கி யானை உன் குண்டில முட்டிடப் போகுது.” என சூர்யா போகிற போக்கில் கொம்பன் யானையைப் போல் ஓடிவந்து இருவரையும் முட்ட வந்தான்.
யோவ் பப்ஃபூனு நாரத முனி சாஸ்திரமெல்லாம் பேசறாரே உலக அறிவு இருக்கான்னு கொஞ்சம் செக் பண்ணு…”
 பஃபூன் நாரதரைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு
ஏய் பாவம்டி இந்த வண்டி மாட்டுல ரொம்பவும் பாரம் ஏத்துனா பாதி வழில கவுந்துடும்…”
அதெல்லாம் தாங்கும் கேளு.” அவளுக்கு விளையாட்டுப் பிடித்துப் போனதால் இன்னும் கொஞ்ச நேரம் நீட்டிக்க நினைத்தாள்.
செரி ஆசப்பட்டுட்ட, கேப்போம்கேக்கவா?...” பஃபூன் முதலில் நாரதரிடம் கேட்டுவிட்டு பிறகு டான்ஸரிடம் கேட்டுவிட்டுத் திரும்பி பக்கவாத்தியம் எல்லோரிடமும் கேட்டான். எல்லோரும் கேளு என்றார்கள்.
பொம்பளப் புள்ளைக கிட்ட மாசத்துல மூணு நாளு தீட்டுத் தீட்டுங்கறாய்ங்களே அப்பிடின்னா என்னா?”
நாரதர் பதில் சொல்ல வேண்டிய கேள்வியா இது? முத்துச்சிப்பிக்கு வியர்த்தது. இவனை என்ன செய்யலாம்? தெரிந்த பதில்தான் ஆனால் நாரதர் வாயால் சொன்னால் நாறிவிடும்
யோவ் நாரதர் கிட்ட கேக்கற கேள்வியா இது? நாரதன் யார்? பாட்டுக்கு அரசன், சொல்லின் வேந்தன், கலைவாணியின் மகன் அறிவுப்பூர்வமா கேளுய்யா…”
பஃபூன் எல்லோரையும் நக்கலாகப் பார்த்துக் கொண்டே அங்கும் இங்குமாக நடந்தான்.
இதுக்குத்தான்யா கேக்க மாட்டேன்னு சொன்னேன் இப்ப நம்ம டான்ஸர் பிள்ள கிட்ட கேட்டன்னா கரெக்டா சொல்லிடும். எத்தா நீ சொல்லு.  தீட்டுன்னா என்ன?”
தான் விரித்த வலையில் தானே விழுந்துவிட்டோம் என்பது புரிய டான்ஸர் சிரித்தபடியே ”அன்னைக்குத்தான்யா பூட்டு ஓப்பன் ஆகும்…”
என சமாளித்தாள். பஃபூனோடு ஊர்க்காரர்களும் சிரிக்க, பஃபூன் அத்தோடு நிறுத்தவில்லை, “இன்னைக்கு புள்ளைக்கு பூட்டு ஓப்பன் ஆகி இருக்கு அதான் கரெக்டா சொல்லி இருக்கு…” என அடுத்த வார்த்தைகளையும் தூக்கிப் போட்டான். நல்ல வேளையாக பெட்டிக்காரர் வள்ளியின் வருகையை உணர்த்தும்படியான பாடல் ஒன்றை எடுத்துவிட்டார். வள்ளி மேடையேறத் தயாராய் இருந்தாள். கலையின் புருஷன் தூக்கம் கலைந்து மேடைக்கு இடது பக்கமாய் வந்து நின்றான். வள்ளிக்கும் நாரதருக்கும் தர்க்கம் ஞானத்தில் யார் பெரியாள்? வாதத்தில் ஜெயித்து வள்ளியை முருகனுக்கு மணம் முடித்து வைப்பது நாரதனின் கடமை. ஆனால் வள்ளியை ஜெயிப்பது அத்தனை எளிதல்ல. அதிலும் கலை மகளை ஜெயிப்பது குதிரைக் கொம்புதான். கலைமகளுக்கு லேடி டான்ஸரின் உள்ளாடை கொஞ்சம் லூசாக இருந்ததால் பாவாடையை முடிந்தவரை இறுக்கமாகக் கட்டியிருந்தாள். அவிழ்ந்து விழுந்துவிடுமோ என்கிற தயக்கம் வேறு. விடியும் வரை சமாளித்துதான் ஆக வேண்டும்.
முத்துச்சிப்பிக்கு இப்பொழுது வள்ளியை வீழ்த்தும் நோக்கமில்லை, ஆனால் கலை மகளை வீழ்த்த வேண்டும். குறைந்த பட்சம் அவளை சீண்டி அவமானப்படுத்தினால் கூடப் போதும். மேடையில் தனது எதிரில் ஜொலித்துக் கொண்டிருந்த கலைமகளின் அழகு சூர்யாவின் ஆண்மை குடித்த தாவரமாகவே இவனுக்கு காட்சியளித்தது. அரிதாரம் போட்டவள் அரைக்கடவுள், அவசரப்பட்டு அந்த வேஷத்தில் இருப்பவளை கெட்ட வார்த்தையில் திட்டிவிடக் கூடாதென சிரமப்பட்டு வாயை அடக்கிக் கொண்டான். வள்ளிக்கும் நாரதருக்கும் தர்க்கம் துவங்கியது. கலை அவனை யோசிக்கவே விடவில்லை. அவளின் கேள்விகளை எதிர் கொள்ள முடியாமல் திணறிப்போன முத்துச்சிப்பி இன்று தனக்கு நேரம் சரியில்லையென நொந்து கொண்டான். வேக வேகமாய் அவர்களின் தர்க்கம் முடிந்து முருகனின் அறிமுகக் காட்சிக்கு வழிவிட்டு அவன் இறங்கிப் போனான். வள்ளி தன் தோழியோடு கடைசியாக ஆடிப் பாடிக்கொண்டிருந்தாள்.
கையில் இருந்த வீணை, சப்ளாக்கட்டை எல்லாவற்றையும் கீழே வைத்துவிட்டு முத்துச்சிப்பி அவசரமாக வாளியில் தண்ணீர் எடுத்துக் கொண்டு மேடைக்கு சற்றுத் தள்ளி இருந்த காட்டிற்குள் ஒதுங்கினான். ஆனந்தனுக்குப் பார்க்கப் பாவமாய் இருந்தது. ஒரே நாளில் எத்தனை பேரிடம் தான் உதை படுவான்? எழுந்து வெளியில் வந்தவர் கலை மகளின் புருஷனைக் கூப்பிட்டு சோடா வாங்கி வரச்சொன்னார். ஊர்க்காரர்கள் பாதி தூக்கத்தில் சாய்ந்திருந்தனர். சோடா வந்த பின்னும் கூட  முத்துச்சிப்பி வந்திருக்கவில்லை. கையில் சோடாவோடு காட்டுக்குள் போக இவருக்கு சங்கடமாக இருந்தாலும், என்ன ஆச்சோ பாவம் என பதட்டத்தோடு காட்டுக்குள் நடந்தார் ”எலே முத்து முத்து.” அவர் குரல் இருள் நிரம்பிய காட்டின் மேல் சத்தமாய் எதிரொலித்தது. முத்துச்சிப்பி எரிச்சலானான்.
தாயோளி இருக்கற தொல்ல பத்தாதுன்னு, இவந் தொல்ல வேற.” முனகியபடியே “என்னண்ணே?” என பதில் குரல் கொடுத்தான்.
என்னய்யா வயிறு சரியில்லையா முடிச்சிட்டு வா சோடா வாங்கியாந்துருக்கேன்…” சொல்லியபடியே அவன் சத்தம் வந்த திசையில் நடந்தார்.
அதெல்லாம் ஒன்னுமில்லண்ணே, இந்தா வந்திர்றேன்…” முத்துச்சிப்பியின் வாய் மட்டும் சொல்லிக் கொண்டிருக்க அவன் கை ஆவேசமாய் குறியை உருவிக் கொண்டிருந்தது. அவன் பேசுவதில் இருந்தே அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட ஆனந்தன் வேகமாய் எட்டு வைத்து நடந்தார். இருளில் இவரின் அசைவைப் பார்த்ததும் சடாரென எழுந்த முத்துச்சிப்பி வெறுப்போடு கையைக் கழுவினான். கசங்கிய வேஷ்டிக்குள் இன்னும் அடங்காமல் துடித்துக் கொண்டிருந்த குறியைப் பார்க்க  பரிதாபமாய் இருந்தது. அவன் கண்களைப் பார்த்தபடி அவன் உடலை உரிமையுடன் வருடினார். அவனுக்கு இவரின் மீது ஆத்திரம் கொப்பளித்தாலும் கலை மகளின் உடலுக்கும் இவர் உடலுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை என நினைத்துக்கொண்டு வேகமாக அவரை தன் கால்களுக்குக் கீழ் உட்கார வைத்துக் கொண்டான். புன்னகையோடு உட்கார்ந்த ஆனந்தனின் கையில் இருந்த சோடாவை வாங்கிக் குடித்தபடியே இருளில் அவரின் உருவத்தைப் பார்க்கும் விருப்பமின்றி அவன் வேறு திசையில் பார்த்தான். ஆனந்தனுக்கு அவன் உடலின் சூட்சுமம் தெரியும். அவன் நரம்புகளோடு அந்தரங்கமாக அவரின் நா பேசி விளையாடியதும் கொஞ்சம் கொஞ்சமாய் அவனுக்கும் இவரின் மீது நேசம் சுரந்தது. ‘இந்த மனிதன் தன்னை எத்தனை நேசிக்கிறான்?’ எனப் பரவசத்தில் அவரை அணைத்துக் கொண்டான். தன்னைவிட சில வருடங்கள் முதிர்ந்த  பெண்ணோடு உறவு கொள்ளும் உற்சாகத்தில் அவரோடு உறவு கொண்டவனுக்கு அந்த நாள் தன் வாழ்வில் மகத்தானதொரு நாளெனப்பட்டது.
     பின் பாட்டுக்காரர்கள் பாதி சினிமாப்பாட்டையும், பாதி நாடகத்தின் பாடல்களையுமாய்ப் பாடிக் கொண்டிருக்க தூங்கிக் கொண்டிருந்த கூட்டத்தை எழுப்ப ராஜபார்ட் ஆனந்தன் உற்சாகமாய்த் தயாராகி இருந்தார். வேஷம் ஆகப் பொருத்தம். சின்னப் பிசிறு கூட இல்லை. கலை மலைத்துப் போய் அவரைப் பார்த்துவிட்டு தன் புருவ மை எடுத்து அவருக்கு காதின் ஒரு ஓரத்தில் சின்னதாய் திருஷ்டி பொட்டு வைத்துவிட்டாள். முத்துச்சிப்பி முன்னிரவின் ஆவேசங்கள் எல்லாம் அடங்கிப் போனதால் கலையைப் பார்த்து சிநேகமாய் சிரித்தான். பதிலுக்கு சிரித்தவள் அவனிடம் தேநீர் வேண்டுமெனக் கேட்டாள். டான்ஸர் பொண்ணுக்குப் பாவம் வயிற்று வலி வேறு. பாதி சூட்டுடன் தேநீர் தம்ப்ளரை வயிற்றில் வைத்து உருட்டிக் கொண்டிருந்தாள். குருதி கசிவு அதிகமாய் இருந்ததால் நாப்கின் மாற்ற வேண்டும் போலிருந்தது. தன் பையில் நாப்கினைத் தேடி எடுத்தவள் மாற்று உள்ளாடைக்காக கை விட்ட போது, கலை நெருங்கி வந்து அவள் காதில் கிசுகிசுத்தாள். டான்ஸர் சிரித்துக் கொண்டே நாப்கினை மட்டும் எடுத்துக் கொண்டாள்.
வேடன் முருகனாக  மேடையேறிய ஆனந்தன் காதல் பொங்க மானைத் தேடினார். ஒரு கையில் வில்லுடனும் ஒரு கையில் அம்புடனும் அவர் சுழன்று சுழன்று ஆட பின்பாட்டுக்காரர்களுக்கு உற்சாகமாய் இருந்தது.
சாக்கியமென்ன முனியே / கனியின் சாக்கியமென்ன முனியே
கண்ட கனியின் சாக்கியமென்ன முனியே…”
என நாரதர் கண்டு வந்த வள்ளிக் கனியின் குணங்களை அறிந்து கொள்ள அடானா ராகத்தில் அவர்  பாடியபோது உறக்கத்தில் இருந்த கூட்டம் விழித்துக் கொண்டது. பதிலுக்கு நாரதர்
கண்டேன், கனியொன்று கண்டேன் / வடிவேலனே, சிவபாலனே,
உன் பின்னிரெண்டு கரம் உண்ணுகின்ற விதம் / கண்டேன், கனியொன்று கண்டேன்
அழகிய விழி வண்ணம், மழைநிகர் குழல் வண்ணம்
உனக்கெனவே பிறந்தாள் அந்த மட அன்னம்!
கண்டேன், கனியொன்று கண்டேன்
(வள்ளியின் வடிவழகை நாரதர் சொல்லக்கேட்டு.. வேலவன் வேடனாகக் கோலம் பூண்டான்; மானைத் தேடும் பாவனையில், மங்கை வள்ளி இருக்கும் தினைப் புனத்தினுக்கு வந்து சேர்ந்தான்)
கோவில் பூசாரி தட்டில் ஆரத்தி எடுத்து வந்து முருகனுக்குக் காட்டினார். ஊர்க்காரர்கள் கொஞ்சம் பேர் கும்பிட்டார்கள். விபூதி எடுத்துக் கொண்டார்கள். ஆனந்தனுக்கு மாலை போட்டார்கள். என்றைக்குமில்லாத அற்புதமான நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பூரிப்பில் ஊர்க்காரர்கள் நடிகர்களுக்குத் தொடர்ந்து மேடையேறி வந்து அன்பளிப்புகளைக் கொடுத்தனர். நாடகம் முடிந்து ‘நாடு செழிக்க வேணும் என அவர்கள் இன்று பாடினால் நாளை பிற்பகலுக்குள் மழை நிச்சயம். அத்தனை மங்களகரம். ஊர்ப்பெரியவர்கள் இரண்டு பேர் முருகனின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க பரிபூர்ண புன்னகையும் கருணையும் நிரம்ப முருகன் அவர்களை ஆசிர்வதித்தார். 
     வள்ளி மேடையேறினாள். இவளன்றோ வேடர் அடையாளம்? வியந்த பார்த்த ஊர்க்கண்களில் நடிகர்களின் தெய்வாம்சம் கண்ட பரவசம். வேடனை எதிர்த்து நின்ற வள்ளி தன் கேள்விகளால் ஒரு பக்கம் துளைத்து எடுத்துக் கொண்டிருக்க பஃபூனும் லேடி டான்ஸரும் இடைவிடாது தங்களின் ஆட்டத்தால் இரண்டு பேரையும் வம்பிழுத்துக் கொண்டிருந்தனர். நாடகம் பார்த்துக் கொண்டிருப்பவனை விடிகாலை வரை உட்கார வைக்க இவையனைத்தும் சின்னதொரு தந்திரம்.
யார் நீ? என்ன வேணும்?
வேடன் நான் எனக்கு உடமையான மானைத் தேடி வந்தேன்…”
எந்த மான்? தேடி வந்த மான்?
மேயாத மான் – புள்ளி / மேவாத மான்
பாயும் நடையழகும், பின்னல் நடையழகும் / கண் கவரும் முகமும் இதழும் – பொன் / செங் கமலம் எனவே திகழும் - தனில்
அந்தம் மிகுந்திட வந்து பிறந்தது... மேயாத மான்...”
(அவன் சொன்ன மான், இந்தக் கன்னி மான் என்று கண்டு கொண்ட வள்ளி, சினந்தாள், சீறினாள்)
மானைத் தேடி வந்த வேடா / அடடா மூடா - சரி தான் போடா - உன்
கள்ளத்தனம் என்னவென்று கண்ணிரண்டும் காட்டுகையில்
எள்ளத்தனை கள்ளத்தனம் என்னிடம் செல்லுமோடா? - அட
மானைத் தேடி வந்த வேடா!”
(உடனே வேடனாய் இருந்த வேலன், மர வேங்கையாய் மாறி, வள்ளியைத் தொடர்ந்து வந்து..)
ஆவியே, என் ஆருயிர் சஞ்ஜீவியே, மன்மதன் என்னும்
பாவியே, மலர்க் கணைகள், தூவியே வாட்டுறான் கண்ணே!
ஆயல் ஓட்டும் பெண்ணே! - பெண்ணே! பெண்ணே!”
வள்ளி முருகனுக்கு ஸாரி சொல்லி  மறுத்துவிட்டாள். விடுவானா முருகன்
வாலிப முருகன் உடனே வயோதிகன் ஆனான்!
வள்ளி குடுத்த தினை மாவைத் தின்ற அந்தத் தாத்தாவுக்கு..)
விக்கலும் வந்ததடி – பெண்ணே / விக்கலும் வந்ததடி
(காதல்) சிக்கலில் நிற்கின்ற சுந்தரன் ஆனதால் / விக்கலும் வந்ததடி - பெண்ணே
விக்கலும் வந்ததடி!”
(வள்ளி பாத்தா, அடி ஆத்தா, இவர் பொல்லாத தாத்தா  என்று வள்ளி வெறுக்க... ஆறுமுகன், அண்ணன் ஆனைமுகனை அழைத்தார்; வள்ளி பயந்து, திருமணத்துக்கு ஒப்புக் கொண்டாள்; யானை விலகிப் போயிற்று)
ஏய்ச்சுப் புட்டேனே தாத்தா
ஏய்ச்சுப் புட்டேனே!”
(மறுபடியும் யானையை முருகன் அழைக்க, அது தும்பிக்கையால் வள்ளியைத் தூக்கிப் போட..
அவள் முருகாஆ, முருகாஆ என்று அலற,
வள்ளியை முருகன் வாங்கிக் கொண்டான், கையில் தாங்கிக் கொண்டான்;
மனம் போல் முருகனை வள்ளி மணந்து கொண்டாள்!)
வள்ளியம்மை நாதனுக்கும்  / புள்ளி மயில் வேலனுக்கும்
மங்களம், சுப மங்களம்! / மங்களம், சுப மங்களம்!


குறிப்புகள்.
    நாடக நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைக்கும் வழக்கம் இப்பொழுதும் நிறைய ஊரில் இருந்து கொண்டு இருக்கிறது. இசை நாடகம் முன்னை விடவும் அதிகமாய் இப்பொழுது அதிகமாய்ப் பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் வள்ளி திருமணத்தையே ஊர்க்கார்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனெனில் மற்ற நாடகங்கள் எல்லாம் கதை நாடகங்கள், நிறைய பொறுமை வேண்டும். ஆனால் வள்ளி திருமணத்தில் சினிமா டான்ஸ், இரட்டை அர்த்த உரையாடல்கள் என முழு பொழுதுபோக்கு வடிவமாய் மாற்றிவிட்டனர். ( சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய வடிவத்துக்கும் இதற்கும் துளியும் சம்பந்தம் இல்லை.)
    நாடக நடிகர் சங்கத்தில் நடிகர்கள் இசைக் கலைஞர்கள் என எல்லோருக்குமாய் அந்த வருடத்திற்கான காலண்டர் தொங்கும். நிகழ்ச்சிக்கு கேட்டு வரும் ஊர்க்காரர்கள் தங்களின் தேதியில் யார் யார் இருக்கிறார்கள் எனப் பார்த்து புக் பண்ணுகிறார்கள். ( கால்ஷீட்? ) பிரபலமான நடிகர்கள் என்றால் ஆறு மாதத்துக்கு முன்னாலேயே புக் பண்ன வேண்டும்.    


Comments

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.